எதிர்ப்பின் கொண்டாட்டம்

“The Casteless collective ” நீலம் பண்பாட்டு மையத்தினால் உருவாக்கப்பட்டுள்ள சுயாதீன இசைக்குழு. தமிழ்நாட்டில் எனக்குப் பிடித்த “குரங்கன்” சுயாதீன இசைக்குழுவின் ‘தென்மா’ தான் இந்த புதிய குழுவினதும் இசைத்தயாரிப்பைச் செய்கிறார். பா. ரஞ்சித் தனது நண்பர்களுடன் இணைந்து நிகழ்த்தும் இந்த முன்னெடுப்பு மிக முக்கியமான பண்பாட்டு அரசியல் நிகழ்வு. அரசியல் மயப்படுத்தல் தான் இந்த இசையின் ஒரே குரல். சாதியின் பெயரில் தங்களுக்கு நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கின்ற அநீதிகளின் …

இலக்கியமும் அரசியலும்

இலக்கியத்தில் நேரடி அரசியல் நிகழ்வுகளைக் கையாளுதல் உலகம் முழுவதும் ஏராளமான கலைவடிவங்கள் போர் மற்றும் போருக்குப் பிந்தைய வாழ்க்கை மற்றும் அரசியல் நிகழ்வுகளை மையப்படுத்தி எழுந்துள்ளன. குறித்த அரசியல் நிகழ்வுக்கான விவாதங்களை நிகழ்த்துதல், அல்லது சாட்சியமளித்தல் என்ற இரண்டும் தான் அதன் பிரதான இயங்குதிசைகள். இரண்டு வேறு வேறு நாவல்களையும் எழுத்தாளர்களையும் அரசியல் நிகழ்வுகளையும் கொண்டு இதன் தன்மைகளை உரையாடலாம். ஒன்று, வாசு முருகவேல் எழுதியுள்ள ஜெப்னா பேக்கரி. ‘முஸ்லிம்கள் …

இலக்கியம் எனும் இயக்கம்

இலக்கியத்தில் ஒவ்வொரு காலகட்டங்களிலும் ஒவ்வொரு மனிதர்கள் அல்லது அமைப்புகள் அந்த அந்த காலகட்டத்தின் இயங்கு விசையாக இருப்பர். 2012 ஆம் ஆண்டு நான் பள்ளிக்கூடம் படித்துக்கொண்டிருந்த காலப்பகுதியில் வேலணையூர் தாஸ் முகநூல் ஊடாக சந்திக்க முடியுமா என்று கேட்டார். நான் படித்த பள்ளிக்கூடத்திற்குப் பக்கத்தில் தான் அவரது வீடிருந்தது. பின் பல காலம் பிள்ளைகளின் படிப்பிற்காக அந்த இடத்திலேயே சுற்றிச் சுற்றி வாடகை வீடுகளில் தாங்கினார். ஒரு சித்தாயுர்வேத வைத்தியர். …

பிணமெரியும் வாசல்

புத்தூர் சந்தியைத்தாண்டி உள்ளே கலைமதி விளையாட்டுக்கழகத்தை ஒட்டியுள்ள மக்கள் மண்டபத்தின் முன்னாலுள்ள போராட்டப் பந்தலுக்கு சென்றோம். தேநீர் தந்தார்கள். ஆற வைத்துவிட்டு, அங்கிருந்த தோழர்களோடு கதைத்தோம். ”இரவு பகலாக சுழற்சி முறையில் இருக்கின்றோம். ஒரு நேரத்தில் ஐம்பது தொடக்கம் அதிகம் ஐநூறு பேர்வரை வந்து செல்வார்கள். எல்லாருக்கும் வேலை உண்டு. ஒவ்வொருவரும் ஏதோவொரு வகையில் உதவிக்கொண்டு ஒருவருக்கொருவர் ஆதரவாக நிற்பது எவ்வளவு விலை கொடுத்தும் கிடைக்கமுடியாத அனுபவம். இங்கே உள்ள …

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரம் – தேசத்தின் கோயில்

கண் விரித்தால் எங்கும் பச்சையாய்க் கிடக்கும் இயற்கையின் மண். முதுமரங்களும் ஆழமான காடுகளுமாக நிறைந்து கிடக்கும் அவ்வெளியை மனிதர்கள் தங்கள் கைகளால் உழுது விவசாய பூமியாக்கினர். நீண்ட நெடும் வயல்கள் உருவாகின. கால்நடைகள் செறிந்து மனித வாசம் வீசத் தொடங்கியது. குளங்கள் வெட்டியெடுக்கப்பட்டன. விவசாயம் தழைத்தோங்கியது. அரசு எழுச்சி பெற்றது. இன்றுள்ள வவுனியாவிற்கும் முல்லைத்தீவிற்குமான எல்லைக்கோட்டிலிருக்கும் ஒட்டுசுட்டான் இப்படித்தான் வளர்ந்தது . இற்றைக்கு ஆயிரத்து ஐநூறு வருட பழமை வாய்ந்த …

கண்ணீரில் விளக்கெரியும் தேசம்

கண்ணகி, அறச் சீற்றத்தின் படிமம். நீதி கேட்டு அரசை எரித்த பெண்ணின் கதை தான் கண்ணகியம்மனின் கதை. அவள் முல்லைத்தீவு மக்களுக்கு நெருக்கமானதொரு தெய்வம். இறுதியுத்தத்தின் பின்னர் இழந்த புத்திரருக்காகவும் மாண்ட சோதரருக்கும் கண்ணீர் விட்டு இன்றும் நூறு நூறு நாட்களாய் தெருவிலிருக்கும் ஆயிரம் ஆயிரம் தாய்மாரின் படிமம். ஏதோவொரு காலத்தில் இந்த நிலத்தில் அந்தப் பெண்ணின் கால் நடந்துதானிருக்கும். இன்று ஒரு பெரும் விடுதலைப் போராட்டம், லட்சக் கணக்கில் …

சினிமாவுக்கோர் இயக்கம்

ஒரு மக்கள் இயக்கமென்பது மக்களிடமிருந்து எழுச்சி பெற்று வருவது. ‘Chikpo Movement ‘ என்ற ஆவணப்படத்தை நிகழ் படத்தை எப்படி ஒரு இயக்கமாக மாற்றுவது என்பது தொடர்பான கலந்துரையாடலின் முதலாவது உரையாடல் பகுதியாகப் பார்த்திருந்தோம். அந்த ஆவணப்படம், ஒரு மலைப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண்கள் தமது காடுகளுக்கு எதிராக வந்த சக்திகளிடமிருந்து எப்படி தமது காடுகளைக் காத்தனர். அதனைக் காப்பதற்கு அவர்கள் எப்படி ஒரு குழுவாகத் திரண்டனர். பின்னர் எப்படி ஒரு …

ராஷ்மோன் மனநிலை

ஆம், அப்படித் தான் சொல்ல முடியும் எளிமையான ஒரு கதை. விசாரணையின் பின் அடைமழை பொழிந்து கொண்டிருக்கும் போது கைவிடப்பட்ட கோயிலின் தாழ்வாரத்தில் ஒதுங்கி நிற்கும் துறவிக்கும் கிழவனுக்கும் வழிப்போக்கன் ஒருவனுக்குமிடையில் இடம்பெறும் உரையாடலாகவே காட்சிகள் அகல்கின்றன. காட்டு வழியால் செல்லும் போது ஒரு திருடனால் தனது கணவன் தோற்கடிக்கப்பட்டு கட்டப்பட்ட பின்னர் மனைவி பாலியல் உறவுக்கு உட் படுத்தப்படுகிறாள். அதற்கான விசாரணை இடம்பெறுகிறது அதன் போது குற்றம் சாட்டப்பட்டவர், …

சுயசித்திரம் எனும் நீரில் கலங்கும் முகம்

கொஞ்சம் கொஞ்சமாக மனித முகங்கள் சலிப்பூட்டத் தொடங்கிவிட்டது என்ற எண்ணம் நீண்டகாலமாகவே மனதில் கசிந்துகொண்டிருந்தது. நிலக் காட்சிகளே மனசை ஆசுவாசப்படுத்துவதாக இருக்கிறது. எங்கும் விரியும் நிறங்களும் உலகமும் காலின் கீழேயும் கண்ணின் முன்னேயும் விரிவது தான் எஞ்சியிருக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மனித முகங்களையிட்டு அஞ்சுகிறேன். அவற்றில் உள்ள வெறுப்பும் அன்பற்ற புன்னகையும் நச்சுப் புகையை முகத்திலெறிவது போலிருக்கிறது. ஒரு சில மனிதர்களதும் குழந்தைகளின் முகங்களும் மட்டுமே முகம் என்றால் நினைவில் …

மீண்டும் ஒரு மாணவர் புரட்சி

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் நான் உயர்தரம் படித்துக்கொண்டிருந்த காலத்தில் (2012 ) ஒரு ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மாணவன் நயினாதீவுக்கு சுற்றுலாவுக்குச் சென்று விட்டு வரும் போது ஜெட்டியடியில் வைத்து வாகனத்தை திருப்பிய பொழுது கால் இடறி விழுந்து டயரில் தலை நசுங்குண்டு இறந்து போனான். இதைக் கேள்விப்பட்டவுடன் மிகவும் பரபரத்துப் போனேன். கைகால்களெல்லாம் துடிக்க சைக்கிளில் பள்ளிக்கூடத்திற்குச் சென்றேன் ஏற்கனவே இருநூறு பேருக்கு மேல் எங்கள் பிரிவு நண்பர்களும் பழையமாணவர்களும் …