குழந்தை கண்ட மின்னல்

கவிதை மொழியின் கலை. இருட்டில் ஆயிரணக்கான மின்மினிகள் இருளின் கண்களென ஆகி எங்களைப் பார்ப்பது போல் கவிதை வரிகள் அகத்தில் விழித்துக் கொள்வன. அன்றாட வாழ்விலிருந்து மேலெழும் மின்மினிகள் எவ்வளவு உயரம் பறந்திடல் கூடும்? வானமோ பிராகசம் மிக்க விதானம். அதற்கு அப்பாலும் வெளி தான். மானுடரின் எளிய சொற்கள், அவ்விதானத்தையும் அதன் மேற் திறந்துள்ள பிரபஞ்ச வெளிகளையும் அறியும் பொருட்டு, கண்ணை மூடிக் கொண்டு மாபெரும் கலயத்துள் கைதுழாவும் …

பிறழ்வுகளின் தெய்வம்

ஒரு மரபில் கனவுகளிற்கான தெய்வங்கள் நிகழ்வதைப் போல பிறழ்வுகளுக்கும் தெய்வங்கள் நிகழ்கின்றன. மொழிக்குள் வாழும் கோடிக்கணக்கான மனித மனங்கள் தத்தம் தெய்வங்களை அறிந்து தம்மை அத்தெய்வங்களின் சந்நிதிகளில் ஒப்படைப்பார்கள். கனவுகளின் தெய்வங்கள் கொண்டாட்டமான திருவிழாக்களை மானுடருக்கு அளிப்பவை, அதே நேரம் பிறழ்வுகளின் தெய்வமோ நம்மில் ஒரு பகுதியை வெட்டித் தமக்குப் படையலிட்டாலே தோன்றக் கூடியவை. மானுடரில் பிறழ்வுகள் என்பவை மீறல்கள். தெய்வீகம் என்பதொரு தற்செயல் என்பதைப் போலவே பிறழ்வுகளும். அது …

கனவுகளின் தெய்வம்

எந்த விடுதலைக்கான மொழியும் கேள்விகளிலிருந்தும் சீற்றங்களிலிருந்துமே அடிப்படையில் எழும். பின்னர் அவ்விடுதலை தன் கனவைத் தானே கண்டாக வேண்டும். ஒரு ஆன்மீக விடுதலை அடிப்படையில், இந்த வாழ்வு எதன் பொருட்டுப் பொருள் கொள்ளத் தக்கது? இதற்கு என்ன மதிப்பு? நான் என்பது என்ன? இவற்றுக்கெல்லாம் என்ன அர்த்தம்? இது போன்ற சீற்றமிகு ஆதாரக் கேள்விகளிலிருந்து உருவாகுவது. சீற்றம் ஒரு தொடக்கம் மட்டுமே. பின்னர் அது தன்னில் கனிய வேண்டும். அனாரின் …

உடுக்கொலியும் பறையும்

விடுதலைப்போராட்டத்தின் உள்ளோடும் உணர்ச்சிகள் வெளிப்படும் மொழி ஒருவகையில் சன்னதமும் உருவும் கொண்டது. அதற்குத் தன் மொழியை வெகுசன மொழியையும் பைபிளினதும் உரைநடையினதும் கூர்மையான சில இணைவுகளைப் பயன்படுத்தி தனக்கென ஒன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டியிருந்தது. உள்ளூர்த் தன்மையும் பரிசோதனையும் இணையும் வெளியில் நிலாந்தனின் மொழி கருக்கொண்டது. நிலாந்தனது கவிதைகள் பெரும்பாலும் நெடியவை. மனிதர்களுடைய அலைச்சலையும் துயரையும் போலவே. அவரது நெடுங்கவிதைகள் நெடுக உருவேற்றும் மொழிச்சந்தமொன்று நிகழ்ந்தபடியே இருக்கும். அது ஓடும் …

ஒரு நிலவுருவில் மூன்று மொழியுடல்கள்

ஜெர்மனி நாட்டின் கலாசார அமைப்பின் பெயர் Gothe institute. ஈழத்தில் பிறந்து அகதியாக அந்த நாட்டுக்குச் சென்று, படித்து, ஜெர்மானிய மொழியில் எழுதும் எழுத்தாளர் செந்தூரன் வரதராஜா. இவரது முதலாவது புத்தகம் பெரும் வரவேற்பையும் அந்நாட்டின் உயர் விருதையும் பெற்றது. அவருடனான கலந்துரையாடல் ஒன்று சமகாலக் கலை, கட்டடக்கலை மற்றும் வடிவமைப்புக்கான ஆவணக் காப்பகத்தில் சில வருடங்களின் முன்னர் நடைபெற்றிருந்தது. அப்போது அவருடன் அறிமுகமாகி நண்பர்களானோம். சில காலங்களின் பின், …

சிறு நாவுகளின் தொடுகை

கறையான்கள் தன் எச்சிலால் உண்டாக்கும் புற்றின் மண்ணைத் தொட்டெடுக்கும் ஈரம் பல்லாயிரம் சிறு நாவுகளின் தொடுகை. அதிலிருந்து ஒரு மாபெரும் புற்று உருவாகிறது. அதனுள் பல்லாயிரம் உயிர்கள் வாழும். அது உறைந்து நின்று மண் மேல் சிற்றுயிர்கள் ஆக்கிய மலையென வளரும். ஒரு மொழியில் கவிதை பல்லாயிரம் நாவுகளின் தொடுகையால் ஈரம் கொள்ளும் சொற்களை உறைய வைத்து உண்டாகும் சொல்மலை. அதன் ஒவ்வொரு அமைப்பையும் அங்குள்ள மனிதர்களின் தன்மைகளும் தேர்வுகளுமே …

உருக்கும் நெருப்பின் கண்ணீர்

யுத்தம் நிகழ்ந்து கொண்டிருந்த தொண்ணூறுகளின் பிற்பகுதியில் தனித்து ஒளிரும் குரலொன்று நமது மொழியில் நிகழ்ந்தது. அதுவரையிருந்த மொழியடுக்கினைத் தனது கனவால் வேறொன்றெனத் திரட்டியது. அதிகாரம் கொப்பளிக்கும் இச் சமூகத்தின் மனசாட்சியை சிலுவையிலறைந்தது. எஸ் போஸ் என்கிற சந்திரபோஸ் சுதாகர் தான் அந்த மகத்தான கவிஞர். எஸ்போசின் மொழி ஒரு பழஞ்சுரங்கத்தைப்போன்றது, அதற்குளிருந்து மந்திரம் நிறைந்த வார்த்தைகளை எடுத்துவைத்து ஓர் பிரமாண்டமான வாழ்க்கையை அவர் நம்முன் நிகழ்த்திக்காட்டுகிறார். அவரது கவிதைகளுக்குள் நுழையும் …

திராவகத்தின் மொழி

ஆவேசம் கவிதைக்குள் புயற் காற்றின் கண்ணென உறைகையில் கலை நிகழும் எழுத்துகள் ஆழியாளினுடையவை. பெண் மனம் அனுபவிக்கும் உலகத்தில் ஆவேசம் ஓர் எதிர்கொள் முறையென எழுதப்பட்டே வருகிறது. அவை அம்மனங்களின் நீதியுணர்ச்சியிலிருந்தும் அன்றாடத்தின் அவநம்பிக்கையிலிருந்தும் எழுந்து இன்னொரு புறவுலகை உருவாக்குகின்றன. அது பெண்கள் உரத்துப் பேசும் உலகம். இலக்கியத்திலும் பண்பாட்டிலும் அதற்கு முக்கியமான பங்களிப்புண்டு. எவ்வளவு ஆவேசமாகவும் அம்மொழி நிகழலாம். ஆழியாளின் கவிதைகளில் உள்ள முக்கியமான அம்சம் ஆவேசம். அவரது …

ஆதித் தூசு

போகன் சங்கரின் மொழியுலகிற்கு அலாதியானது என்று பெயர். அதற்குள் யாரும் எதுவும் சுந்தந்திரமாக வந்தும் வாழ்ந்தும் விலகியும் செல்லலாம். மனிதர்களின் அக உலகின் வினோதங்களை எழுதும் பொழுது, தோற்பாவைக் கயிறென அவர் விரல்கள் மொழியை ஆட்டுகின்றன. அவரது கவிதைகளில் உள்ள சுயவிசாரணை எனும் பாவனை சாதரண வாசகருக்கு எரிச்சலையும் கோபத்தையும் மூட்டக்கூடியது. அவை பரிகாசத்தினதும் எள்ளலதும் உணர்கொம்புகள் கொண்டவை. அதனால் சராசரி அரசியல் சரிநிலைகள் கொண்டவர்களின் அறிவு மூர்க்கமாகச் சீண்டப்படும். …

நறுங்காற்றின் இசை

ஈழத்தின் முதலாவது பெண்ணிய அலையின் முக்கியமான கவிஞர்களில் ஊர்வசியும் ஒருவர். 1980 களின் முன்னும் பின்னுமென நிகழ்ந்து வந்த சமூக அசைவுகளின் வழியாவகவும், உருவாகி வந்த பெண் என்ற தன்னிலையின் சிக்கல்களை உரையாடும் வெளியும், பல்வேறு ஆக்கங்களை எழுதும் செயற்படும் காலத்தை உதிக்க வைத்தது. பெண்கள் சந்ததி உற்பத்திச் சாதனம் மட்டுமல்ல. அவர்களது உழைப்புகளிலிருந்து விடுதலையும் சம உரிமைகளும் அகத் தேவைகளும் விரிவாக உரையாடப்படத் தொடங்கிய காலமது. சொல்லாத சேதிகள் …