109: அன்னைக்கடல் : 02

ஆழியை விழிகளால் அணைத்தபடியிருந்த இளநீலனின் அருகில் அவனது முதல் தனுசு பாணங்களற்றுத் தனித்திருந்தது. குழல் காற்றில் மெல்ல விசிறும் மழையில் இலைத்தழைப்புகளென ஆடின. இளஞ் செவிகளில் குண்டலங்கள் மொட்டு உலகுகளெனச் சுழன்று கொண்டிருந்தன. இடையாடையை முழங்கால் வரை உயர்த்திக் கொண்டு கால்களை ஆமைத் தலையென மண்ணுள் புதைத்தபடி எல்லையற்ற ஆகாயத்தில் ஒளிப்பதக்கமென மினுங்கிக் கொண்டிருந்த சூரியனை நோக்கிக் கொண்டிருந்தான். சூரியனை நோக்குவதில் அவன் இணையற்ற உவகை கொண்டிருப்பதை அன்னை அறிவாள். …

108: அன்னைக்கடல்

மா என்று கடல் இரைந்து அழைத்துத் திரும்பும் ஓராயிரம் ஒலிகளைப் புலரி முதல் கேட்டபடி இளமழையின் சின்னக் காலடிகள் கரைமணலில் நடப்பதை ஓய்வேயில்லாமல் திண்ணையில் சாய்ந்தபடி நோக்கியிருந்தார் நீலனின் அன்னை உமையம்மாள். ஒவ்வொரு மா வும் ஒரு மழலையின் அழைப்பு என செவிகளில் குளிர் விரல்களால் தொட்டளைய உதிருடல் போலிருந்த முதிர்தேகம் மெய்ப்புக்கொண்டு கால்களை நீட்டிக் கொண்டு அமர்ந்திருந்தாள். இளவயது முதலே நீலக்கடலை புலரியில் நோக்கியிருப்பது அவளின் வழக்கம். “அலை …

107: இளமழை விளையாட்டு : 02

சாலினியின் சிறுசெவியை முயலின் காதெனப் பற்றியபடி ஏசிக் கொண்டு அவளைத் திண்ணை நோக்கி இழுத்துச் சென்றாள் இளந்தாய். முதுபெண்டிர் சாலினிக்காகப் பரிந்து பேசினர். அவள் இளையவள். குறும்பினி அவளை விட்டுவிடு எனச் சொல்லி சாலினியின் சிணுங்கல் முகத்தை நோக்கினர். அகம் கரைப்பது போல முகம் கொண்டு சிணுங்கி அழுகை வர பிடிபட்டு அவமானம் கொண்டவள் போல அன்னையுடன் இழுபட்டுச் சென்றாள். திண்ணையில் அமர்ந்து என்ன செய்வதென அறியாது முகம் கோணி …

106: இளமழை விளையாட்டு

நீலனின் பின்னுருவைக் கண்டு அவன் உடலில் எழும் வனப்பை நோக்கிக் கொண்டே சுவடிகையின் சடசடவென வெடிக்கும் வினாக்களுக்கு தலையை அசைத்தபடி சீரான தாள அடிகளுடன் நடந்தாள் நிலவை. இளமழை அனைவரின் மீதும் தழைந்து இறங்கி ஒட்டிக்கொண்டிருந்தது. சத்தகன் நீலனுக்கு வேடிக்கை சொல்லி உரக்கச் சிரித்துக் கொண்டு உடன் சென்றான். வேறுகாடாரும் இளம் பாணனும் மருத்துவக் குடில் வாயிலில் நின்றபடி சுடர் மீனனுடன் உரையாடிக் கொண்டிருந்தனர். இளம் பாணன் நிலவையின் பின்னுருவையும் …

105: மடப்பெண்ணே : 03

“தாகத்தை அறியவும் கற்கவும் பயிலவும் மேலும் கற்று முற்றறிந்து அமையவும் இயலாதவர் விடாயை அனுபவிக்கவும் தீர்த்துக் கொள்ளவும் நீங்கவும் இயலாது. மானுடர் தங்கள் விழைவுகளின் ஊற்றுமுகங்களை கண்டடைதலே பாதையினைத் தேரும் முதல் நிகழ்வு. அடுத்து அதைச் சொல்லில் கற்க வேண்டும். மானுட விழைவுகள் அனைத்தைக் குறித்தும் சொற்களும் தத்துவங்களும் காவியங்களும் எழுந்திருக்கின்றன. அவை அறியாத கடலில் சிறுபடகில் செல்லும் தனித்த விடாய் கொண்டோருக்கான விண்மீன் வரைபடங்கள். அவற்றைக் கொண்டு ஆழியையும் …

104: மடப்பெண்ணே : 02

பெரும் புற்காட்டிடை புலி மறைவதென பொன்னனின் நோக்கிலிருந்து முத்தினி அகல விழியருகில் குவிந்து மிதக்கும் மின்மினிப் பூச்சிகளென ஒளியுவகை கொண்டு எழுந்து நெருங்கி அவனது முகம் நோக்கினாள் செழியை. எப்பொழுதும் பரபரக்கும் செழியையின் விழிகள் இப்பொழுது ஒருகணத்தை முழுதளப்பதற்கு ஒரு முழுப் புடவியை விழிகளில் கட்டி இழுப்பதைப் போல ஒவ்வொரு அணுக்கணுவிடையும் பிந்தினாள். ஒரு முழுப்புடவி காற்றைப் போல எடை கொண்டதெனவும் கல்லாலானவை எனக் கற்பனையிலும் எண்ணிக் கொண்டாள். அவனது …

103: மடப்பெண்ணே

பொன்னன் மஞ்சத்தில் சரிந்து துயிலில் ஆழ்ந்தான். அவனது இடையாடை உருவி நழுவுவதை அறிந்து எக்கல் வரச் சிரித்துச் சிரித்து அயர்ந்தான். சிலகணங்களில் இருநாவுகள் சண்டையிட்டு இருவாய்களில் ஆண்குறி நுழைந்து ஈரலிப்பில் தடித்துத் துடித்து சித்தத்தின் உச்சாணியில் மின்னல் கயிறொன்று பற்றியெரிகிறதென எண்ணி இது கனவு இது கனவு எனச் சொல்லி எழ விரும்பாமல் கரங்களை மேலே குவித்து தன் கரத்தைத் தானே பற்றிக் கொண்டான். ஆண்குறி காட்டு வெள்ளத்தில் அமிழ்வது …

102: இளமழைத் தூவல்

சுவடிகை வலக்கரத்தின் முழங்கையை இடக்கர விரல்களால் பற்றிக் கொண்டு ஒசிபவள் போல நடந்து வந்ததை தொலைவிலிருந்தே நோக்கினார் வேறுகாடார். அவள் கழுத்தில் தூங்கிய வெள்ளிப் பதக்கம் காரிருட்டில் வெள்ளி நிலவு என மினுங்கியது. மென் தூவல்கள் இமைப் பீலியளவில் வீழ்ந்து கொண்டிருந்தன. காற்றின் ஈரலிப்பு இனியதெனத் தோன்றியது. இடையில் தென்றல் சுமந்து வந்த குளிர் மலர்கள் முட்டுப்படுவதைப் போல மேனிகள் மெய்ப்புக் கொண்டன. அரசர் எழுந்த செய்தி மஞ்சத்தறைக்கு நுழைந்த …

101: அரக்கனின் காதல்

சத்தகன் தன் பெருங்கரங்களால் இளம் வீரர்களை தோள்களில் அறைந்து கொண்டு இன்சொற்கள் கூவிக்கொண்டு நலன் விசாரித்தபடி அவர்களை நோக்கி வாழ்க்கையைப் பற்றி ஓரிரு சொற்கள் சொல்லி நடந்து சென்றான். மேகங்கள் எங்கிருந்து எழுந்தவையென நோக்கி நின்ற சுடர் மீனனைக் கண்டதும் உவகை மின்னொளியென விரியும் முகத்துடன் அவனது செவிக்குண்டலங்கள் சிற்றாலய மணிகளெனக் குலுங்க மார்புகள் பெருவேங்கையினுடையதைப் போல ஒருங்கி ஒளிகொள்ள கைக்காப்புகளும் சிறிய கணையாழிகளும் சர்ப்பக் குட்டிகள் அவனில் விளையாடுகின்றன …

100: எதிராட்டக்காரி : 02

இவள் பிறிதொன்றின் தெய்வம் என அதிர்ந்தான் பொன்னன். சொல்லில் எழும் மயக்கிற்கு அப்பால் எங்கோ ஒரு தொல்முனையில் வீற்றிருக்கும் மானுடர் அறிய ஒண்ணாத மானுட தெய்வம். இவளை அறிந்தால் மானுடம் தன் முதல் கூழாங்கல்லை அழகுடன் தொட்டு நோக்கியவருக்கு அதன் அழகுமை எதனால் தோன்றியதென்ற புதிருக்கு விடை கிடைக்கும். அழகு தன்மையால் உண்டாக்குவது. நெறி விலகுபவள் புதிய இன்பங்களை மானுடருக்கு ஆற்றும் பொருட்டு எழுந்த பெருந்தெய்வம். கருணையால் அன்றி பிற …