84: பெருவூஞ்சல்
மடாலயத்தின் பொன்வேய் கூரையின் மேல் புறாக்கள் சூரியச் சிறகுகள் பூண்டவை போல் ஒளியில் மினுங்கிக் காற்றில் எத்திக் குறுகுறுத்துக் கொண்டிருந்தன. புலரியின் பனிக்காற்று அல்லிக் குளத்தின் மேல் கவிந்து குளிரிலைகளை அலைத்தது. மாகதா ஊழ்க நிலையில் அல்லிக் குளத்தின் கரை மேட்டில் பனியில் பனியெனக் கரைந்திருந்தார். அல்லிக் குளத்தின் காற்றலைகளிடை கரைச் சேற்றிற்குத் தலையையும் குளத்திற்கு வாலையும் நீட்டியிருந்த இரு பெருமர வேர்ப்புடைப்புகள் போன்ற முதலைகள் வாயை இழுத்துப் போர்த்துக் …
