நடுநரம்புச் சிக்கல்
புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த ஜப்பானியச் சிறுகதையொன்றை நண்பரொருவர் அனுப்பியிருந்தார். மணியோசை எனும் தொகுப்பில் உள்ள மணியோசை எனும் கதையது. அக்கதை, மானுட சுபாவம் குறித்தான மையச் சிக்கலொன்றை தெறிப்புப் போலச் சென்றடைகிறது. எளிமையான ஒரு பேய்க்கதை. ஒரு சாமுராய் வீரன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் தன் மனைவிக்கு ஒரு வாக்களிக்கிறான். அவளது மரணத்துக்குப் பின் யாரையும் திருமணம் செய்ய மாட்டேன் என உளமார்ந்து சொல்கிறான். அவள் தான் இறந்த பிறகு எங்கள் …
