கல்விரல் – இந்து தமிழ்

இன்றைய தினம் இந்து தமிழ்த் திசையில் கல்விரல் பற்றி சிறிய குறிப்பொன்றை வெளியிட்டிருக்கிறார்கள். நாவலை வாசித்து அவதானிப்புகளுடன் முன் வைத்திருக்கிறார்கள். மகிழ்ச்சி.

எதிரொலிப்பு : சமகாலக் கலைக் காட்சி

1980 கள் தொடக்கம் சமகாலம் வரை ஈழத்துக் காண்பியக் கலைஞர்களின் பல படைப்புகளின் கண்காட்சி ஒன்று நாளை துவங்க இருக்கிறது. ஈழத்தின் காண்பிய மரபு பற்றிய பொதுச் சமூகத்தின் கவனம் உள்ளூரளவில் மந்தமானது. சர்வதேச அளவில் ஈழத்து காண்பியக் கலைஞர்கள் அடைந்திருக்கும் இடத்தை பற்றிய மதிப்பீடுகள் நம் மத்தியில் கிடையாது. எந்தத் துறையாயினும் அதன் வரலாற்றையும் முக்கிய ஆளுமைகளையும் சமூகம் அறியாது விடின் அதனால் வளர முடியாது. நிகழும் ஒவ்வொரு …

மூதன்னை தொட்ட மலர்

நேற்று மாலை ‘குக்கூ’ சிவராஜ் அண்ணாவிடமிருந்து ஒரு செய்தி வந்திருந்தது. ஓர் ஒளிப்படமும் குரற்பதிவும் இருந்தன. காந்தியவாதத்தின் பழுத்துக் கனிந்த தமிழ் முகமான மூதன்னை கிருஷ்ணாம்மாள் ஜெகந்நாதன் கொடிறோஸ் வாசித்துக் கொண்டிருந்தார். கண்கள் விம்ம அக்காட்சியை திரும்பத் திரும்பப் பார்த்தேன். எத்தனை களங்களைக் கண்ட கண்கள், எத்தனை பேராளுமைகளைக் கண்ட கண்கள், எத்தனை மானுட முகங்களின் துயர் கேட்டுக் கசிந்த கண்கள், எத்தனை அனலுடன் மானுடத்திற்கெனச் சினம் கொண்ட கண்கள், …

தன்னறம் விருது 2025 : ஆவணப்படம்

கடந்த வருடத்திற்கான தன்னறம் இலக்கிய விருது எழுத்தாளரும் கோட்பாட்டாளருமான சீனிவாச ராமாநுஜம் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. விருது வழங்கப்படுபவர்களைத் தன்னறம் குழுவினர் எடுக்கும் ஆவணப்படங்கள் ஒவ்வொன்றும் அற்புதமானவை. ஒவ்வொரு ஆளுமையினதும் துல்லியமான இயல்புகளையும் உடலசைவுகளையும் கைப்பள்ளத்தில் அள்ளிச் சேர்க்க முனைபவை. ஷோபா சக்தியின் ஆவணப்படம் என் மனதுக்கு மிக நெருக்கமானது. இன்றளவும் ஈழத்தில் அவரது புனைவுலகம் குறித்த முழுமையான மதிப்பீட்டை நான் உட்பட எவரும் இன்னும் எழுதவில்லை. ஒரு இரகசிய இயக்கத்தின் …

கடுதாசி நட்சத்திரம் – தர்மினி

கவிஞர் தர்மினியின் புதிய கவிதை நூலான கடுதாசி நட்சத்திரம் இம்முறை நிகழ்ந்து கொண்டிருக்கும் சென்னை புத்தகக் கண்காட்சியில் வேரல் புக்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழின் முக்கியமான கவிஞர்களில் ஒருவர். மிகச் சமகால அழகியல் கொண்டவை அவரது கவிதைகள். தமிழ்க் கவிதையில் நீரில் அலையடிக்கும் சிறு மலர்களெனச் சில கவிதைகள் தோன்றுவதுண்டு. நித்தியமான பேரழகு கொண்ட அனைத்திலும் தோன்றுவது அது. கவிதையைப் பற்றிய கூற்று ஒன்றை தேவதேவன் தனது கட்டுரையொன்றில் மேற்கோள் …

கல்விரல், சிறகை : commonfolks

சென்னை புத்தகக் கண்காட்சியில் கருப்பு பிரதிகள் பதிப்பகத்தினூடாக வெளியாகியிருக்கும் கல்விரல் (நாவல்), சிறகை (குறுநாவல்) ஆகியவற்றை இணையத்தளத்தில் வாங்குவதற்கான இணைப்புகள் கீழேயிருக்கின்றன. இந்தியாவில் வாழ்கின்ற வாசகர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். வாசகர்கள் தங்கள் கருத்துகளை மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கலாம். கல்விரல் : இணைப்பு சிறகை : இணைப்பு

முதற் கனவின் வெம்மை : பிறழ்

முதல் ஆக்கத்தை ஒரு வடிவத்தில் முழுமை செய்து அதை வெளியிடும் தருணம் அரிதானது, முதலாவது என்பதாலேயே. எனது கொடிறோஸ் எனும் குறுநாவலை முடித்த பொழுது உலகின் சிறந்த நூல்கள் இருக்கும் வரிசையில் வைக்கப்பட தகுதி வாய்ந்தது ஒன்றை எழுதி விட்டேன் என உளப்பூர்வமாக நம்பினேன். முதல் நாவலோ குறுநாவலோ கருவளவில் நம்மிடம் உருவாக்கும் தொந்தரவு அபாரமானது. ஒரு எழுத்தாளர் தன் முதற் புனைவில் தான் எதிர்கொள்வதில் மகத்தானது எனும் தொந்தரவை …

வரிக்கு வரி உண்மை

போரில்லாத காலத்தில் மன்னன் வேட்டைக்குப் போனது போல புனைவு மொழியெனும் கல்லுளியும் புனைவில் திரளும் நிலமும் சமகால ஈழ நாவல்களை வாசிக்குந்தோறும் அவற்றில் பல அடிப்படைப் போதாமைகளை உணர முடிகிறது. நாவல்கள் என்று நாம் உத்தேசிக்கும் போது அவை மிக விசாலமான பெரும் பரப்பு. அதனுள் பல வர்ண பேதங்களும், அழகியற் தரப்புகளும், வடிவ பேதங்களும் கூட உண்டு. ஆனாலும் அவற்றை எல்லாம் மேவி நாவல் எனும் கலை வடிவம் …

சிறகை, கல்விரல் – ஒரு வாழ்த்து

“சிறகை, கல்விரல் இரண்டும் சமகாலத் தமிழ் இலக்கியத்தில் முக்கியமான படைப்புகள். எல்லாவற்றையும் விலக்கி விட்டு வாசகனாகவே இச் சொல்லை இங்கே வைக்கிறேன். நாவல் அடிப்படையில் வரலாறு, தத்துவம் இரண்டினதும் கலை நிகழ்வு என்கிறார் ஜெயமோகன். இக்காலம் நாவலுக்குரியது. அதனுடைய பண்பாட்டுப் பெறுமானம் பெரியது. இம்மாபெரும் அலை எழுந்து இன்னும் நெடுங்காலம் தமிழ் இலக்கியத்தை நிறைக்கும். கல்விரல் நாவலாகவும் சிறகை குறுநாவலாகவும் அதன் உள் விரிவையும் வடிவ நிறைவையும் கொண்டவை. கதையில் …

சிறகை : வெண்மத்தகக் குவியல்

என்னுடைய முதல் சிறுகதைத் தொகுதி ஆனைக்கோடரி வெளிவந்திருந்த சமயம் இலங்கை சென்றிருந்தேன். கிட்டத்தட்ட பதினாறு வருடங்களின் பின். அத்தனை வருடங்களும் மூளைக்குள் நொதித்துக் கொண்டிருந்த நிலத்தையும் மனிதர்களையும் நேரில் எதிர்கொள்ளும் படபடப்பு விமானத்திலேயே தொடங்கிவிட்டிருந்தது. அடிக்கடி கைகளைக் கோர்த்துக் கால்களுள் இடுக்கிக் கொண்டு தடித்த யன்னலுக்கு வெளியே முடிவே இல்லாமல் விரிந்திருக்கும் நீல வானை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். என் கால்களின் கீழே வெண் மத்தகக் குவியல்கள் போல மேகக் …