128: நதிவழி
ஒருவன் எண்ணப் போவதை அக்கணத்திற்கு முன்னரே அறிபவரே தோழனும் எதிரியும் என எண்ணிக் கொண்டான் தமிழ்ச்செல்வன். அவனது நரையிழைத்த குழல் காற்றின் துள்ளலில் நலுங்கிக் கொண்டிருந்தது. காவற் கோபுரத்திலிருந்து மீண்டு தன் ஊன்றுகோல் கற்தரையில் எழுப்பும் ஒலியை ஊழ்க நுண்சொல்லென எண்ணியபடி நடந்து சென்று சொல்லவையில் அமர்ந்து தனித்திருந்தான். சாளரத்தால் மென்சாம்பல் வெளிச்சம் சொல்லவைக்குள் நிறைந்திருந்தது. கருங்கல்லாலான நிலத்தில் மிருகத் தோலாலான போர்வைகள் இடப்பட்டிருந்தன. ஆசனங்கள் வெறுமையில் அமர்ந்திருந்தன. திரைச்சீலைகளை …
