சூல் கொளல்: 02
இச் சமகாலத்தில், மொழிபெயர்ப்புக் கவிதைகளின் வழியே ஆயுத வழி விடுதலை பற்றிய வாழ்வினை, ஏற்கனவே உலகில் போராடிக்கொண்டிருக்கும் மக்கள் திரளின் கவிதைகள், விடுதலையின் படிமங்களாகத் தமிழுக்குள் கொண்டு வருகின்றன. போராட்டங்களின் நியாயங்களையும் மக்களின் துயரங்களையும் எப்படி மொழியில் நிகழ்த்தலாம் என்பது தமிழுக்குள் வந்து சேர்ந்த பொழுது அதன் சாயல்கள் கொண்ட கவிதை வரிகள் எழுதப்படலாயின. அவை பின்னர் பண்பாட்டில் வேர் கொண்டு தனக்கான படிமங்களை அடைந்தன. உலகெங்கும் அரசின் இராணுவங்கள் …
