82: புலரிப்பனி
புலரி மெல்லக் கரைந்து ஒலிகளாகி இளம் பாணன் நின்றிருந்த சதுக்கத்தில் வெளிச்சம் கதகதப்பான குழவியின் தேகச்சூடென விழுந்து கொண்டிருந்தது. எத்தனை முறை நசிந்து மாண்டாலும் எங்கென்று அறியாத திசைகளிலிருந்து எழுந்து வந்து நிரையைச் சீராக்கி அறுபடாது தொடர்ந்து செல்லும் எறும்புகளைப் போல மக்கள் கூட்டம் ஆலயத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. சதுக்கத்திலிருந்து அம்பலம் செல்லும் வழியை ஒருமுறை நோக்கும் எண்ணம் இளம் பாணனுக்குள் விந்து சீறியடங்கிய பின்னர் குறியை நோக்கும் …
