வெறுப்பை விதைத்தல்
“வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனைகளையிட்டு அச்சமாயிருங்கள்” – அல் குர் ஆன் – திகனயில் நிகழ்ந்த கொலைச் சம்பவத்திற்குப் பின் நாடு முழுவதும் அமைதியின்மை நீடிக்கிறது. பற்றியெரியும் கடைகளையும் பள்ளிவாசல்களையும் வீதிகளையும் மனங்களையும் இந்தத் துன்பியல் சம்பவம் உருவாக்கியிருக்கிறது. சிறுபான்மை இனக்குழுக்களின் மேல் தொடர்ந்து சொல்லப்பட்டு வரும் இனவாதக் கருத்துக்களே சமூக வலைத்தளங்களிலும் பொது வெளியிலும் பரவியோடுகிறது. கொஞ்சமாவது நிதானித்து நின்று யோசிக்க, உரையாட யாருக்கும் நேரமில்லை. தனிமனிதர்களின் குறைபாடுகளை, கடந்த கால …
