அம்மை அப்பன் அயோனிகன்

எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் பற்றிய ‘அம்மை அப்பன் அயோனிகன்’ எனும் ஆவணப்படம் வெளிவந்திருக்கிறது. தமிழின் தீவிர வாசிப்புச் சூழலில் அவரின் பெயரையும் வாழ்வையும் எழுத்தையும் ஒரு மிடறேனும் அனைவரும் அருந்தியிருப்பர். நான் அவரது கவிதைகளை சொல்லெண்ணி, சொல்லெண்ணிக் கற்றவன். இருபது வயதில் ஒரு கொப்பியில் அவரது கவிதைகளில் உள்ள நானறியாத புதிய சொற்களை மட்டும் எழுதி வைத்திருந்தேன். மொழியை உருட்டி விளையாடும் ஒரு பருத்த பூனைக்குட்டி அவர். அவரது தீவிரமே …

சிரிக்கும் புத்தனுக்கு

தமிழின் மகத்தான ஒரு உடல் மலர்ப்பேழைக்குள் வைக்கப்பட்டிருந்தது அவனருகே மலர் மாலைகள் உயர்ந்து கொண்டிருக்கின்றன அவன் முன்னே சொற்கள் உதிர்ந்து கொண்டிருக்கின்றன இடையிடையில் யார் யாரோ அழும் ஒலிகள் கேவலைப் போல ஒரு மெளனமான மலரிதழ் விழுவதைப் போல முகத்தை அள்ளிக் கொள்வதைப் போல அவ்வளவு பெரிய உருவம் என நான் எண்ணியிருந்த அந்தக் குழந்தை ஒரு சாதாரண மலர்ப்பேழைக்குள் படுத்திருக்கிறது ஒரு மொழி என்பது தன் வாலைச் சுருட்டி …

ரமேஷ் பிரேதன் : அஞ்சலி

கவிஞரும் எழுத்தாளருமான ரமேஷ் பிரேதன் இன்று காலமாகி இருக்கிறார். அவரது கவிதைகளும் எழுத்துகளும் என் இள வயதில் மிகுந்த தீவிரத்தை அளித்தவை. தனி இரக்கத்தின் பேரழுகையென மண் வந்த கலைஞன் என எனக்குள் அவரைப் பற்றிய உருவம் படிந்திருக்கிறது. அஞ்சலிகள் ரமேஷ் பிரேதன். அந்தர நதி பேரழுகையின் உப்பு நதியில் வழித்தவறிச் சேர்ந்த பாய்மரத்தில் நான் இந்தப் பாய்மரம் பலநூற்றாண்டுகளாகக் கரை தொட்டதில்லை என்னைக் கடந்து செல்லும் பறவையே உனது …