123: ஆழிசூடிகை : 03

இருதியாள் தனது நினைவுகளின் ஆழிக்கரையில் ஓடிய நண்டுகளைத் துரத்தும் வேறுகாடாரைக் கண்டாள். போர் முனை நீங்கிக் கரை வந்த போது மேனியில் களைப்பு குளிரலைகள் ஆற்றும் வெய்யிலையென இளக்கிக் கொண்டிருந்தது. வேறுகாடார் அப்பொழுது தான் திடலுக்கு வந்த இளஞ்சிறுவனென துடிப்புக் கொண்டிருந்தார். தமிழ்ச் செல்வனுடன் உரையாடிய பின்னர் திமிலர் மருத்து நிலைக்கு மாற்றப்பட்டிருக்கும் செய்தியுடன் இருதியாளிடம் வந்தார். இருதியாளின் வாடிவீட்டில் ஒற்றைத் தீப்பந்தம் மினுங்கிச் சுடர்ந்தது. பனையோலைகளால் வேயப்பட்டு மூங்கில் …

122: ஆழிசூடிகை : 02

ஆழிவெண் சங்குகளின் பளபளப்புடன் மேனியுருகிக் கருஞ்சங்கென மினுக்குக் கொண்டிருந்த இருதியாளை இமை சிதறாது நோக்கியிருந்த வேறுகாடார் அவளின் அருகில் சென்று சலனமின்றி கடலை நோக்கினார். கடல் மாபெரும் கரும் போர்வையால் மூடப்பட்டு அதனுள் எஞ்சிய ஒளிகொண்டு நோக்குபவர் எனத் தன்னை உணர்ந்தார். போர்வைக்குள் என எண்ணமெழுந்த போது அவரது பெருமேனியில் மெய்ப்புல்கள் எழுந்தன. நிலத்தினடியில் ஓடும் நீர் ஒவ்வொரு வேரையும் தொட்டு எழும் புற்காடென அவர் தன்னுள் ஓடும் குருதியை …

121: ஆழிசூடிகை

தன் மெய்யாற்றல் எதுவென அறியாதவர் பெருங்களங்களை வெல்ல இயலாது. எத்தனை சிறியவையாய் இருந்தாலும் அறிந்து கணித்துப் பெருக்கிக் கொண்ட விசையே பெருவுருவென்றாகும். அதுவே களம் வெல்லும் படைக்கலம். வேறுகாடார் அகன்ற மார்பில் வெண்பாசியென மயிர்கள் இளமழைச் சாரலால் நனைந்திருக்க கூகை விழிகளால் இருதியாளை நோக்கியிருந்தார். இருவரும் புலிப்படையிலிருந்து சிலகாதங்கள் விலகியிருக்கத் தொடங்கி ஆறு பருவங்கள் பெயர்ந்து விட்டன. ஒரு அணுக்க உறவெனும் வகையில் நீலரிடமும் புலிப்படையினருடனும் அவர்கள் அணுகியமைவது உண்டு. …

120: சிலைப் புன்னகை : 02

விருபாசிகையிலிருந்து எழுந்த நறுமணத்தின் தீந்தீற்றலொன்று வளியை நிறைத்து கனவில் பெய்து நாசி நுழைந்தது. வாசனையென்பது மானுடரை ஆழ இழுத்துக் கொள்ளும் விந்தை என எண்ணினான் பொன்னன். அம்மயக்கு வாசனை அவனைக் கேள்விகளின்றி அவளை நோக்கச் செய்தது. நோக்கில் அவள் எளிய அருள் கொண்டிருந்தாள். விழைவும் விலகலும் அற்ற சக இருப்பென நீடித்தாள். காற்றை உந்தி வெளியில் அந்தரத்தில் மிதக்கும் யட்சியொருத்தியென எழுந்தாள். மேனியின் அழகு கூர்ந்து வதனம் என்றாகி நின்றாள். …

119: சிலைப் புன்னகை

தானென்பவள் பலிகொள்ளும் தெய்வம் என்பது போல சாய்மஞ்சத்தில் அமர்ந்து தீயிலையின் வெண்நரைப் புகைச்சுருள்களை ஊதிக் கொண்டிருந்தாள் விருபாசிகை. உதட்டில் ஈரலிப்பின் தகதகப்பு மினுங்கியது. செவ்வட்டையின் மயக்கு தேகத்தில் மழைநீரென. பொன்னன் முத்தினியின் குழலை இருபுரியாக்கி பின்னிக் கொண்டிருந்தான். அவளது தேகம் அவன் முன் ஊழ்கத்திலென அமைந்திருந்தது. காலை உணவின் பின் தேகம் மீண்டும் முழுமை கொண்டு நிறைவு பெற்றிருப்பதை ஒவ்வொருவரும் எண்ணிக் கொண்டனர். எவ்வளவு பசித்திருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் உண்ணும் …

118: ஒரு தீச்செந்தழல்

“எத்திசை செல்வதென எண்ணாது திசை தோறும் பொழிந்திட்ட பெருமழைப் பெருக்கிலும் ஆழ்சுனை ஊற்றுகளின் கனவுகளிலும் உருவேறி ஓடிய மகத்தான ஆறொன்று எத்திசையும் திறக்காத பாழிருளில் தான் எங்கு பிரிகிறேன். எங்கு அழிகிறேன். இருக்கிறேனா. உலர்ந்தேனா என அறியாது திகைத்து நின்ற போது பாதாளம் உடைந்து ஆயிரமாயிரம் அடுக்குகள் கீழ்வெளியே திறக்க ககனங்கள் விதிர்விதிர்க்க இடியிடித்து இறங்கும் பல்லாயிரம் பெருமுரசுகளின் கார்வையுடன் ஒலித்தெழுந்த மாபெரும் வீழ்ச்சியே என் காவியம்” என்றான் இளம் …

117: நீர்க்கொடி : 02

உளத்தில் கசந்து கொண்டிருந்த நச்சில் ஒருதுளியை எச்சிலென மண்ணில் உமிழ்ந்தான் வாகை சூடன். “பாணரே. காமம் கூடாதவன் பழக வேண்டியது போரே. உடலை ஒருக்கி அதைப் படைக்கலமென மாற்றினால் ஒழிய ஆணால் காமத்தை வெல்ல முடியாது. எய்யப்படாத காமம் கொண்ட ஆணளவுக்கு கீழ்மை கொண்டவன் அக்கணம் மண்ணில் பிறரில்லை. காமம் அழகின் போர். எதுவோ ஓர் அழகு சென்று தொட்டு அடையும் நுண்விளையாட்டு. அழகின்மையில் காமம் அமைய இயலாது. நான் …

116: நீர்க்கொடி

மானுடர் அடையும் சிறுமைகளும் அவமதிப்புகளும் எண்ணவியலாத விசையை அரிதான சிலருக்கு அளிக்கின்றன. ஒன்றில் அவர்கள் கனிந்து நிறைவடைபவர்களாகவும் இல்லையேல் கனன்று பேரழிவின் ஊற்றுகளாகவும் மாறுவார்கள். ஒரு மானுடர் இன்னொரு மானுடரைச் சிறுமை செய்வதை இளையோர் களியெனவும் மூத்தோர் அச்சத்துடனும் நோக்குவது அதன் பொருட்டே. எண்திசைத் தோளன் படை நீங்கி விலகிய பின்னர் அவனது போர்க்கள வெற்றிகள் தூசியின் மேல் தூசிகள் படிவதென பின்னணைந்தன. எளிதாக்கப்பட்டன. அவனது வில்லும் வாளும் வென்றெடுத்த …

115: ஒருகணம் : 04

நீர்க்குமிழியில் காற்று நுழைவது போல வெண்தலை கொண்ட பருந்து சிறகை அசையாது ஏந்தியபடி அரண்மனையின் காவற் கோபுரத்தின் மேலே தாழ்ந்து கொண்டிருந்தது. அரசு சூழும் அவையின் சாளரத்தில் நின்றிருந்த நீலழகனின் முகத்தில் சாம்பலின் வண்ணமிகு சிற்றொளி பரவி உறைந்திருந்தது. சாளரத் துண்டில் நீலன் ஆடியில் முகமெனத் தோன்றினான். பருந்து முன்முகப்பில் புறாக்களற்ற மேற்பரப்பில் அமர்ந்து கொண்டது. கால் நகங்களை ஒருகணம் உற்று நோக்கிய பின்னர் நீலனை நோக்கியது. நீலன் பட்டினத்தின் …

114: ஒருகணம் : 03

பெருந்தோல்வியைச் சந்தித்து உச்சங்களிலிருந்து வீழ்பவனை விட ஆயிரஞ் சின்னஞ் சிறு தோல்விகளால் வீழ்பவன் கொள்வதே மகத்தான அவமதிப்பும் தீமையின் விழைவும் என எண்ணினான் அசல. நீண்டு விரிந்திருந்த குளத்தில் இளமழை தாமரைகள் மேல் பொழிந்து கொண்டிருந்தது தன் பல்லாயிரஞ் சின்னஞ் சிறு தோல்விகளை. வனத்திலிருந்து பெயர்ந்து வந்த காற்று குளத்தின் கரையில் ஒற்றை இளமரமென நின்று கொண்டிருந்தவனின் குழல்களை மோதி விழுத்திச் சென்றது. ஆறாத அகக்காயங்களே ஒருவனுக்குத் தன் ஆழமான …