93: குருதி வேலன்

முன்முகப்பின் மேற்கூரையின் மேல் ஆயிரக்கணக்கான புறாக்கள் குறுகுறுத்துக் கொண்டிருக்குமொலிகள் பாதத்தில் ஆற்றங் கரை மணல்கள் உருள்வது போலத் தோன்றியது சுவடிகைக்கு. அவளது ஒளிக்கூச்சலிடும் விழிகளை அசைத்து புறாக்களின் குதுகுதுப்பான மேனிகளை நோக்கினாள். ஒவ்வொன்றும் பருத்தவை போலத் தோன்றின. கழுத்தின் ஆரங்களில் மென்காலையொளி சங்கிலிக் கதிர்களென மயக்காடியது. எழுந்து பறந்து மீண்டும் கூரையிலேயே அமர்ந்து கொண்டன. குளிர் வீசும் காற்றில் மார்புகள் விறைத்துக் கொள்ள எழுந்து சென்று கோட்டைக்கு அப்பால் விரிந்திருக்கும் …

92: மணநாள்

பனிக்காற்று முன்முகப்பின் கருங்கல் வளைவுகளில் தாவியார்த்து மேவியது. அரண்மனையின் காவல் கோபுரங்களில் தீப்பந்தங்கள் நாவடக்கத் தொடங்கின. சத்தகனை நோக்கியபடியே “என்னவென்பதை அறிக இளையோனே. அவள் உன் களித்தோழியென உடனிருக்க வேண்டுமென என் அகத்தில் வண்டொன்று சுற்றிப் பறக்கிறது. உனது நெடுங்காலத் தனிமையை நான் விரும்பியிருக்கவில்லை என்பது மெய்தான். எனிலும் இவளில் உள்ள எதுவோ ஒன்று உன் அகத்தை இட்டு நிரப்புமென்ற எண்ணம் நீர்க்குடத்தில் காற்றலைக்கும் ததும்பலென நிறைவு தாளாது துள்ளுகிறது” …

91: குழவி நாகங்கள்

உசை “நீலா நீலா” என மிழற்றிக் கீச்சிய போது தானகி விழித்துக் கொண்டாள். நிலவையின் இடையில் அணைத்துக் கிடந்த தனது கைகளை மெல்லிய நடுக்குடன் விலக்கிக் கொண்டாள். நிலவை வேலெறிய ஓடுபவள் போல துயிலமைவிலிருந்தாள். தானகியின் விழிகள் மஞ்சத்தறையைச் சுழன்று நோக்கியது. மழலைகள் விளையாடிய மனையெனக் குலைந்த மஞ்சத்தறையை உதட்டில் சிரிப்புச் சுழியெழ நோக்கியவள் லீலியாவையும் சுவடிகையையும் நோக்கி அவர்கள் எப்போது வந்தார்கள் என நினைவைப் புரட்டிச் சலித்தபடி எழுந்தாள். …

90: சுவடிகை

கண் மடல்கள் நீரலை போல அமைந்தெழ நிலவையின் மஞ்சத்தில் லீலியா துயிலில் இருந்தாள். தானகி நிலவையைச் சேய் போல அணைத்துக் கொண்டு துயின்றிருந்தாள். தென்னகத்திலிருந்து வந்த பெண் மொழிபெயர்ப்பாளினி சுவடிகை இருக்கை மஞ்சமொன்றில் தலையணையைப் பற்றிக் கொண்டு துயில் மயக்குக் கலைய எழுவதும் நினைவுகள் பின்னாலென இழுக்கச் சாய்வதுமாக உழன்று கொண்டிருந்தாள். முற்புலரியில் அரண்மனை நோக்கித் திரும்பிய லீலியாவின் புரவியில் அவளின் பின்னே குரங்குக் குட்டியென அணைத்துக் கொண்டு சுவடிகை …

89: களியிலாடு மயில்

அருள்வதும் மருள்வதும் பெண்ணின் இயற்கை. வளர்வதும் பொலிவதும் போல. தானகி தன் நினைவுகளின் இனிமைகள் அனைத்தும் நிலவையின் உடனிருத்தலில் எங்கனம் பூத்து மகிழ்ந்தன என எண்ணிக் கொண்டாள். அரசியினருகில் துயிலும் தோழியென்றாகி வாழ்பவள். சொல்லிலும் மெளனத்திலும் மெல்லிய அசைவிலும் கூட அவளை அறிந்தவள். நிலவை பெண் கூர் கொண்ட உச்சம். விழைவும் அறிவும் ஞானமும் திரண்ட பேருரு. காலத்தின் சங்கிலி. வாழ்வின் திகைப்பு. முதல் நாள் களியிரவில் மந்தணமாய்க் களி …

88: இச்சை அகம் : 02

ககனம் கருநீலப் பொருளின்மையெனத் தோன்றியது. பொன்னன் தன் மூச்சை ஆழ இழுத்துக் கொண்டு “சொல்லாடுவதும் ஒருவரை முற்றறிந்த பின்னரும் கூடுவதும் எப்படி மெய்மை அறிந்ததென்று ஆகும். ஒருவர் சொற்களில் தன் மெய்மையைத் தான் வெளிப்படுத்துகிறார் என எங்கனம் உய்த்தறிய ஒண்ணும். மானுட அகம் உறவுகளை மேடையொன்றாக்கித் தீராது நடிக்கிறது. மெய்யென்று நாம் காணும் ஒவ்வொன்றிலும் அறியாத பொருள்கள் உறைகின்றன அல்லவா. அவரே அறியாத அவரது ஆழகம் உண்டல்லவா” என்றான். விருபாசிகை …

87: இச்சை அகம்

காலமென்பது நிற்காத பெருஞ்சுழலில் சிந்தப்படும் ஒற்றைப் பெருமழை. அதில் வீழ்பவரோ வெல்லப்படுபவரோ வஞ்சம் கொண்டவரோ பழிசுமந்தவரோ கொடூரரோ மேன்மையானவரோ நல்லதோ கெட்டதோ ஞானமோ அஞ்னானமோ தவமோ பற்றோ மாபெருங் காவியமோ கீழ்மையின் பிறவிகளோ அனைத்தும் திவலைகளே. சுழல் எதனால் உண்டாகிறது. ஒழிச்சலில்லாத காட்டுபுரவிகளின் பெரும் ஓட்டத்தில் விசையாய்க் காலத்தை எழுப்புவது எது. எது ஒரு அணுவை நான் உயிரென எண்ணச் செய்தது. அதில் எது பருத்து வடிவங்கள் பூண்டது. எது …

86: அதியா

“இது கலிமுற்றி ஊழிமுதல்வன் எழுங்காலமென எரிவிண்மீன் ஆகாயத்தில் தோன்றிய அன்றே காலக் கணியர்கள் வகுத்துவிட்டனர் அங்கினி. நாம் காணும் அனைத்துக் களியும் ஊழியின் தாண்டவத்திற்கான ஒத்திகையே” என்றார் ஆடற் சித்தர். களியிரவில் அரவொன்று தன்னை உற்றிருப்பதைப் போல் மெய்ப்புக் கொண்ட அங்கினி காட்டு வாயிலில் நுழைவதற்கு முன்னரான வளைவில் பெருந்தேக்கமரத்தின் பின்னால் அழுங்கெனப் பற்றி நின்ற தேகனைக் கண்டாள். அவள் இரு தேகங்களை என்றைக்குமாக நினைவிலும் கனவிலும் சுமப்பவள். ஒருவர் …

85: நஞ்சு மழை

முதல் நாளிரவின் மயக்கிசையும் உடுக்கிசையும் அகத்தில் தாளமிட்டு எழுந்து கூச்சல் கொள்வது போல் தோன்ற விழித்துக் கொள்ளவென இமைகளை அசைத்த போது அவை காந்துவன போன்று விரிய மறுத்தன. சிற்பன் உதடுகளில் உலர்ந்திருக்கும் காய்ச்சலை வழித்துக் கொள்பவன் போல நக்கிக் கொண்டான். ஆழிப்புயலிடை சிறுகலத்தில் புரளும் மரப் பீப்பாய்களென உடலை உலைத்துக் கொண்டிருந்தது காய்ச்சல். நினைவுகளும் புரண்டு நுரைத்துச் சீறுவன போல் சித்தத்தைக் குலைத்து ஆடின. மேனியில் ஏறிய கொல் …

84: பெருவூஞ்சல்

மடாலயத்தின் பொன்வேய் கூரையின் மேல் புறாக்கள் சூரியச் சிறகுகள் பூண்டவை போல் ஒளியில் மினுங்கிக் காற்றில் எத்திக் குறுகுறுத்துக் கொண்டிருந்தன. புலரியின் பனிக்காற்று அல்லிக் குளத்தின் மேல் கவிந்து குளிரிலைகளை அலைத்தது. மாகதா ஊழ்க நிலையில் அல்லிக் குளத்தின் கரை மேட்டில் பனியில் பனியெனக் கரைந்திருந்தார். அல்லிக் குளத்தின் காற்றலைகளிடை கரைச் சேற்றிற்குத் தலையையும் குளத்திற்கு வாலையும் நீட்டியிருந்த இரு பெருமர வேர்ப்புடைப்புகள் போன்ற முதலைகள் வாயை இழுத்துப் போர்த்துக் …