நினைவுகளின் நிழலில் ஒரு வாழ்வு – இப்ராஹிம்

“…கல்விரல் என்ற பெயரே இதனோடு அழகாகப் பொருந்துகிறது. வீட்டின் பின்னால் தோண்டி எடுக்கப்படும் அந்தப் பெரிய பாறை ஒரு சிலையின் விரல். அது பின்னர் மனிதர்கள் கூடும் இடமாகவும், துளசிக்கும் அவளுடைய அம்மாவுக்கும் மனக்குமுறல்களைச் சொல்லித் தீர்க்கும் இடமாகவும் மாறுகிறது. ஒரு பொருள் எப்படி மனிதர்களின் நினைவுகளையும் துயரங்களையும் தாங்கிக்கொள்ளும் இடமாக மாறுகிறது என்பதற்கு அது ஒரு குறியீடாகத் தெரிகிறது. ஒரு கட்டத்தில் அது அவர்களுக்குத் தெய்வமாகவும் மாறுகிறதோ என்ற …

கோட்டில் கேட்கும் சங்கீதம் – பிரிந்தா

ஈழத்தின் மூத்த காண்பிய படைப்பாளிகளின் நேர்காணல் தொடரொன்றை ‘எழுநா’வில் பிரிந்தா தொடங்கியிருக்கிறார். முதலாவதாக தா. சனாதனனின் நேர்காணலின் முதற் பகுதி வெளிவந்திருக்கிறது. ஒவ்வொரு நேர்காணலையும் அவர்களது வாழ்க்கை, அனுபவங்கள், படைப்புகள் அவை பற்றிய அவர்களின் சொந்தப் பார்வைகளென விரிவாக பதிவு செய்ய இருப்பதாக பிரிந்தா சொன்னார்.  ‘சக்கரவியூகத்தில் சிக்குண்டிருக்கும் நானும் எனது வீடும்’ என்ற சனாதனனின் நேர்காணலில் மிக விரிவாக அவரது இளமை, படைப்பு பற்றி எழுதியிருக்கிறார். புனைவெழுத்தாளர்களுக்கு இத்தகைய …

வினாத்தாள் கசிவா?

தீவிர இலக்கியப் படையில் இளம் எழுத்தாளர்களையும் வாசகர்களையும் இணைப்பதற்கான தேர்வு வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் கசிந்திருப்பதாக நண்பரொருவர் அனுப்பியிருந்தார். இந்தச் சமூகம் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை, இப்படி ஒரு பம்பாய் வெங்காயத்தை வினாத்தாளென இலக்கியத்தின் அரிவரி மாணவர் கூட எழுத மாட்டார்கள். கண்ணைத் திறந்து வைத்துக் காட்டினாலும் உலகைப் பார்க்க மாட்டேன் எனும் மடமை கொண்டிருந்தால் மாத்திரமே இப்படி ஒரு வினாத்தாளை உருவாக்க முடியும். கொஞ்சமாவது சென்சிபிலிட்டி …

இரு நாவல்கள்

யதார்த்தனின் ‘தோறை’, தர்மு பிரசாத்தின் ‘வண்ணசீறடி’ இரண்டு நாவல்களும் தற்போது இந்தியாவில் பெற்றுக் கொள்ளலாம். கிரிசாந் * “காலச்சுவடு பதிப்பகத்தால் செம்படெம்பர் மாதம் வெளியீடு செய்யப்பட்ட என்னுடைய தோறை நாவல் தற்பொழுது சென்னையில் உள்ள காலச்சுவடு நூல்களைப் பெற்றுக்கொள்ளும் இடங்களில் கிடைக்கிறது. குறித்த புத்தகக் கடைகளில் இணைய வழிகள் மூலமும் இந்திய , தமிழ்நாட்டு நண்பர்கள், வாசகர்கள் பெற்றுக்கொள்ள முடியும். இலங்கை மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான புத்தகங்கள் விரைவில் கிடைக்கும்” …

தும்பி : 93

“நான் சிறு பிள்ளையாக இருக்கும் போது என் அம்மாவுக்கு உதவியாக விறகு சேகரிக்க அருகில் இருக்கும் காட்டுக்கு போவேன். அப்போது என் அம்மா ஒரு மரத்தை காண்பித்து இந்த மரத்திலிருந்து மட்டும் எப்போதும் விறகு சேகரிக்கக் கூடாது என்று கூறியது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. “ஏன் அம்மா இந்த மரத்திலிருந்து மட்டும் விறகு எடுக்கக் கூடாது?” என்று நான் கேட்டதற்கு – “இது கடவுளின் மரம், இதை நாம் வெட்டுவதில்லை. …

பாலையில் பூப்பவை – தர்மு பிரசாத்

தர்மு பிரசாத் எழுதியிருக்கும் ‘பாலையில் பூப்பவை’ கட்டுரை முக்கியமான சில தயக்கங்களை கடந்து தொகுப்புத்தன்மையுடன் கூரிய அவதானங்களை முன் வைக்கிறது.  ரியாஸ் குரானா, இளங்கோ டிசே மற்றும் பற்றை மறைவில் அவர்களது குரல்களையொத்த கிசுகிசுப்புகளை செய்பவர்களுக்கு இவை விளங்காது. அவர்களுக்கு விளக்க நாங்கள் எழுதுவதுமில்லை. அவர்கள் முகாந்திரங்கள் மாத்திரமே என்பதை திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறோம்.  இந்தக் கட்டுரையில் தர்மு பிரசாத் ஆசிரியர் – மாணவர் உறவை, தமிழ்நாட்டுடன் ஈழத்துக்கிருக்கும் …

சி. அ. யோதிலிங்கம் : அஞ்சலி

தமிழ்த்தேசியம் சார்ந்த நெடுங்கால அறிவுப் பங்களிப்பையும் களச் செயற்பாடுகளிலும் ஈடுபட்டவர் சி. அ. யோதிலிங்கம். அவரது தமிழ்த்தேசியம் உறுதியானது. அதை அவர் முழுமையாகவே நம்பினார். இறுதி வரை அவர் தனது நிலைப்பாடுகளுக்கென உழைத்துக் கொண்டிருந்தார்.  அவரது நூல்கள், சிறு பிரசுரங்கள் அரசறிவியலின் அடிப்படைகளையும் தமிழ்த்தேசியத்தின் சமகாலம் வரையிலான தொடர்ச்சிக்கு அதன் சிந்தனைப் பங்காளிகளாக இருந்த சமூகத்தின் அரசியல் தரப்பின் கருத்துகளின் தொடர்ச்சியாகவும் இருந்தன. மு. திருநாவுக்கரசு, நிலாந்தன் போன்றவர்களின் இன்னொரு …

மயிரனைய

வணக்கம் அண்ணா இலக்கிய உலகம் பரபரப்பாக இருக்கிறது போல. முகநூலில் உங்கள் ஆசானை போட்டு பொழக்கிறார்கள். தேவதாசிகள் பற்றி அவர் சொன்னதற்கு அடிக்கிறார்கள். ஆனால் அது எனக்கு விளங்கவில்லை. காலையில் ஒரு போஸ்ட் பார்த்தேன். அதில் ஒருவர் யாரெல்லாம் ஜெயமோகன் பட்டியலில் இல்லையோ அவர்கள் எல்லாம் தான் நல்ல எழுத்தாளர்கள் என்று சொல்லியிருந்தார். அதை எழுதியவரும் ஒரு எழுத்தாளர் என அவரது முகநூலில் பார்த்தேன். காலச்சுவட்டில் புத்தகமெல்லாம் போட்டிருக்கிறார்கள். நிறைய …

பொம்மலாட்டக்காரனின் கைநூல்

வணிகத்திற்கும் அறமும் வாழ்க்கை நோக்கும் அடிப்படையானது. வணிக சினிமாவின் வளர்ச்சி வெகுசனக் கருத்துகளை தீவிரக் கலைகளிலிருந்து பெற்று விரித்தெடுப்பது. வெகுசனக் கலைகள் வாழ்க்கையை அப்படியே பிரதிபலிப்பவை அல்ல. அதிலிருந்து தேர்ந்தெடுத்த ஒரு சாராம்சமான கதையைப் பின்னியெடுக்கின்றன. கூடை முடைவது என்ற உவமை இலக்கியத்தில் உண்டு. ஒரு நாவலை எழுதி செம்மையாக்கம் செய்யும் பொழுது ஒவ்வொரு பகுதியாக முடைந்து, முடைந்து அதை இறுதியில் இறுக்கி இறுக்கிச் செறிவாக்குவதை அப்படிச் சொல்வார்கள். சினிமாவில் …

வெள்ளி வீதி 2.0

  முதலாவது வெள்ளிவீதி இலக்கியக் கூடுகை பிரான்சில் நிகழ்ந்திருந்தது. அடுத்த நிகழ்வு சுவிஸ் நாட்டின் சூரிச் நகரில் நவம்பர் மாதம் 01 ம் திகதி இடம்பெறவிருக்கிறது. அதற்கான அமர்வுகளும் அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது.  இலக்கியத்தின் மைய விசைகள் சிறு குழுவின் தீவிர உரையாடலின் வெளிப்பாடாகவே தன்னைத் தொகுத்துக் கொள்ள முடியும். கலைகள் தொடர்பாகவும் அப்படித் தான். விரிந்த பரப்பென்பது கடலின் மேற்பரப்பில் பெய்யும் மழையைப் போன்றது. கடலென்பது மழை பொழியும் மேற்பரப்பு …