நானொரு துயரம் நானொரு வாழ்வு: ஒரு மொழிபெயர்ப்பு
நானொரு துயரம் நானொரு வாழ்வு பழமையிலும் பழமையானது துயரம். நானே பெருந் துயரும் மாளாச் சோகமும்நானே புதுயுகத்தின் கண்ணீரும் சாம்பலும்நானே வாழ்வின் பலியும் இரக்கமும். வற்றா அனல் வெளியில் பெருமெளனம்என் இருப்பு. அலறிச் சிறைபடும் ஒவ்வொருபறவையிலும்துடிக்கும் சிறகு நானே அறையும் ஓலமும்அடங்கும் இதயமும்நானே. நானே கைகளில் விலங்கிடப்பட்டவன்நானே தெருக்களில் தனித்திழுபட்டவன்நானே கடவுளரை மன்றாடித் தீர்த்தவன் கைவிடப்பட்டவன். நானே மகா மூர்க்கனும் புனிதனும் ஆனேன்எனது சதையையே உண்டனர் பகிர்ந்தனர்நானே மரணமும் சாட்சியும் …
