காற்றில் மிதக்கும் தழும்பின் நிழல் : ஒரு உரை

ஈழத்துப் புனைவெழுத்தாளர்களில் கெளரிபாலனுக்குத் தனித்த இடமுண்டு. கதையாக்கம் என்ற அம்சத்தில் கூடுதல் கவனமும் அக்கறையும் கொண்டவர். கெளரிபாலனது சிறுகதைகளின் முழுத்தொகுப்பிற்கான வெளியீட்டின் போது நிகழ்த்திய உரை. கட்டுரை : மென்னிழைகளால் நெய்யும் பூமி

எஸ் போஸ் : ஒரு உரை

இரண்டாயிரத்தின் பின் ஈழத்தின் முதன்மையான கவிஞர்களில் ஒருவராக எழுந்த எஸ் போஸ் அல்லது சந்திரபோஸ் சுதாகர் பற்றிய புறச்சித்திரம் ஒன்றை அளிக்க ஏழு வருடங்களுக்கு முன்னர் எஸ் போசின் முழுத்தொகுதி வடலி வெளியீடாக வந்திருந்தது. அதற்கென கிளிநொச்சியில் நிகழ்த்திய உரையின் காணொலி.

கவிதை தெய்வமன்றோ

தமிழில் சொற்களுக்கு அளிக்கப்படும் உயர்ந்த மதிப்பு கவிதை. எம்மொழியையும் போல. ஆதியில் வார்த்தை இருந்தது என்பது பைபிளின் நம்பிக்கையும் கூட. அவ்வார்த்தையே தேவனோடு இருந்தது. தேவனாகவும் இருந்தது எனச் சொல்லப்படுகிறது. தமிழில் தெய்வங்களை அழைக்கும் பதிகங்கள் கவிதைகளாக இருந்த பண்பாட்டு புறச்சூழல் கவிதைகளுக்கு உண்டு. எனது கவிதைத் தொகுதியான வாழ்க்கைக்குத் திரும்புதலை என் ஆசிரியர்களென நான் வகுத்துக் கொண்ட அனைவருக்கும் அளித்து விட்டேன். அதில் முதலாவது தொகுதியை என் கையால் …

ஆதிரை : ஒரு சிற்றுரை

எட்டு வருடங்களுக்கு முதல் என்ன பேசியிருக்கிறேன் என்பதை விட பேச்சில் என்னைக் கவர்ந்த விடயங்கள் இரண்டு. ஒன்று, முன் தலையில் அலைபாயும் சிகை. இரண்டு, உரையை முடிக்கும் பொழுது அலைபாயுதே மாதவன் போல உதட்டைக் குவித்துச் சிரித்து அதுவரை சொன்னவற்றைச் சந்தேகப்படுத்தி புன்னகையால் இலக்கிய இடத்தை வகுப்பது. 😊.

கலங்கரை விளக்கின் ஒளிச்சுழல்

ஈழத்துக் கவிதைகளின் வருங்கால அடைவுகளிற்கான திசைவழியை உண்டாக்கும் புதிய குரல்களின் வருகை கடந்த இரு வருடங்களில் நிகழ்ந்து வருவதை அவதானிப்பது ஒரு கவிதை வாசகனாக என்னை நிறைவளிக்கச் செய்வது. இவ்வருடம் ஆக்காட்டி பதிப்பக வெளியீடாக கவிஞர் வசிகரனின் “நோவிலும் வாழ்வு” எனும் தலைப்பிலான முதற் தொகுதி அண்மையில் வெளியாகியிருக்கிறது. ஈழத்துக் கவிதைகளின் பிரதான செல்நெறிகளைக் கிளைத்து முறித்து அதன் வழிநடைகளை விரிவுபடுத்தும் காலமெனக் கடந்த பத்தாண்டுகளைச் சுட்டிப்பாகச் சொல்லலாம். போர் …

தன்னுரை : வாழ்க்கைக்குத் திரும்புதல்

அனைவருக்கும் வணக்கம், ஒரு மொழியின் இலக்கியத்தில் எழுதப்படும் சொற்கள் ஒவ்வொன்றும் அச் சமூகத்தின் பண்பாட்டு ஆழ்மனத்தின் நரம்புகளும் குருதியும் போன்றவை. இலக்கிய மரபின் அடிப்படையில் ஒருவர் எழுத்தில் தன்னை தொகுத்துக் கொண்டு முதலாவது நூலை முன்வைக்கும் பொழுது தன் ஆசிரியர் நிரையை முன்வைப்பது பொருத்தமானது. ஒரு எழுத்தாளருக்கு அவர் என்னவாக ஆகிறார், எதைக் கொண்டு தன் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் வகுத்துக் கொள்கிறார் என்பதன் சிந்தனைத் தொடர்ச்சியை முன்வைப்பது அவரைப் புரிந்து …

முதற் குட்டி : மொழிபெயர்ப்பு

“முதற் குட்டி” கவிதையின் சிங்கள மொழிபெயர்ப்பினை இப்னு அஸ்மத் அவர்கள் தனது முகநூலில் பகிர்ந்திருந்தார். தொடர்ச்சியான அவரது மொழிபெயர்ப்பு முயற்சிகளுக்கு வாழ்த்துகள். * පළමු පැටියා නිවසේ තිබූ සියඵ දේවලින් අම්මාව ගෙන එළියේ තැබුවෙමි අල්ලපු ගෙදරින් කාන්දු වූසාම්බ්‍රාණි දුමේ අග ඈ සිටියාය කොහේදීත් සැමවිට අතහරින්නේ නැතැයිපදිංචි වන කෙනෙකු මෙන් දහසකුත් දහස් වසරක්පළමු පැටියා ඉපදුනු දා පටන් ක්‍රිසාන්ත්සිංහලෙන් …

பாத்திரங்கள்

விரும்புபவர்களை விட வெறுப்பவர்கள்நம்மை அதிகமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்சகுனியை எண்ணிக் கொண்டே என்றான் கிருஷ்ணன் அந்த இடம் எப்பொழுதும் ஒரு முள்ளெடை மாறாது அப்படியே நிரப்பப்படும்ஒரு கனிவு கூடாமல் அப்படியே பராமரிக்கப்படும்ஒரு மாத்திரை குன்றாமல் அப்படியே நினைக்கப்படும் வெறுப்பது ஒருவகையில் விரும்புவதை விட நெருக்கமானதுமுன்னர் எப்படியோ அப்படியே நிகழ்வதால்இவை நினைப்பதை விட நிச்சயமானது நிச்சயமானவை உலகில் உள்ளவரைநாம் நம்புவதற்குக் கொஞ்சம் பிடியுண்டுநடந்து ஒளியுடன் செல்வதற்குஇருள் சூழ்ந்த பாதைகளுண்டுஒரு நாடகம் ஓயாமல் நிகழ்ந்து …

கவிதைச் சுவரொட்டி

ஓஷோவின் சொல்லுண்டு “உண்மை சந்தையிடத்துக்கு வந்தாக வேண்டும்” என்று. நான் அதை ஏற்பவன். இலக்கியமோ கலையோ அது எல்லோருக்கும் அவசியமான ஒன்று. ஒரு குறுங்குழுவின் தனிக்களியல்ல. மொத்த மானுடத்தினதும் பண்பாட்டினதும் திரண்ட அறுவடை. அதில் ஒவ்வொரு நெல்லும் ஒவ்வொருவருக்கும் அளிக்கப்படும். எனது கவிதைகள் சிலவற்றை நண்பர்கள் சுவரொட்டிகளாகச் செய்து வருகிறார்கள். அதன் முதலாவது சுவரொட்டி இது.