ஜல்லிக்கட்டுக்கு ஏன் ஈழத்தில் ஆதரவு?

தொடர்ந்து ஒரு சில மாற்றுக் கருத்தாளர்களால் இந்தக் கேள்வி முன்வைக்கப் பட்டு வந்துகொண்டிருக்கிறது. மூன்று விதத்தில் ஈழத்திலிருக்கும் கருத்தாளர்கள் அதனை எதிர்ப்பதாக நான் மட்டுக்கட்டுகிறேன். 1 – இது ஒரு சாதிய விளையாட்டு இதனை நாம் ஆதரிக்கக் கூடாது.2 – இது ஒரு ஆணாதிக்க விளையாட்டு இதனை நாம் ஆதரிக்கக் கூடாது.3 – ஈழம் தனக்கான தனிப் பண்பாட்டை உருவாக்க வேண்டும், இங்கேயே 1008  பிரச்சினைகள் உள்ளன. அதனால் நாம் …

யாழ்ப்பாணம் பல்கலைக் கழகம் தனது பொறுப்புக்களை எப்பொழுது கையிலெடுக்கப் போகிறது?

( இவை தற்போதைய நிலைவரத்தை வேறு திசையில் கொண்டு செல்வதற்கான எத்தனிப்பாக கருத வேண்டாம் . அநேகமாக அனைவரும் தமது நிலைப்பாடுகளை முன்வைத்து விட்ட நிலையில் தான் இதனை பதிவிடுகிறேன். சுலக்சனுக்கும் கஜனுக்கும் நிகழ்ந்தது இனி யாருக்கும் நிகழ்ந்து விடக் கூடாது. அதே நேரத்தில் அவர்களுக்காக நாம் பெற்றுக் கொடுக்க வேண்டிய நீதியை கண்டிப்பாக பெற்றுக் கொடுக்கவும் வேண்டும் . ஆனால் அதற்கு நாம் எவ்வளவு தூரம் தயாராய் உள்ளோம், …

மாற்றுக் குரல்

யாழ்பாணத்தைச் சேர்ந்த மாற்றுப்பாலினத்தவர்களுக்கான ஒரு அமைப்பை உருவாக்குவதற்கான ஆரம்ப கட்ட உரையாடல்களை கடந்த காலத்தில் இரண்டு முறை விதை குழுமம் ஊடாக நிகழ்த்தியிருந்தோம், முதலாவதாக அவர்களின் பிரச்சினைகளை அவர்களே உரையாடுவது நிகழ்ந்தது. அதில் பல விவாதங்களை நிகழ்த்தி சில முடிவுகளுக்கு வந்திருந்தோம். ஒரு பொது தளத்தை இதன் பொருட்டு உருவாக்குவதென்பது அவற்றுள் முக்கியமான ஒரு முடிவு. பிறகு சில மாதங்களின் பின் மறுபடியும் கூடி அதற்கான அமைப்பு கட்டமைப்பை உருவாக்குவது …

மெல்லத் தமிழ் இனிச் சாகும்

‘எழுக தமிழ்’ தமிழ் பேசும் சமூகங்களை எல்லாம் உள்ளடக்கியதா என்பது தான் எழுக தமிழ் மீது உள்ள மையவாத அரசியல். வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்கள், அதுவும் பூர்வீகமாக இருப்பவர்கள் என்பவர்களுக்கு மட்டுமே எழுக தமிழ். வடக்கில் வாழும் மலையக மக்கள் தமிழுக்கு பொருட்டில்லையா, முஸ்லிம் மக்கள்? பழங்குடியினர்? இவர்கள் எல்லாம் ஏன் தமிழுக்குள் வரவில்லை. தமிழை நாம் ஏன் பிரதேசங்களுக்குள் சுருக்குகிறோம். அனைவரினதும் விடுதலைதான் எந்த விடுதலையையும் நீடித்து …

காவியத் தருணம்

“எல்லாவற்றிற்கும் மேலாக இந்த உலகையாளும் நியதிகளின் போக்கு விந்தையானது தான்” – கோபி கிருஷ்ணன் – யாழ்ப்பாணம் பஸ் ஸ்டாண்டில் ஒரு முஸ்லிம் வியாபாரியை எனக்குத் தெரியும். கைகளில் பொருட்களை கொண்டு சென்று விற்று பிழைப்பவர். பல்வேறு தருணங்களில் அவர் என்னை ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். சில நாள் கதைத்தும் இருக்கிறேன். ஒரு நாள், பஸ்ஸில் ஒரு இளைஞன், கையில் துண்டு சீட்டு ஒன்று வைத்து பிச்சையெடுத்துக் கொண்டு வந்தான். நானோ குழந்தை …