இனப்படுகொலைக்கெதிரான ஓர் மக்கள் இயக்கம்

முள்ளிவாய்க்கால் பேரவலமும் ஆயுத வழிப்போராட்டமும் முடிவடைந்து பத்து வருடங்கள் ஆகின்றன. சமூகத்தின் எல்லாத் தளங்களிலும் இதன் விளைவுகள் ஆழமான மாற்றங்களை நிகழ்த்தியிருக்கின்றன. அவை சரியாக மதிப்பிடப்பட்டு அதன் மூலமான சமூக அசைவென்பது நிகழவில்லை. பல்வேறு இழுவிசைகளினாலும் நாட்டின், சர்வதேசத்தின் நிலமைகளினாலும் தமிழ் மக்கள் தம்மைத் தாம் விரும்பிய திசையில் அசைத்துச் செல்வது இன்னமும் முடியாததொன்றாகவே இருக்கிறது. சமூக பண்பாட்டு அரசியல் தளங்களில் இடம்பெற்ற மாற்றங்கள், மக்களை குவிமையமாகத் திரள்வதிலிருந்து விலத்தி …

அசையும் நூலகங்களை உருவாக்குதல்

அசையும் நூலகங்களை உருவாக்குதல் நீண்டகாலமாகவே நூலகங்களை உருவாக்குதலும் அவற்றை மக்களின் பயன்பாடுள்ள வெளியாகவும் மாற்றவும் பல்வேறுபட்ட முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. அண்மைக்காலமாக இளம் தலைமுறையினரும் இச் செயற்பாடுகளில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர். புத்தக சேகரிப்பு நிலையங்களை உருவாக்குதல், புத்தகங்களை பொதுமக்களிடமிருந்து நேரடியாகச் சேமித்தல், நூலக உருவாக்கம் சார்ந்து இயங்குகின்ற அமைப்புகளுடன் உரையாடிப் புத்தங்களைப் பெறுதல், பின்னர் அவற்றைக் கொண்டு கிராம மட்ட அல்லது பாடசாலை நூலகங்களை உருவாக்குதல் என்பதாக அவர்களின் …

நிலமீட்புக்கான மக்கள் போராட்டங்கள் – அடைவுகளும் நிலமைகளும்

இரண்டாயிரத்து ஒன்பதுக்குப் பின் தமிழ் மக்களின் பூர்விக நிலங்களுக்குள் குடியிருக்கும் இராணுவத்தை வெளியேற்றி அல்லது அரசு கையகப்படுத்தியிருக்கும் காணிகளை விடுவித்து தமது நிலங்களைத் தமக்கே தாருங்கள் என்று தமிழ் பேசும் மக்கள் தமது ஜனநாயக வழிப் போராட்டங்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக மெல்லிய அலைபோலத் தானும் இடைவிடாது மோதிக்கொண்டிருந்தனர். இரண்டாயிரத்துப் பதினைந்து, ஆட்சி மாற்றத்தின் பின்னர், பெருமெடுப்பில் இப்போராட்டங்கள், வெகுசன எழுச்சியாகவும், பிறரையும் உள்ளீர்த்துக் கொண்ட விரிந்த போராட்டங்களாகவும் உருமாறின. முதலில், …

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரம் – தேசத்தின் கோயில்

கண் விரித்தால் எங்கும் பச்சையாய்க் கிடக்கும் இயற்கையின் மண். முதுமரங்களும் ஆழமான காடுகளுமாக நிறைந்து கிடக்கும் அவ்வெளியை மனிதர்கள் தங்கள் கைகளால் உழுது விவசாய பூமியாக்கினர். நீண்ட நெடும் வயல்கள் உருவாகின. கால்நடைகள் செறிந்து மனித வாசம் வீசத் தொடங்கியது. குளங்கள் வெட்டியெடுக்கப்பட்டன. விவசாயம் தழைத்தோங்கியது. அரசு எழுச்சி பெற்றது. இன்றுள்ள வவுனியாவிற்கும் முல்லைத்தீவிற்குமான எல்லைக்கோட்டிலிருக்கும் ஒட்டுசுட்டான் இப்படித்தான் வளர்ந்தது . இற்றைக்கு ஆயிரத்து ஐநூறு வருட பழமை வாய்ந்த …

கண்ணீரில் விளக்கெரியும் தேசம்

கண்ணகி, அறச் சீற்றத்தின் படிமம். நீதி கேட்டு அரசை எரித்த பெண்ணின் கதை தான் கண்ணகியம்மனின் கதை. அவள் முல்லைத்தீவு மக்களுக்கு நெருக்கமானதொரு தெய்வம். இறுதியுத்தத்தின் பின்னர் இழந்த புத்திரருக்காகவும் மாண்ட சோதரருக்கும் கண்ணீர் விட்டு இன்றும் நூறு நூறு நாட்களாய் தெருவிலிருக்கும் ஆயிரம் ஆயிரம் தாய்மாரின் படிமம். ஏதோவொரு காலத்தில் இந்த நிலத்தில் அந்தப் பெண்ணின் கால் நடந்துதானிருக்கும். இன்று ஒரு பெரும் விடுதலைப் போராட்டம், லட்சக் கணக்கில் …

பிலக்குடியிருப்பு மக்களின் போராட்டம் ஏன் வெற்றி பெற வேண்டும்?

இதை எழுதிக் கொண்டிருக்கும் போது பதினைந்தாவது நாள் இருளத் தொடங்கி விட்டது. அடிப்படையில் ஐந்து நாட்களுக்கு மேல் கடந்த ஏழு வருடங்களில் எந்தவொரு ஜனநாயகவழிப் போராட்டங்களும் நீடித்ததில்லை. இந்தப் போராட்டம் அதனை மாற்றி எழுதியிருக்கிறது. இன்றோடு பதினைந்தாவது நாள். தொடரும் உறுதி மட்டும் தான் அந்த மக்களை நோக்கி பலரையும் ஈர்க்கும் வசீகரம். மேலும் அவர்களின் குரலில் உள்ள ஒற்றுமையும் சுரத்தும். முதல் நாள் இருந்ததிலிருந்து இம்மியளவும் மாறாது இன்றும் …

ஆமிக்காரனே! எயார் போஸே!

கேப்பாபுலவில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டம் பல வகையில் முக்கியமானது. ஈழத் தமிழர் வரலாற்றில் நீண்ட காலத்தின் பின் தொடர்ந்து ஜனநாயக வழிப் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலமிது. இவற்றை சரியான வழியில் நகர்த்திச் செல்ல வேண்டியதும் ஆதரவளிக்க வேண்டியதும் நம் ஒவ்வொருவருடைய கடமையாகும். கேப்பாபுலவு மக்கள் இந்த போராட்டத்தின் போது காட்டும் உறுதி மெய்ச்சத் தக்கது. அங்கு குழந்தைகள் பெண்கள் ஆண்கள் என்று வீதியில் படுத்து பனியில் நனைத்து …