81: வெறுந்தேகம்
சிற்பனில் எரியத் தொடங்கிய சூர்ப்பனகையின் கொல்காம மூச்சின் தழல் கருவானில் மின்னிடும் உடுக்களில் பட்டெதிரொளித்தது. வீணையின் தொன்மையான தந்திகளில் தொல்லிசை எழுந்தது. பறைகள் ஆயிரமும் மூச்சென உயர்ந்து வெறித்தன. ஆயிரம் உடுக்குகள் தலைசிலுப்பித் தோல்கள் அதிர்ந்தன. ஈசனை எழுப்பும் இசையென்றானவையில் எழுந்தாள் சூர்ப்பனகை. சிற்பன் ஒருகணம் விழிமூடித் திறந்து ஆடலின் முதலசைவை ஊழ்கம் கொண்ட போது திருதிகாவின் மலர் முகம் மின்னிப் பூரணையென்று வானில் ஒளிர்ந்தது. விண்ணிலிருந்த ஒளிவட்டத் தண்மதியில் …
