மொழியின் திகைப்பு

“Bro.. நீங்க சிறுகதை எழுத்தாளரா? த‌மி‌ழ் வெண்பா எழுதிய அனுபவம் உண்டு. இருப்பினும் உங்கள் கவிதைகள் சிறிது புரிய /புரியாத போல் உள்ளது…i think I need to have a brief introduction to understand” என்றொரு கேள்வியை புதிய நண்பரொருவர் அனுப்பியிருந்தார். அவருடைய கேள்விக்கான பதிலை இளம் வாசகர்களுக்குமானதாக விரித்து இக்குறிப்பை எழுதுகிறேன். * என்னை எழுத்தாளர் எனும் வகையில் சுட்டலாம். கவிதை, புனைவெழுத்துகள், இலக்கிய விமர்சனம், …

செயற்களம் புகுவோருக்கு

ஒவ்வொரு சமூகப் பிரச்சினைகளுக்குமான தீர்வுகள் அததற்கான தனித்தன்மையான அணுகுமுறைகளைக் கோரக் கூடியவை. அப்பிரச்சினைகளைக் கையாளும் தனிமனிதர்களோ சமூக மட்ட அமைப்புகளோ யாரும் எவை குறித்தும் முழுமையான அறிதல்களோ பார்வைகளோ தீர்வுகளோ அறிந்தவர்களல்ல. தொடக்கத்தில் அச் சிக்கலும் அதைத் தீர்க்க வேண்டும் என்ற உந்துதலும் அவர்களிடமிருக்கும். எந்தவொரு செயற் தொடக்கமும் நாம் அவதானிக்கும் அன்றாடத்திலிருந்தே நம்முள் விதையென விழுகின்றன. நாம் அவற்றால் அலைக்கழிகிறோம். என்ன செய்வதெனத் தெரியாமல் திகைக்கின்றோம். ஆனால் செயல்படுதலென்பது …

சர்ப்பத்தின் வால் நுனி

தமிழின் அகமும் புறமுமான கவிதை அடுக்குகளுக்குள் இரண்டின் வெளிகளுக்குள் நுழைந்து மீளும் தன்னிலைகள் ஈழத்தமிழ்க் கவிதைகளில் அதிகம் நிகழ்ந்திருக்கின்றன. சண்முகம் சிவலிங்கம் அவரது அரசியல் கவிதைகளுக்காக தொடர்ந்து கவனிக்கப்படுபவர். அவரது அரசியல் கவிதைகள் நீரின் ஆழத்தொலிக்கும் மெளனமும் அதன் மேலெழும் புயலைப் போன்ற சீற்றமும் கொண்டவை. என்னளவில் அவரது அகக் கவிதைகள் மிக நுட்பமான வேலைப்பாடுகள் உள்ள ஆபரணங்கள் போன்றவை. பாலியல் வேட்கை, உறவுகள், தனிமை, ஆன்மீகம் என்று பல்வேறு …

சூல் கொளல்: 03

1980 காலகட்டத்தில் தமிழ்த்தேசியவாதம் முற்போக்கான ஏற்புடமையுடன் மக்களை நோக்கி நகர ஆரம்பித்திருந்தது. பெண் கவிஞர்கள் தேச விடுதலையில் தமக்கான பாத்திரத்தை வரித்துக் கொண்டனர். இலங்கை இராணுவத்தின் அடக்குமுறைகளுக்குள் பெண்களுக்கு எதிராக இடம்பெற்ற பல்வேறு பாலியல் துன்புறுத்தல்களும் சித்திரவதைகளும் வன்புணர்வுகளும் படுகொலைகளும் ஆயுதம் தாங்கி இராணுவத்தை அழிக்கும் ஆவேசத்தை வழங்கியிருந்தன. 1986 இல் பெண்கள் ஆய்வு வட்ட வெளியீடாக வந்த சொல்லாத சேதிகள் தமிழ்ச் சமூகத்திற்குள் உண்டான பெண்ணிய நோக்கிலான விடுதலை …

மீளச் சொல்லுதல் : 01

நாம் நிகழும் காலத்தில் வெளிவரும் புதிய கவிதையென்பது ஒரு நீண்ட வரலாற்றின் முனை. அது மானுடக் கனவில் வேர்கொண்டு இன்றைக்கும் எதிர்காலத்திற்குமென விரிந்து கொண்டிருக்கிறது. கடந்த காலம் மிக விரிவான பரப்பு. அதில் ஒரு துண்டை வெட்டி எடுத்து அறிவதென்பது அச் சூழலின் முன்னையும் இன்றையும் இணைப்பது. தமிழ் மக்களின் அரசியல் உரிமைப்போராட்டத்தின் தொடக்க காலத்தில் அதன் கவிதைக் குரல்களாகவும் தனித்த மனத்தினை நோக்கியும் பேசி வந்த கவிஞர்களில் சிலரை …