Skip to content

Kirishanth

Blog

Menu
Menu

Category: அழிகளம்

80: விழவின் தெய்வம்

Posted on August 2, 2024

“எண்ணுவதே இறையென்றாகுவது. இறையின்றி இருத்தலும் எண்ணமே” என்றார் வேறுகாடார். இளம் பாணன் நாகதேவி ஆலயத்தின் மாபெரும் சிற்பங்களையும் நாகமென்ற ஒற்றை உயிரியின் எண்ணற்ற மடிப்புகளையும் புடைப்புகளையும் உக்கிரங்களையும் சாந்தங்களையும் வேட்கைகளையும் நெளிதல்களையும் அமைதல்களையும் அங்கற்று இருப்பதென்ற மயக்குகளையும் நோக்கிக் கொண்டிருந்தான். “இளம் பாணனே. இங்கிருப்பவை…

79: மாயச்சிறகுகள்

Posted on August 1, 2024

நீலழகன் பொற்தேரில் குருளையெனப் பாய்ந்து ஏறுவதை நோக்கிய தமிழ்ச்செல்வன் புன்னகை மீண்டான். ஒவ்வொரு முறை நீலன் உடலும் உளமும் சோர்ந்து நோயுறும் போதும் ஓரிழை புன்னகை தமிழ்ச்செல்வனிடமிருந்து உதிருவதை எவரும் அறியார். இரவின் மாயப்போர்வை பட்டினத்தை மூடுவதை தலையுயர்த்தி நோக்கியவன் தீப்பந்தங்களும் வெளிச்சத் தட்டுகளும்…

78: காலத்தூண்

Posted on July 31, 2024

விண்மீன்களின் முதல் விழிகள் ஒரு இமைப்பிற்குள் பல்லாயிரமென வானைச் சுடர்த்தன. விண்யாழி ஒவ்வொரு விண்மீனும் விழிப்பதைக் குழந்தைக் கண்களால் நோக்குபவளென வியப்புக் கொண்டிருந்தாள். முதல் நாள் களிவிழவை செருக்களத்தில் வித்தான மாவீரர்கள் விண்மீன்களாய் விழிகொண்டு நோக்குவர் என்பது குடி நம்பிக்கை. அன்று வானில் கோடிகோடியாய்…

77: வட்ட மலர்

Posted on July 30, 2024

ஆழ்பிலவென நெடுநீட்டகம் கொண்டிருக்கும் அரசு சூழ்தல் கற்றவர்களின் உதட்டில் ஓயாது ஒளிரும் புன்னகைக்கு எப்பொருளுமில்லையெனப் பொன்னன் எண்ணினான். தமிழ்ச்செல்வன் பிடிகோலில் இடக்கரத்தை ஊன்றி அடிவேர் சாய்ந்து நிற்கும் தென்னையென அமைச்சர்களின் தேரில் வளைந்திருந்தார். அவரது முகத்தின் புன்னகையை நோக்கிய குடிகள் அவை தான் அந்த…

76: களித் தோழியர்

Posted on July 29, 2024

“களிப்பெருக்கையே மானுடர் முதன்மையாக விழைகின்றனர் என்பது பொய் இளம் பாணனே. இங்கு நீ காணுகின்ற ஒவ்வொருவரும் அடையும் களிக்கு அதன் மரக்கிளைகளையும் கனிகளையும் பூக்களையும் இலைகளையும் விட ஆயிரக்கணான துயர்கள் மண்ணினுள் ஆழத்து ஆழங் காண வேர்கொண்டு பரவி நிற்கின்றன. இருளின்றி ஒளியை அறியமுடியாதைப்…

75: பவனி

Posted on July 28, 2024

அமைச்சர்கள் முன்னிரையில் ஒருங்கியதும் சிறு முரசுகள் மும்முறை எழுந்தணைந்து விம்மின. சூரியன் பொற்தேரில் வந்தமைந்து தழல் முகம் எழுந்தது. ஒவ்வொரு வளைவும் புடைப்பும் சிற்பங்களும் மலர்ச்சரங்களும் ஒளித்தழல் சூடின. சூர்ப்பனகர் செருமியபோது தமிழ்ச்செல்வன் குனிந்து “அனைத்தும் ஒருங்கி விட்டன பேரமைச்சரே. இன்னும் சிலகணங்களில் அரசரும்…

74: அணியறை : 02

Posted on July 27, 2024

பேராடி அதிகனவெனத் தன்னைத் தான் விரித்துக் கொள்ளும் மாதோகையில் வண்ணங்களினாலும் மினுக்குகளாலும் சூழ்ந்தெழுந்திருந்தது. பதும்மை நோக்கிழக்காமல் உற்று நிற்பதை அடியாழத்தில் ஓர் பனிப்புல்லின் நுனித்தீண்டலென உணர்ந்தாள் விருபாசிகை. நலுங்கியவளின் முகம் சிரித்து உருகுவது போல் விரிந்தது. பதும்மை போதம் மீண்டு மெல்லக் காலடிகள் கொண்டு…

73: அணியறை

Posted on July 26, 2024

தேர்ச்சில் கழல்வது போல் உருண்டு ஆழியின் மேலே தங்கக் கனியெனத் தனக்குள் தான் உருகிக் கொண்டிருந்தது பரிதி. கடற் பறவைகள் கூட்டமாக ஒலியெழுப்பிக் கொண்டு கரை நண்டுகளைக் கொத்திப் பறந்து கொண்டிருந்தன. மேகங்களில் பரிதி சிந்திய வண்ணங்கள் ஊறி ஊறி ஒவ்வொரு குவையும் அதிகனவில்…

72: மலைமேல் பனி : 02

Posted on July 25, 2024

“நீர்க்குமிழியின் காற்றை வெளியிருக்கும் காற்று வந்து தொட்டுத் திறப்பது எங்கென அறியாமுடியாததைப் போல் முதுவிறலியின் சொற்கள் எனது அகத்திற்குள் நுழைந்தன. அவரின் சொற்கள் காதலின் நீர்மையின் பலவடிவ பேதங்களை உருமாற்றி உருமாற்றி உண்டாக்கின. நெருப்பில் உறையும் நீரென்ற சொல்லிலிருந்து அவர் எழுந்தார். விழிகள் தீக்கங்குளென…

71: மலைமேல் பனி

Posted on July 24, 2024

ஒருவரை ஒருவர் முழுதுள்ளத்தால் ஒருமுறையாவது முழுதுவெறுக்காத காதலர்கள் புடவியில் இல்லை என எண்ணிக் கொண்டான் மாதுளன். எல்லாக் காதலின் விதையிலும் எதனாலோ தீர்மானிக்கப்பட்ட ஒருதுமிக் கசப்பும் அளிக்கப்படுவது காதல்நெறியென யாரோ குடிமயக்கில் சிற்பக் கூடத்தில் உளறிய சொற்கள் அவனை ஈக்களென வந்தறைந்து கொண்டிருந்தன. நிலவையின்…

Posts pagination

Previous 1 … 5 6 7 … 13 Next
  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு

வாசிக்க

  • அஞ்சலி : நன்மிளிர் (2,171)
  • சுரண்டலெனும் கலை: எதிர்வினையும் பதிலும் (2,009)
  • காதலின் முன் பருவம் (2,000)
  • சராசரிகளுடன் உரையாடுதல் (1,910)
  • விடுதலையில் கவிதை (1,891)
  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு
©2026 Kirishanth | Design: Newspaperly WordPress Theme