நுதம்பும் சேறிடை மனக்கேணியில்

1980களின் பின்னர் உருவாகி வந்த பெண்ணிய அலை தமிழ் மொழியின் ஆணதிக்க அடுக்குகளை மெல்ல மெல்லக் கரைத்தபடியிருக்கிறது. அரசியல் நுண்ணுணர்வு மிக்க மொழியைப் பெண்கள் உருவாக்கியபடியே வருகிறார்கள். 1990 களின் காலகட்டத்தில் ஒளவை, சிவரமணி, ஊர்வசி, செல்வி, ஆழியாள் போன்றோர் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்துள் பெண்களின் பாத்திரம் உருக்குலைந்து போக, அதிலிருந்து மாற்றான நோக்குகளைக் கொண்ட உளவமைப்புகளையும் பிரச்சினைகளையும் எழுத்தில் முன் கொணர்ந்தனர். அவை பெரும்போக்கில் எழுந்த தேசிய …

காதலின் முன் பருவம்

யுத்தம் முடிவடைந்ததற்குப் பின்னர் அதன் சாம்பலிலும் தணலிலும் இருந்து எழுந்த முதல் தலைமுறைக் கவிஞர்கள் எதிர்கொண்டது இரண்டு வகையான அடிப்படைகளிலான வாழ்வை, ஒன்று, அவர்களது இளமைக் காலம் யுத்தத்தின் ஏதோவொரு பகுதி நினைவைக் கொண்டது. அதே நேரம் அது நடந்து கொண்டிருந்த போது அவர்கள் இளையவர்கள். போர் உக்கிரமாக நிகழ்ந்த நிலத்திற்கு வெளியில் வேறொரு வாழ்வு நிகழ்ந்து கொண்டிருந்தது. உள்ளிருந்தவர்கள் அதன் மிகுதிகளையும் இறுதியையும் ஞாபகக் கிண்ணங்களில் ஏந்தினர். மற்றையவர்கள் …

முத்துச் சரளைகளின் அறியாத கரையில்

தமிழின் நெடுங்கவிதை வரலாற்றில் ஆதி வாழ்வையும் காமத்தையும் எழுதிய பெண்களில் பெரும்பாலும் எஞ்சியிருப்பது பக்தியெனும் தன்னிலை. காரைக்காலம்மையார், ஒளவையார், ஆண்டாள் என்று தொடங்கும் கவிஞர்களின் சொல்லாழத்தை நவீன காலகட்ட அறிதல்கள் தன்னிலைகளை மாற்றியமைத்தன. பக்தியை உருமாற்றின. தானும் ஒரு நிகர் உயிரியெனும் ஆற்றல் எழுந்து வந்தது. “கொங்கை திரங்கி நரம்பெழுந்து குண்டுகண் வெண்பற்குழி வயிற்றுப் பங்கி சிவந்திரு பற்க ணீண்டு பரடுயர் நீள்கணைக் காலோர் பெண்பேய்” என்று காரைக்கால் அம்மையார் …

மூப்பதின் இனிமை

ஆயிரமாண்டுகாலம் பீப்பாயில் ஊற்றப்பட்டு, மா கடலின் கரை மணலில் தாழ்க்கப்பட்ட திராட்சையின் ஊறிய புளிப்பு, உதட்டிற் பரவ, நிறங்கள் கொட்டியவிழும் விளக்குகளின் தொடுகைகளை உணரும் தெருக்களில் அலையும் ஒரு கவிஞையின் மூப்பெய்திய மனம் கொள்ளும் உவகைகள் அந்த வைனின் ஆயிரமாண்டுகாலத் திரட்சியின் இனிப்பான கசப்பு. அது மானுட குலம் வாழ்வறிந்த இத்தனை காலமும் அலைந்து கொண்டும் மோதிக் கொண்டும் கொன்று கொண்டும் ஒன்றையொன்று அழித்தும் வாழ்வித்தும் உருமாறிய வாழ்வுகளின் அடியில் …

தெய்வங்களும் பாதாள நாகங்களும்

காதலிலும் காமத்திலும் ஆண் மனம் கொள்ளும் எதிர்நிலைகள் கவிதையில் இருமுனையும் கூர் கொண்ட மீன்முள்ளுகள் போல. அது ஒன்றினது இரு திசைகளெனவும் ஒரே உலோகத்தின் குளிரும் வெப்பமுமென ஆகுபவை. காதலும் காமமும் ஆண் மனதிற்குள் இரண்டு தனித்தனியான கதாப்பாத்திரங்களாகவே நிகழக்கூடியவை. அதற்கு அச்சமில்லை, குற்ற உணர்ச்சியில்லை, பல வேளைகளில் மானுட அடிப்படைகள் கூட இருப்பதில்லை. ஆண் காதலின் உலகம் கண்ணீரும் புனிதமும் பெருக்கெடுத்து ஓடுவதாக நிகழும் அதே வேளையில் அதன் …

விண்கற் கிராமத்தில் ஒரு நாள்

குறிப்பு: இந்தக் குறிப்பினை நண்பர் கிஷோகர் தனது முகநூலில் எழுதியிருந்தார். அதீதமான உணர்ச்சிவசப்படும் மனிதர்களில், நானறிந்த தலைமகன்களில் ஒருவர். ஆனால் ஆழமாகப் பார்த்தால் அதேயளவு வெறுப்பும் கசப்பும் சூழ்ந்த இருளில் வாழவும் நேரக்கூடியவர். அவரது ஆரம்ப காலங்களில் இருந்தே அவரது எழுத்துக்களில் வெளிப்படும் நகைச்சுவையை ரசிப்பேன். சில நேரங்களில் எரிச்சலும் ஊட்டுவார். ஆனால் அவர் எழுதிய சில குறிப்புகள் அபூர்வமான வாழ்கணங்களைக் கொண்டவை. இக் குறிப்பும் அத்தகைய ஒன்று. முகநூலில் …

அரிக்கன்லாம்புச் சூரியன்

எழுந்துவரும் புதிய எழுத்தாளர்கள் இன்று எதிர்கொள்ளும் முதன்மையான சிக்கல்களில் ஒன்று தயக்கம். ஈழத்து இலக்கியச் சூழலில் 2009 க்குப் பின்னர் எழுத வந்த முதற் தலைமுறை எழுத்தாளர்களில் பலர் தங்கள் எழுத்தால், அதன் மீதுள்ள தீராத ஆர்வத்தால் இன்று கவனிக்கப்படுபவர்களாக ஆகியிருக்கிறார்கள். தர்மு பிரசாத், அனோஜன் பாலகிருஷ்ணன், அகரமுதல்வன், யதார்த்தன், ஆதி பார்த்திபன் என்று ஒரு வரிசை உருவாகி வந்திருக்கிறது. நானும் இவர்களின் சமகாலத்தில் இலக்கியத்தில் எழுத வந்தவன். இன்று …

வெடிமணியமும் இடியன் துவக்கும்

மதிசுதாவின் வெடிமணியமும் இடியன் துவக்கும் சிறு படம் பார்த்தேன். தொடக்கத்திலே மதிசுதா ஒரு முழு நீளப்படத்திற்கு எழுதப்பட்ட திட்டமிடப்பட்ட, கதையைப் பொருளாதாரப் பிரச்சினைகளால் சிறுபடமாக எடுத்து முடித்ததாகப் போட்டிருந்தார். ‘நல்லபடம்’ எடுக்க வேண்டும் என்ற ஆர்வமுள்ளவர்களுக்கு ஈழ சினிமா கொடுக்க கூடிய முதல் நெருக்கடி, பணம். எனக்கு அதில் எப்போதும் ஆதங்கம் உண்டு. அச்சூழலை மாற்ற வேண்டும் என்பதிலும் பெருத்த உடன்பாடு உள்ளது. ஆனால் இது படத்திலே எழுதப்பட்ட ப்ரேமாக …

நீருக்கடியில் ஓடிக்கொண்டிருக்கிறது திமிங்கலம்

கவிஞர்கள் ஒரு கால கட்டத்தின் குறியீடாக மாறக்கூடிய அரிதான நிகழ்வுகள் நடக்கும், இந்திய விடுதலைப் போராட்டத்தின் ஒரு கம்பீரமான குறியீடாக பாரதியார் எப்படி மாறினாரோ, அப்படி ஈழப் போராட்டத்தின் ஏராளாமான சம்பவங்களுக்கான, குறிப்பாக சித்திரவதைகள், இயக்கங்களினுடைய அநீதி, அரசினுடைய அடக்குமுறை, சமூகத்தினுடைய புறக்கணிப்பு போன்ற எல்லாவற்றிற்கு ஊடாகவும் தொடர்ந்து பயணித்து எப்படி ஒருவன் கவிஞனாக ஆகிறான், தொடர்ந்தும் அந்த நம்பிக்கையோடு போராடுகிறான். அதனூடாக தனது வாழ்க்கையை எப்படி ஒரு குறியீடாக …