103: மடப்பெண்ணே

பொன்னன் மஞ்சத்தில் சரிந்து துயிலில் ஆழ்ந்தான். அவனது இடையாடை உருவி நழுவுவதை அறிந்து எக்கல் வரச் சிரித்துச் சிரித்து அயர்ந்தான். சிலகணங்களில் இருநாவுகள் சண்டையிட்டு இருவாய்களில் ஆண்குறி நுழைந்து ஈரலிப்பில் தடித்துத் துடித்து சித்தத்தின் உச்சாணியில் மின்னல் கயிறொன்று பற்றியெரிகிறதென எண்ணி இது கனவு இது கனவு எனச் சொல்லி எழ விரும்பாமல் கரங்களை மேலே குவித்து தன் கரத்தைத் தானே பற்றிக் கொண்டான். ஆண்குறி காட்டு வெள்ளத்தில் அமிழ்வது …

102: இளமழைத் தூவல்

சுவடிகை வலக்கரத்தின் முழங்கையை இடக்கர விரல்களால் பற்றிக் கொண்டு ஒசிபவள் போல நடந்து வந்ததை தொலைவிலிருந்தே நோக்கினார் வேறுகாடார். அவள் கழுத்தில் தூங்கிய வெள்ளிப் பதக்கம் காரிருட்டில் வெள்ளி நிலவு என மினுங்கியது. மென் தூவல்கள் இமைப் பீலியளவில் வீழ்ந்து கொண்டிருந்தன. காற்றின் ஈரலிப்பு இனியதெனத் தோன்றியது. இடையில் தென்றல் சுமந்து வந்த குளிர் மலர்கள் முட்டுப்படுவதைப் போல மேனிகள் மெய்ப்புக் கொண்டன. அரசர் எழுந்த செய்தி மஞ்சத்தறைக்கு நுழைந்த …

101: அரக்கனின் காதல்

சத்தகன் தன் பெருங்கரங்களால் இளம் வீரர்களை தோள்களில் அறைந்து கொண்டு இன்சொற்கள் கூவிக்கொண்டு நலன் விசாரித்தபடி அவர்களை நோக்கி வாழ்க்கையைப் பற்றி ஓரிரு சொற்கள் சொல்லி நடந்து சென்றான். மேகங்கள் எங்கிருந்து எழுந்தவையென நோக்கி நின்ற சுடர் மீனனைக் கண்டதும் உவகை மின்னொளியென விரியும் முகத்துடன் அவனது செவிக்குண்டலங்கள் சிற்றாலய மணிகளெனக் குலுங்க மார்புகள் பெருவேங்கையினுடையதைப் போல ஒருங்கி ஒளிகொள்ள கைக்காப்புகளும் சிறிய கணையாழிகளும் சர்ப்பக் குட்டிகள் அவனில் விளையாடுகின்றன …

100: எதிராட்டக்காரி : 02

இவள் பிறிதொன்றின் தெய்வம் என அதிர்ந்தான் பொன்னன். சொல்லில் எழும் மயக்கிற்கு அப்பால் எங்கோ ஒரு தொல்முனையில் வீற்றிருக்கும் மானுடர் அறிய ஒண்ணாத மானுட தெய்வம். இவளை அறிந்தால் மானுடம் தன் முதல் கூழாங்கல்லை அழகுடன் தொட்டு நோக்கியவருக்கு அதன் அழகுமை எதனால் தோன்றியதென்ற புதிருக்கு விடை கிடைக்கும். அழகு தன்மையால் உண்டாக்குவது. நெறி விலகுபவள் புதிய இன்பங்களை மானுடருக்கு ஆற்றும் பொருட்டு எழுந்த பெருந்தெய்வம். கருணையால் அன்றி பிற …

99: எதிராட்டக்காரி

சுவடிகை லீலியாவைச் சென்று எழுப்ப விழைந்தாள். சத்தகன் முன்முகப்பிலிருந்து ஆழிக்கரையை நோக்கிச் சொல்லற்று நின்றிருந்தான். கோட்டையின் காவல் நிலைகளில் நின்றிருந்த புலிவீரர்கள் தீப்பந்தங்களினை நூர்த்தபடி சூரிய ஒளியில் கவசங்கள் மினுங்க பணிகளை ஒருக்கிக் கொண்டிருந்தனர். காகங்கள் வாயில் மீன்முட்களைக் கொணர்ந்து முன் முகப்பில் வீசுகின்றன என்பதை நோக்கிய சத்தகன் கரைந்து குரலெழுப்பி அவற்றை விரட்டினான். கன்னங் கரிய சிறகுகள் சூரிய ஒளியில் மெழுகென ஒளிவீசின. சாலைகளை உற்று நோக்கினான். வீசப்பட்ட …

98: ஊர்தி : 02

வேறுகாடார் நிமிர்ந்து கொண்டு உலகளந்தோனின் வருகையை நோக்கிக் கொண்டிருந்தார். “வருக. இளையோனே. பணிகள் ஒருக்கியாயிற்றா” என்றார். “நான் சென்ற பணிகள் எப்போது முற்றுறாமல் போயிற்று மூத்தவரே. அனைத்தும் சிறப்பாய் நிகழ்ந்தன. களியாடி உங்கள் இளமை மீண்டிருக்கிறது போல முகம் பிரகாசமாக இருக்கிறது” எனச் சொல்லிச் சிரித்தான். வேறுகாடார் புன்னகையுடன் “நீயில்லாத களி அற்புதமாய்த் தானிருக்கும் இளையோனே” என்றார். உலகளந்தோன் உறுமல் போலச் சிரித்துக் கொண்டு தன் வலக்கையைத் தூணில் ஊன்றி …

97: ஊர்தி

“எனது காமம் உடலில் நிகழ்வதில்லை பொன்னா. உடலை ஊர்தியாக்கிக் கற்பனையிலேயே என்னைக் கண்டு கொள்கிறேன். நான் முற்று விழையும் ஆணென்று ஒருவரைப் புடவியால் ஆக்கியளிக்க ஒண்ணாது. நான் என்ற இருப்பிலிருந்து மேனி கடந்து எழும் இருத்தல் நான். என்னை நீ உன்னுடையவள் ஆக்க இயலாது. பல பருவங்களுக்கு ஒருமுறை விண்ணில் தோன்றும் எரிவிண்மீன் போன்றது என் இருப்பு. என்னை நான் யாரென்று கண்டெடுத்து விட்டேன். இங்கிருந்து திரும்பி நான் என் …

96: தணல் மலர் : 02

“என்னவாயிற்று இளையோரே. களி காலத்திலும் கலைப் பூசல்கள் தேவையா” என்றார் வேறுகாடார். இளம் பாணன் எழுந்து சென்று சாளரத்தின் அருகிருந்த மரப்பெட்டியில் சாய்ந்து கொண்டு தீயிலைத் துதியை உறிஞ்சினான். “கலைப் பூசல்களுக்குப் பருவமோ பொழுதோ இல்லை கிழவரே. இது எளிமையான பூசல் தான். நான் சிற்பிகளைக் குறைத்துச் சொல்வதாக எண்ணிவிட்டார். ஒவ்வொரு கலை வடிவமும் அதற்குண்டான பிறிதொரு ஆழ்பார்வையைக் கொண்டிருக்கும். மானுட அகங்கள் எதனுடன் தன்னை இணைத்துக் கொள்ளுமென்பது சர்வ …

95: தணல் மலர்

விழைவுகளில் நான் பெருங்களி எனச் சொல்லி குயில் போலச் சிரித்த விருபாசிகையில் புலரியின் பனி மேகத்தில் ஊறும் நீரெனத் திரண்டிருந்தது. கூந்தலின் இழைகள் மஞ்சம் போல மலர்கள் உதிர்ந்து தூங்கியது. இரவு எழுந்து மனை சென்று நடுநிசியின் பின்னர் திரும்பியிருந்தாள். தேகத்தில் களிமினுக்கு ஏறி முகத்தில் பிரகாசம் கூடியிருந்தாள். வேறுகாடருடனான பித்தாக்கும் புணர்ச்சிக்குப் பின் அவளது உடலில் ஒருமை கூடியிருந்தது. புலரி வரை பொன்னனுடன் சொல்லாடியும் துயின்றும் அயர்ந்திருந்தாள். வனப்பாதையின் …

94: பாற்கடலிகள்

முதிய மருதமரங்கள் கலகலத்து வீசிய புலரிக் காற்று முதுகிலறைய புலிகளின் இளம் வீரர்கள் குழுவொன்று வனவிளிம்பைக் கடந்து பட்டினத்தை நோக்கிய நீண்ட பெருஞ்சாலையில் நுழைந்தது. ஆதவனின் ஒளிப்பற்கள் முதுகில் மழலைக் கடியென வீழ்ந்து கொண்டிருந்தது. வற்றியுலரும் ஆறெனக் குடிகளின் பெருக்கு அடங்கியிருந்தது. புலரியின் இனிய பறவையோசைகள் புதர்களிலிருந்து மந்திரங்களென ஒலித்து மயக்கு ஏற்றின. சோதியன் குளிருக்கு மேனி நிமிர்த்தி புரவியின் சீர் ஓட்டத்தில் தாவியெழுந்து அமைந்து கொண்டான். அவனுக்கு முன்னால் …