வாழ்க்கைக்குத் திரும்புதல்: 12 புத்தகங்கள்

எனது முதற் கவிதைத் தொகுப்பு குமாரதேவன் வாசகர் வட்ட வெளியீடாக வெளிவந்திருக்கிறது. நூல் வடிவமைப்பு மற்றும் அச்சாக்க உதவிகளைக் குக்கூ சிவராஜ் அண்ணாவும் சந்திரசேகர், பாரதி முதலிய குக்கூவின் நண்பர்கள் தொடக்கம் பெயரறியாத பலரும் இவ்வெளிவரவுக்கு உதவினர். உள் வடிவமைப்பினை கல் ஆலும், அட்டைப்பட வடிவமைப்பினை இரா. தியாகராஜனும் வடிமைத்திருக்கிறார். தன்னறம் வெளியீடுகளின் அச்சு நேர்த்தியும், நூலுருவாக்க ஊழ்கமும் நான் பெரிதும் மதிப்பது.

தமிழ்நாட்டில் இருந்து ஈழத்திற்குப் புத்தகங்களைச் சேர்க்க சிராஜுதீன் தோழர் உதவினார். கப்பல் மூலமே புத்தகங்கள் வரவிருப்பதால் ஒரு மாதத்திற்கு மேல் தான் ஈழத்தில் புத்தகத்தைப் பெற முடியும். நேற்றைய தினம் சிராஜுதீன் தோழரின் நண்பரொருவர் சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் வந்த போது சிறு பகுதிப் புத்தகங்களைக் கொணர்ந்தார். அதில் ஏற்கெனவே சொல்லி வைத்திருந்தவர்கள் போக, மிகுதியாகப் 12 புத்தகங்கள் உள்ளன.

புத்தகத்தை வாங்க விரும்பும் நண்பர்கள் மின்னஞ்சல் மூலம் (Kirishanth300@gmail.com) உங்கள் முகவரியை அனுப்பி வையுங்கள். வங்கிக் கணக்கிலத்தை அம்மின்னஞ்சலுக்கு அனுப்புகிறேன். ஒரு நூலின் விலை 1000 ரூபாய். இப்பொழுது வந்த புத்தகங்கள் நண்பரால் கொண்டுவரப்பட்டதால், தபாற் செலவின்றி இப்புத்தகங்களை அனுப்பி வைக்க முடியும். பணம் வைப்பிலிட்ட சிட்டையை நீங்கள் அனுப்பிய பின் புத்தகத்தைத் தபாலில் சேர்ப்பிக்கிறேன். தமிழ்நாட்டில் சில நாட்களில் கிடைக்கும். அதன் தகவல்களைப் பின்னர் அறிவிக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *