64: நினைவாலயம் : 02
இடையிலிருந்த விண்யாழியை நீள்மரப்பெட்டியில் அமர்ந்திருந்த ஆடற் சித்தரின் முன் ஆற்றில் உள்ளங்கை நீரை ஊற்றுபவள் போல இறக்கி விட்டாள் தூமழை. விண்யாழியின் வாயில் நுரை கசிந்து கைவிரல்களில் எச்சில் வடிந்திருந்தது. மூக்குநீர் ஊறி வாயில் ஒட்டிக்கொண்டிருந்தது. சிக்குப் படிந்தது போல் புழுதி விண்யாழியின் கேசத்தில் அப்பியிருந்தது. அவள் ஆடற் சித்தரை நோக்கினாள். அவளது மழலை விழிகளின் செம்மையைக் கண்டவரது அகம் வீங்கி வீங்கி அடங்குவது அப்பேருடலில் மூச்சென வெளிப்பட்டது. அவரது …
