34: ஏழு அன்னையர்
அழியும் ஒரு துளி அழிவே மீதொரு அழிவின் முதல் துளியாகியது. அழிவில் எஞ்சும் அழியாத ஒன்றே விழைவென உருக்கொண்டது. அது காக்கையெனக் கருஞ்சிறகுகள் விரித்து கூர் கரும் அலகுகள் மின்ன கொழு கரும் விரல்கள் கொண்டு ஒவ்வொரு இச்சையையும் தூக்கி அகாலத்தில் எறிந்தது. எறிந்ததைக் கொத்திக் கூடிப்பகிர்ந்துண்டது. அலகில் எஞ்சியவற்றை மேலும் அலகெனப் பகுத்துப் பரிமாறியது. கருமையின் குழவியே அழிவின் சிறகென எழுந்து காக்கையாகியது. காக்கையே உனது வாகனம். காலங்களை …
