54: அத்திரிச் சாம்பல்
“துயரை தெய்வத்துக்குச் சூட்டுவதன் மூலம் தங்களில் ஒருவரென தெய்வத்தை மானுடர் கீழிறக்குகிறார்கள் பெருந் தளபதி” என்றார் முதுதேரோட்டி அரும்ப முல்லர். சத்தகன் அவரை நோக்கிப் புன்னகைத்து விட்டு “துயரா. அது போர்க்களத்தில் ஒரு ஆயுதம் மட்டுமேயல்லவா. துயரென்பது எதிரிகள் நம்மீது பாய்ச்சும் சக்தி வாய்ந்த ஆயுதம் என்றல்லவா நினைத்து வந்தேன்” எனச் சொல்லிவிட்டு உரக்கச் சிரித்தான். அவன் பின்னே நூறு அத்திரிகள் வண்டில்களை இழுத்துக் கொண்டு மங்கலப் பொருட்களுடன் வந்தன. …
