முதற் குட்டி

வீட்டிலிருந்த எல்லாவற்றிலிருந்தும்
அம்மாவை எடுத்து வெளியே வைத்துவிட்டேன்.

பக்கத்து வீட்டிலிருந்து கசிந்த
சாம்பிராணிப் புகையின்
நுனியில் அவள் இருந்தாள்

எங்கும் எப்போதும் கைவிடமாட்டேன்
என்று குடிகொள்பவள் போல

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக
முதற் குட்டி பிறந்தது முதல்.

(2024)

சிற்பம் : Venus of Willendorf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *