65: பரிச்சடங்கு
அரண்மனையின் புரவிக் கொட்டிலில் கனைப்புகளின் ஒலிகள் ஆரவாரமாய் ஒலித்துக் கொண்டிருந்தன. நூற்றுக்கணக்கான காவல் வீரர்கள் நுணுகி நுணுகி நோக்கிப் புரவிகளை அலங்கரித்துக் கொண்டிருந்தனர். சூரியனின் செம்பொன் ஒளி புரவிக்கொட்டிலின் இடைகளின் ஊடாக வெள்ளப் பீறெலென வழிந்து கொண்டிருந்து. இருநாழிகையில் பரிச்சடங்கிற்கான பணிகளை ஒருக்கி முடித்தாக வேண்டும் என எண்ணிக் கொண்ட இடவர் ஏழு தேர்ந்த அரச புரவிகளை அவர் கைப்பட அலங்கரித்துக் கொண்டிருந்தார். நான்கு கரும்புரவிகளும் மூன்று வெண்புரவிகளும் அவர் …
