Skip to content

Kirishanth

Blog

Menu
Menu

Category: Blog

Your blog category

அந்த ஆறு நிமிடங்கள்

Posted on January 11, 2025

தன்னறம் விருது விழாவில் ஷோபா சக்தி ஆற்றிய தன்னுரை வெளியாகியிருக்கிறது. ஈழத் தமிழர்களில் எவரேனும் ஒருவர் அதைப் போன்ற ஒரு நன்றியுரையை வழங்க இயலுமா என எண்ணிப் பார்க்கிறேன். வாய்ப்பேயில்லை. அந்த ஆறு நிமிடங்களென்பவை ஷோபாவின் உலகில் அன்றாடங்கள். எங்கள் நிலத்தின் அசல் முகம்.

தினசரி வாழ்வின் கவித்துவம்

Posted on January 10, 2025

தேவதச்சனின் கவிதையுலகிற்குள் என்னால் நுழைந்து அதில் வாழ முடிவதில்லை. இன்னொரு உலகு என்ற எண்ணமே இப்போதுமிருக்கிறது. சபரிநாதனின் இந்த உரை தேவதச்சனின் கவிதையுலகை அதற்கு வெளியே இருப்பவர்களும் தொட்டு உணர்ந்து கொள்ளும் படி படர்கிறது. சபரி நிறையப் பேச வேண்டும் என எண்ணுகிறேன். கவிதைகளை…

இளம் எழுத்தாளர்களுக்கு

Posted on January 8, 2025

ஓர் இளம் எழுத்தாளனாக இலக்கியம் அளிக்கும் சவால்களை ஓயாது எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அது அறிதலின் இன்பம். எழுதுதலின் குன்றாத வேட்கை. ஜெயமோகனின் இந்தக் காணொலி இளம் எழுத்தாளர்கள் பற்றியிருக்கும் அவநம்பிக்கையையும் சலிப்பையும் அதிலிருந்து மீளும் வாசல்கள் பற்றிய திறப்புகளையும் சுட்டுவது. அறிதலும் காலமும் மாறிக்கொண்டேயிருப்பது….

அகவிழி : ஆவணப்படம்

Posted on January 7, 2025

அகவிழி ஆசிரியையான சரஸ்வதி அவர்கள் நான்கு வயதிலிருந்தே கண்பார்வை இல்லாதவர். சென்னை ஜமீன் பல்லாவரத்தில் அமைந்துள்ள பார்வையற்றோருக்கான பள்ளியில் கடந்த 14 வருடங்களுக்கும் மேலாக, மேல்நிலை வகுப்பு (11 மற்றும் 12) மாணவ மாணவிகளுக்கு ஆங்கிலப் பாடம் போதிக்கிறார். பிரெய்ல் முறையில் கற்பிக்கும் அகவிழி…

வையம் : இதழ்

Posted on January 6, 2025

தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் வையம் இலக்கிய மாத இதழில் அவயமிழந்தவர்கள் பற்றிய கவிதைகளின் தொகுப்பு ஒன்று இம்மாத இதழில் வெளியாகியிருக்கிறது. எனது ‘தொடுகை’ என்ற கவிதை இதழின் தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது. சேரன், கருணாகரன், தீபச்செல்வன் ஆகியோரது கவிதைகளும்  வெளிவந்திருக்கின்றன.

கீதை : பேருரை

Posted on January 4, 2025

கீதைக்கான நாடகீயத் தருணத்தால் அது மதிப்பு மிக்கதாக ஒரு கலையாக்கத்தில் இடம்பெறுகிறது என்ற கருத்து முக்கியமானது. அரசியல் சரிநிலைகளுக்கு அப்பால் ஒரு நூலை அதன் வரலாற்று, தத்துவ, மெய்யியல் பார்வையில் வைத்து நோக்குவதும் முக்கியமானது. ஜெயமோகனின் இந்தப் பேருரைத் தொடர் கீதையை என்று மட்டுமல்ல….

புத்தகம் வாங்க..

Posted on January 1, 2025

எனது கவிதைத் தொகுப்பான வாழ்க்கைக்குத் திரும்புதலை தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ள குயின்சி புத்தகசாலையில் வாசகர்கள், நண்பர்கள் பெற்றுக் கொள்ளலாம். பிரதி ஒன்றின் விலை 1000 rs.

அனார் : சில குறிப்புகள்

Posted on December 30, 2024

உணர்வுக்குள்ளே மலையும் வனமும் பிரபஞ்சவெளியும் உண்டு! அனார், அச்சிறு கண்களின் வழி என்னுலகத்தை நிரப்பி அள்ளிக்கொடுக்கும் தாய்மையின் கருணை. தன்னைக் கண்டடைதலின் பிரகாரம் வாழ்வில் ருசிகொண்டவோர் மந்திரப்பேழை. கவிதையின் மொழிகளுக்குள் தழைத்து வாழ்வென்றாகியிருக்கும் இவ் உயிரைத் தூக்கிச்சுமக்கும் துணிவையும், தைரியத்தையும் தன் எழுத்துக்களின் வழி…

ஷோபா சக்தி : உரையாடல்

Posted on December 29, 2024

தன்னறம் விருதுகளின் போது விருது பெறுபவர்களின் நேர்காணல் வெளியாவதுண்டு. அவை அந்த எழுத்தாளுமையின் குரலில் அவரது வாழ்வைக் குறுக்கும் நெடுக்குமாய் விபரிப்பது போன்றவை. இவ்வருடம் விருது பெற்ற ஈழத்து எழுத்தாளர், நடிகர் ஷோபா சக்தியுடன் தன்னறம் குழுவினரின் நேர்காணல்.

குறுந்தொகை : ஜெயமோகன் உரை

Posted on December 28, 2024

ஜெயமோகனின் சங்கச் சித்திரங்கள் நூல் சங்க இலக்கியத்தை வாசிக்கும் புனைவெழுத்தாளனின் நுண்மையான தொடுகையிலிருந்து பிறந்தது. சங்க இலக்கியம் ஒரு புதையல் சுரங்கம் போன்றது. அதற்கு மரபான வாசிப்பு இலக்கண வரம்புகளாலான ஒற்றைப் பெரும் வாயிலைக் கொண்டிருந்தது. நவீன எழுத்தாளர்கள் அதைச் சுகிப்பதற்கான பல வாயில்களை…

Posts pagination

Previous 1 … 8 9 10 … 12 Next
  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு

வாசிக்க

  • அஞ்சலி : நன்மிளிர் (2,169)
  • சுரண்டலெனும் கலை: எதிர்வினையும் பதிலும் (1,999)
  • காதலின் முன் பருவம் (1,997)
  • சராசரிகளுடன் உரையாடுதல் (1,907)
  • விடுதலையில் கவிதை (1,890)
  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு
©2026 Kirishanth | Design: Newspaperly WordPress Theme