நோவிலும் வாழ்வு : உரைகள்
வசிகரனின் நோவிலும் வாழ்வு கவிதைத்தொகுப்பு 03.11.2024 யாழ்ப்பாணம் காலைத்தூது அழகியல் கல்லூரியில் வெளியீடு செய்யப்பட்டது. அந்த நிகழ்வின் பதிவு.
வசிகரனின் நோவிலும் வாழ்வு கவிதைத்தொகுப்பு 03.11.2024 யாழ்ப்பாணம் காலைத்தூது அழகியல் கல்லூரியில் வெளியீடு செய்யப்பட்டது. அந்த நிகழ்வின் பதிவு.
கவிஞர் வசிகரனின் முதற் கவிதைத் தொகுப்பான நோவிலும் வாழ்வு குறித்து இணைய இலக்கிய இதழான அகழில் எழுதிய குறிப்பு.
மெய்யிலேயே ஈழத்தின் முதன்மையான இலக்கிய சாதனை ஷோபா சக்தியில் நிகழ்ந்தது. தன் கதைகளைச் சற்றே நீளமான அரசியல் துண்டுப்பிரசுரங்கள் எனச் சொல்லும் தற்பகடிக் கலைஞன் ஷோபா. தமிழீழம் எனும் பெருவேட்கை நெருப்பெரிந்த காலத்தில் அதன் உளச்சான்றை நோக்கியெழுந்த முதன்மையான கலைக்குரல். அறங்களை மாபெரும் கூட்டு உணர்ச்சிகள் பலவேறாக வகைப்படுத்துகின்றன. ஒன்றில் பொருந்துவது பிறிதில் பிழைப்பது. அறங்களை ஆக்குதலும் விரித்தலும் விவாதித்தலும் மறு விசாரணை புரிவதை இலக்கியம் தான் விழைந்தோ விழைவின்றியோ …
நீலி இதழில் கவிஞரும் எழுத்தாளருமான பெருந்தேவி அவர்கள் பற்றிய சிறப்பிதழை வெளியிட்டிருக்கிறார்கள். பெருந்தேவி தமிழின் முக்கியமான கவிஞர் என்பது என் எண்ணம். அவர் குறித்து சிறப்பிதழ் வெளியாகுவது முக்கியமான பண்பாட்டுச் செயற்பாடு. வாழ்த்துகள் நீலி இதழுக்கு. https://neeli.co.in/category/%e0%ae%a8%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-2024/
அனாரின் ஐம்பதாவது அகவையை முன்னிட்டு குமாரதேவன் வாசகர் வட்டத்தினால் ஒருங்கிணைக்கப்பட இருந்த தமிழ் நிலத்துப் பாடினி எனும் நிகழ்வு நிறுத்தப்படுகிறது. நிகழ்வினை முன்னெடுப்பதில் ஏற்படும் அழுத்தங்களை கருத்தில் கொண்டு இம்முடிவு அறிவிக்கப்படுகிறது. சுபம்.
கவிஞர் வசிகரனின் முதற் கவிதைத் தொகுப்பின் அறிமுகம் இவ்வாரம் நிகழவிருக்கிறது. ஆக்காட்டி பதிப்பக வெளியீடாக தொகுப்பு வெளிவந்திருக்கிறது. நிகழ்வை கவிஞர் கருணாகரன் தலைமை கொள்கிறார். நிகழ்வில் எழுத்தாளர் சு. குணேஸ்வரன், கவிஞர் வட்டக்கச்சி வினோத் ஆகியோர் உரையாற்றுகின்றனர். * கற்பாறைகளை மோதி மோதி ஒவ்வொரு அலையும் நுரைந்தழிவது போல் மொழியைக் கவிதைகள் இளக்குகின்றன. வசிகரன் கவிதைகளுக்குள் மோதும் அலைகளின் இடைவிடாத தீவிரம் கற்பாறையில் உப்பெனப் படிகிறது. அவரின் கவியுலகில் உருக்கொள்ளும் …
விண்யாழி நிழல் விழும் நீண்ட பனைமரங்களின் காட்டு வழி நால்வருடனும் நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்தாள். கொற்றனும் ஓசையிலானும் சொல்லாடிக் கொண்டிருந்தனர். இரண்டு நாய்க்குட்டிகள் வால்குழைத்துக் கடித்து சிற்றுறுமல் உறுமி பாய்ந்து கவ்விக் கொள்வது போல இருவரும் சீறிக்கொண்டு வந்தனர். நிரதையும் திருதையும் அவர்களின் சொற்களின் பொருளின்மைகளைச் சுட்டி பெருங்குரலில் சிரித்து அவர்கள் முதுகுகளை யானைத் தோல்களென அறைந்தார்கள். கொற்றனின் இளந்தோல் கன்றி மெல்ல வீங்குமளவு நிரதை அவனை அறைந்து …
ஒருவன் எண்ணப் போவதை அக்கணத்திற்கு முன்னரே அறிபவரே தோழனும் எதிரியும் என எண்ணிக் கொண்டான் தமிழ்ச்செல்வன். அவனது நரையிழைத்த குழல் காற்றின் துள்ளலில் நலுங்கிக் கொண்டிருந்தது. காவற் கோபுரத்திலிருந்து மீண்டு தன் ஊன்றுகோல் கற்தரையில் எழுப்பும் ஒலியை ஊழ்க நுண்சொல்லென எண்ணியபடி நடந்து சென்று சொல்லவையில் அமர்ந்து தனித்திருந்தான். சாளரத்தால் மென்சாம்பல் வெளிச்சம் சொல்லவைக்குள் நிறைந்திருந்தது. கருங்கல்லாலான நிலத்தில் மிருகத் தோலாலான போர்வைகள் இடப்பட்டிருந்தன. ஆசனங்கள் வெறுமையில் அமர்ந்திருந்தன. திரைச்சீலைகளை …
கவிஞர் ஆதி பார்த்திபனின் தாயதி வெளியீடான ஒற்றைக்கோடை கவிதைத் தொகுப்பினை தற்போது கடைகளில் பெற்றுக் கொள்ளலாம். கிடைக்குமிடங்கள்:
மானுடரில் சிலருள் எரியணையாக் கலமொன்று தன்னைத் தானே அமைத்துக் கொண்டு மண் நிகழ்கிறது. வற்றாத தாகத்தின் நாக்குகளால் அம்மானுடரை அவரின் இறுதிக்கணம் வரை குன்றாத தவிப்புக் கொள்ளச் செய்கிறது. எதனாலும் எரிக்கப்படாத எதானாலும் பெருக்கப்படாத எதனாலும் அழிக்கப்படாத அது அதனாலேயே முற்றமைகிறது. அதைத் தாகநாவு என்றனர் நூலோர். நீலன் நின்றிருந்த பெருங்கணத்தில் அக்கலம் வெகுண்டெழுந்து என்னை எரியால் போர்த்துக என அறைகூவியதைக் கேட்டார் சூர்ப்பனகர். அவர் அறிவார் அக்கலம் அங்கனம் …