ஓதி எறிந்த சொற்கள்
விளிம்பின் அகமொழி மையத்திற்குள் நகர்கையில் அவை ஓதி எறியும் சொற்களெனவும் சூனியத்தின் மாந்திரீக மொழியெனவும் ஆகும். தன்னைக் கேட்பவரை ஆவாகனம் செய்து வசியத்தின் விழிகள் சொருக நிற்க வைக்கும். அம்மொழியின் உள்ளெரியும் கனலால் அடி முடியற்ற சோதியின் நூறுநூறு தீக்கொழுந்துகளை தலையில் சூடியபடி வாழ்வை ஆடுபவை என். டி. ராஜ்குமாரின் கவிதைகள். அவரது சொற்கள் அதீதமான மனப்பெருக்கின் குழை சேற்றை மிதித்தபடி தன்னைத் தானே சுட்டுக் கொள்ளும் சுடுசிற்பங்களென மொழி …
