யாழ்ப்பாணத்தின் பக்கத்தில் ஒரு மினி நகரம் தான் திருநெல்வேலி. செல்லமாக தின்னவேலி என்று அழைப்பார்கள். இங்கே மிடில் கிளாஸ்தான் ஆதிக்கம் அதிகம். பெரும்பாலும் வியாபாரிகள், அரச உத்தியோகத்தர்கள், வங்கிகளின் மற்றும் தனியார் கம்பனிகளின் கொத்தடிமைகள் என்று நகரமே பரபரப்பாகதானிருக்கும். ஸ்பெஷலாக சொல்வதென்றால், தின்னவேலி மார்க்கெட்…
கூடற் காலம்
தாழிடா ஜன்னலில் மின்னலின் வெளிச்சம்மயங்கும் உடல்களில் போதையின் நடனம். அருந்தமுத்தத்தின் முதற் தீர்த்தம். பேரொளியின் நிலவு வதனம். இம் மழையின் கரிப்பு நீஇச் சுவையின் நாவு நான் தானாய்க் காயவிடு இவ்விரவை. (2019)
வணக்கப் பாடல்
மூதக் கிழவியொருத்திஓங்கிய வானம் போய்தூர விழுந்ததடி காயும் கதிர் விரிவே. உழு நிலமே ; கனற் கன்றேநுனித்த மார்பே ; பசுந் தோலேகூந்தற் குலைவே ; குயில் இளம் பாட்டேகாமக் கிழங்கே கொல் நெருப்பே ; குளிர் இரும்பே வடியுதடி பாத்திரச் சோறு. விடைத்த…
தொடக்கம்
குமாரதேவன் வாசகர் வட்டத்தின் தொடக்க நிகழ்வும் அவரது நினைவுப் பகிர்வும் கன்னாதிட்டியில் உள்ள சண்முகம் சைவக் கடையில், அவரது பிறந்த தினமான 10. 12. 2023, மாலை 5.30 மணி தொடக்கம் 7 மணி வரை, அவரது உறவினர்கள், கடை ஊழியர்கள், நண்பர்கள் இணைந்து…
என் தந்தையின் வீடு
வெளிச்சம் கொள்ள நேராத வீடுகள்காத்திருக்கின்றன.என் தந்தையிடமிருந்து எனக்குஎன்னிடமிருந்து இன்னொருமுறைஎன் மகனுக்கு. மகனே,உன் தந்தையின் வீட்டை நீ அறிவாயா? உன் பட்டினங்களின் பாதைகளை,கைவிடப்பட்டவர்களுக்குப் பிளந்து வழி விடாதநந்திக் கடலிடம் கேள்உலோக மழை கொட்டிய இரவில்அங்கு தான் உன்னைத் தலையில் சுமந்து வந்தேன். ஆனால் இப்போதுஉன் பட்டினங்களிடம்…