பணிவும் அகங்காரமும்

என்னிடமிருப்பது ஈடில்லாத ஒரு அகங்காரம். இன்னும் ஒன்றுமே குறிப்பிடும் படி நீ எழுதவில்லை உனக்கெதுக்கு இந்த ஆணவம். நீ உன் அகங்காரத்தாலேயே அழியப் போகிறாய். பணிதல் ஒரு நற்குணம் போன்ற பல பரிந்துரைகளை அண்மைக்காலமாக வழக்கத்தை விட அதிகமாகவே நண்பர்கள் சொல்லி வருகிறார்கள். உனது நன்மைக்குத் தான் சொல்கிறேன். பலரும் இப்படி அபிப்பிராயப்படுகிறார்கள் என்று சற்றுத் தயங்கிய முறையில் சொல்பவர்களும் உண்டு. நான் எவ்வளவு அகங்காரம் கொண்டவனோ அதேயளவு பணிவும் …

முத்தித்தழுவி

ஒரு வாழ்கதையின் உச்ச தருணத்தைக் கவிதைக்குள் கதையென நிகழ்த்த இயலும். சபரிநாதனின் இக்கவிதை ஒரு கடலோடியின் கதை. அதனுள் ஒரு கவிஞனான சபரி சென்று தொடக்கூடிய எல்லை என்ன என்பது தான் என்னை ஈர்ப்பது. ஒரு தருணத்தைச் சுழலும் அலைக்குள் மூழ்குபவனைப் போல மூழ்கவிட்டு அலைகடந்த பின் எழுந்து நிற்க வைப்பதைப் போன்ற மயக்கின் நொடிகளை மொழிக்குள் உண்டாக்குவதே கவிஞர் ஒரு கதையைக் கவிதையாக நிகழ்த்தும் பொழுது நிகழ்த்த வேண்டிய …

தீ மல்லிக் கொத்தே!

தன் சிறுவெண் பற்களைத் துலக்கிய பின் ஈறு தெரியச் சிரித்துக் காட்டும் குழந்தையைப் போல ரஜிதாவின் சொற்கள் விரிந்திருக்கின்றன. இவ்விரு கவிதைகளின் வரிகளும் குழந்தையின் அளந்தெடுத்த பல்முத்துக்கள். சொல்லிணைவுகளில் உள்ள பித்துநிலை கவிதையை வைர ஊசிகளென மினுக்குகின்றது. பொற்சிலைகருவிருந்த மலை படியளந்தாய் நீல இரவின்பனிப்படிவு துளிரும் அன்றிலும்தீரத் தீர செவ்விதழ் பொழி சாலை. * பற்றியவான் திரி சுண்டுவிழிப் பிரம்புபாய வேட்டைநாய்உறுமும் சிரை. எரிஎன்னை தீ மல்லிக் கொத்தே! ரஜிதா

எங்கிருந்து பார்ப்பது

யாழ்ப்பாணத்தில் நடந்த இமிழ் கதைமலரின் அறிமுக நிகழ்வில் நான் ஆற்றிய உரை இலக்கியச் சூழலில் வாழ்த்தப்பட்டும் விமர்சிக்கப்பட்டும் வருகிறது. வாழ்த்துகளை ஒருபுறம் வைத்து விட்டு, விமர்சனங்களையும் கேலிகளையும் சில அன்பான பரிந்துரைகளையும் கவனத்தில் எடுக்கலாம். முதன்மையாக எழுந்த சிக்கல் எனது திமிர்த்தனமான தெனாவெட்டான இலக்கிய ஞானம் சொட்டுகின்ற உடல்மொழி. சிலரால் கேலியாகவும் சிலரால் அன்பான முறையில் பணிவற்றதோ அல்லது அவையடக்கமற்றதாகவோ கருதப்படுகிறது. எனது கவிதைகள் சில உள்ளடக்கப்பட்ட கூட்டுத் தொகுப்பான …

பிணக்கு

தெய்வங்களுடன் கோபித்துக் கொள்வது அம்மாவின் வழக்கம். நேர்த்திகள் வைப்பது, சந்நிதிகளில் புலம்புவது, இறைஞ்சு நிற்பது, கதைத்துக் கொள்வது அம்மாவின் இயல்பு. பெரும்பாலும் பெண் தெய்வங்களுடன் தான் பேச்சு வார்த்தையும் ஒரு உரிமையும் இருக்கும். ஆயிரந் தான் இருந்தாலும் பெண்ணுக்குப் பெண் தானே உதவி! ஆனந்த்குமாரின் பதில் என்ற கவிதையை வாசித்த போது அம்மாவின் பிணக்குக் காலங்களை நினைத்துக் கொண்டேன். அந்தப் பிணைப்பில் உள்ளது ஒருவகையில் தாய் – மகள் உறவு. …

ஈழமா? தமிழீழமா? : ஒரு கடிதம்

“தும்பி” சிறுவர் இதழ் குறித்த உங்கள் சமீபத்திய பதிவு ஒன்று அவ்விதழ் ஈழத் தமிழர்களுக்கு ஏன் முக்கியம் என்பதாக ஆரம்பிக்கிறது. இந்த ஈழத்தமிழர் என்கிற பிரயோகம், முஸ்லிம்கள் மற்றும் இதர சிறுபான்மைச் சமூகங்களைப் பொருட்படுத்தாத ஒன்றாக அமைகிறது என்று ஒரு குற்றச்சாட்டு உங்கள் பதிவை குறித்து எழுந்திருக்கிறது. இது குறித்து உங்கள் பார்வை என்ன? வேனிலினி * வணக்கம் வேனிலினி, நான் ஓர் ஈழத் தமிழ் எழுத்தாளராகவே பண்பாட்டு வெளியில் …

முதுவான் கவிதைகள்

உலகிலே பேசப்படும் மொழிகளிலெல்லாம் காதல் அரும்பவும் தழைக்கவும் பூக்கவும் கூடிய யாவிலும் உள்ள பொதுத்தன்மைகள் மாறாது. காதல் எங்கு பூப்பினும் அதன் சுகந்தம் பரவிக் கொண்டேயிருப்பது. ஆதார விசைகளில் காதல் உண்டாக்கும் மாயங்கள் ஒன்று போலவே தோன்றுவது மானுட இயல்பு. கேரளப் பழங்குடிகளில் பதினொரு மொழிகளில் பதினெட்டுக் கவிஞர்களின் கவிதைகளை நிர்மால்யா மொழிபெயர்த்து தன்னறம் பதிப்பக வெளியீடாக ‘கேரள பழங்குடி கவிதைகள்’ எனும் பெயரில் வெளிவந்திருக்கிறது. இத் தொகுப்பில் அசோகன் …

மிடிமை

கவிஞர்கள் இவ்வுலகின் மிடிமைகள் மீது கொள்ளும் கோபமென்பது இல்லாமையின் மீது உருவாகும் அனல். கவி தன் சொற்களில்லாத வேளையில் மாபெரும் இன்மையில் உழல்பவர். இல்லாமை கொன்று போடும் கோபத்தின் எல்லைக்குச் செல்வது பாரதியின் சொற்களிலும் வழிவது. தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்ற கோரிக்கையில் என்ன நியாயம் இருக்க முடியும். ஒருவனுக்காக அனைத்தையும் அழிப்பதா! யூமா வாசுகியின் தீராத கணக்கு கவிதையில் உள்ள கனல் பாரதியின் …

குறையொன்றுமில்லை…

நவீன தமிழில் குழந்தைகளைப் பற்றி எழுதப்படும் கவிதைகளை கூர்ந்து அவதானித்து வருகிறேன். கவிகளின் மனதளவில் மிக அதிகமான குழந்தைகள் பழைய தத்துவார்த்தச் சுமைகள் நீங்கி பையப் பைய நடந்து வந்து சிரிப்புக் காட்டி, தம் ஆசைகள் விரித்துப் பறக்கிறார்கள். போகன் சங்கர், ஆனந்த் குமார், சபரிநாதன் மூவரதும் கவியுலகில் உள்ள குழந்தைகளின் தன்மைகள் அவர்களால் ஈடேறும் கவித்துவ உண்மைகள் முக்கியமானவை. * நண்பரின் மகள்ஒலி நீக்கம் செய்யப்பட்டஒரு உடலுக்குள்இருபதாண்டு காலம் …

கல்லெழும் விதை: ஒரு உரை

தும்பி இதழின் நிறுத்தம் பற்றிய செய்தி இரவு முழுவதும் மனதிற்குச் சோர்வளித்துக் கொண்டேயிருந்தது. இச்சோர்வு எனக்கு அவசியமற்றது போல் தோன்றினாலும் உள்ளத்தின் சக்கரங்கள் உருளவில்லை. அவை திரும்பத் திரும்ப ஒரே பூவில் சுற்றும் தும்பியென வட்டமடித்துக் கொண்டிருந்தது. இச்சோர்வை உதறியாக வேண்டும். எவ்வகையிலும் மனம் ஏதாவதொரு இழப்பை, துயரை பெரிதென ஆக்கிக் கொண்டு சோர்வை விழையக் கூடும். இவ்வகைச் சுழல்களுக்குள் நான் பலதடவைகள் சிக்கியிருக்கிறேன். ஒரு உந்தல் கிளர்ந்தால் போதுமான …