63: நினைவாலயம்

காவற் தகடுகள் வனவிலங்குகளிடம் கையளிக்கப்பட்டு சடங்குகளை முடித்த பின்னர் மேனியால் வழியும் வியர்வையூற்றைக் காற்றில் நனைந்து கொட்ட விட்டுவிட்டு பெருமரங்களினது நிழல்வழிச் சாலையில் குடிகளின் நிரைகளினூடாக நாகதேவி கோவிலை நோக்கிக் காவற்படையினருடன் நடந்து சென்று கொண்டிருந்தார் ஆடற் சித்தர். அந்தியில் நிகழவிருக்கும் சிற்பனின் ஆடலுக்கான அம்பலம் பனங் குற்றிகளால் அரைப்பனையளவு உயரத்திற்கு அடுக்கப்பட்டு அதன் மேல் இளங் கன்னம் போல் வாளிப்புடன் சீவப்பட்ட முதிரை மரத்தின் பலகைகள் அடுக்கப்பட்டு தறையப்பட்டுக் …

62: புரவி அரசன் : 02

உயம்பவின் விழிகளில் மினுங்கிய சினம் செங்கருவிழிகளென அழல் கொண்டிருந்தது. லாமக தன் பொற்சிறகுகளை அம்புச் சிதறலென உலுப்பி உயம்பவை நோக்கிச் சொல்லற்று நின்றது. உயம்ப மெல்லக் கனைத்து அமர்ந்தபடியே குரலை நாணேற்றியது போல் பேசத் தொடங்கியது. “விண்புரவி அரசரே. இன்றுடன் உங்கள் ஆதிக்கம் முடிவடைய வேண்டும். புரவி நெறியெனச் சொல்லப்படுபவை மந்திரச் சுனையில் கலந்த நஞ்சு எனக் கண்டேன். பாதாளப் புரவிகள் தாம் விழையும் போது எங்கும் செல்லும் உரிமை …

61: புரவி அரசன்

அசல பெருங்கூம்பு மலையெனக் கண் முன் எழுந்து நின்ற சர்க்கரீஸ் கூடத்தை நோக்கி நின்றான். சுபல நிரந்தரமானது என்பது போன்ற அவனது திறந்த வாயுடன் கூம்பின் ஓவியங்களையும் அதில் வரையப்பட்டிருந்த அதிசய உயிரிகளையும் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். விக்கிரம அங்கே எருமைகளின் தினவுடன் சுற்றிச் சுழன்று பணி செய்து கொண்டிருந்த காப்பிரிகளையும் யவனர்களையும் அவர்களது கைதேர் நுட்பங்களையும் வியந்தபடியிருந்தான். அசலவை நெருங்கிய சுபல மந்தணம் உரைப்பவன் போன்ற குரலில் “உள்ளே …

60: பாடு மீன்கள்

அறியாத போது சிந்தும் கண்ணீர் ஆயிரம் மடங்கு சிறகுகள் கொண்டவை. அவை மேனியை மிதத்தி அகத்தை உருக்கி திரவச்சிறகுகள் பூண்கின்றன. காலில்லாக் கண்ணீர் கன்னத்தில் நடக்கின்றது. விழியில்லா அந் நீர் விழிமயக்கு அளிக்கிறது. கண்ணீரின் மொழி ஒற்றைச் சொல்லால் ஆனது. அச்சொல் வைரத்தின் பட்டைகளெனத் திசைக்குள் திசையவிழ்ந்து பொருள் கொள்கின்றன. இன்பத்தின் நாவுகள் சிரசற்றவை. நாவு மட்டுமே ஓர் உடலென அமைந்தவை. நாவின் நரம்புகளில் இன்பமென்பது அனைத்துச் சுவைகளையும் கொண்டது. …

59: காய விழைஞன் : 02

பித்தர் விழிதிறந்து நோக்கிய போது சலனமற்ற நீர்ப்பரப்பில் ஓடும் ஒளிச்சில்லுகளைக் கண்டேன். சினமென அமைந்த உவகை அவரிடம் சுவறியிருந்தது. பெண்கள் கூந்தலில் நறுமணமென எண்ணிக் கொண்டேன். அலைந்து அலைந்து என் அகம் அவரைக் கண்ட பின்னர் அடங்கியிருந்தது. நோயில் காறிய கடைசி எச்சிலென என் வசவுகளையும் துப்பிய பின்னர் சொல்லென என்னில் எதுவும் எஞ்சியிருக்கவில்லை. வடுவென எண்ணிய தேகத்தின் நாற்றம் பழகியிருந்தது. ஆயிரமாயிரம் கொடுமைகள் புரிந்தவனின் விந்தின் அணு நான். …

58: காய விழைஞன்

“நான் அஞ்சுவது என் தாகத்திற்கு மட்டுமே” என்றான் ஓசையிலான். “நீ சொல்லிய சொற்கள் எங்கோ எவரோ சொல்லிக் கொண்டிருக்கும் நீண்ட பாடலின் சிறு சிரங்கையளவு கொண்டவை. அவை வாழ்வை அறிந்து விலகியவர்களுக்கானது. உனது நாவுக்குச் சுவையே பழகவில்லை. நீ எங்கனம் சிவத்தை எண்ண முடியும். அறிக இளையோனே. தாகமென்பது மானுடருக்கு அளிக்கப்பட்டத்தில் தலையாயது. எதன் பொருட்டும் தாகம் கொண்டவரே புடவியை இயக்கும் விசைச் சுழற்சி. அலைந்து பரிமாறிக்கொண்டிருக்கும் பண்பாடுகளின் கயிற்றுத் …

57: நூறு தேனீக்கள் : 02

புரவியின் ஆண்குறி சளசளக்க அதை வாயிலிட்டுக் குதப்பினாள் சுகுமாரி. பராக்கிரம தன் குறியில் அவள் வாய் உமிகிறது என எண்ணிக் கொண்டான். உடல் மெய்ப்புக் கொண்டு வியர்வை நழுவத் தொடங்கியது. புரவி தாங்காத வேகத்தில் அவள் வாயில் குறியை நுழைத்து எடுத்தது. விழிநீர் கசிந்த சுகுமாரியின் வாயில் குதிரை விந்தைக் கொட்டியது. அவள் விந்தைத் தன் முலைகளில் குழைத்து புரவிக் காலில் நின்ற பெண்களை அழைத்து உறிஞ்சிக் குடிக்க வைத்தாள். …

56: நூறு தேனீக்கள்

பராக்கிரம வீர தன் கழலில் கட்டியிருந்த கரும்புண்ணை நோக்கியபடி அன்ன சத்திரத்தின் அருகில் நின்று கொண்டிருந்த போது உச்சிவெயிலின் கனற்கட்டியொன்று தன் கழலில் துடிக்கிறதென எண்ணினான். தன் தோள்களை அழுத்தி நரம்புகளை இறுக்கிக் குருதியை உந்திய போது கழலுள் குருதி சுழன்றோடும் வேகம் இதமாயிருந்தது. அன்ன சத்திரம் நிரம்பி வழிந்து கொண்டு கூச்சலும் வசவுமாய் அன்னமும் கறியுமெனக் குழைந்தது. வாழையிலைகளும் தேக்கிலைகளும் குவிக்கப்பட்டிருந்த கழிவுத்தொட்டியின் அருகே அத்திரிகளும் காளைகளும் நிற்கவைக்கப்பட்டிருந்தன. …

55: அத்திரிச் சாம்பல் : 02

“அம்புகளால் எய்தெறிந்த புயற் காற்றென அக்கையின் பக்கச் சிறகு வேல் முனையை நெருங்கி பருந்து ஒற்றைச் சிறகால் கொல்வேல் முனையை அணைப்பதைப் போல் குவிந்தது. பின்னிருந்து வந்த வேழப்படை அக்கையின் பின்னர் ஒருங்கியது. உக்கிரமான போர் இருளில் சுடர்களின் நெளிவுகளெனத் தோன்ற வெட்டுண்டும் அம்புபட்டும் குற்றுயிராய்க் கிடந்தவர்கள் வேழக் கால்களிலும் புரவி மிதிகளிலும் அலறுமோசை கூடியது. தீப்பந்தங்கள் எரித்தபடி இருபுறமும் வீரர்கள் உற்சாகக் கூச்சல்களுடன் போரிட்டனர். அசல மாபெருந்தேரின் அச்சென …

54: அத்திரிச் சாம்பல்

“துயரை தெய்வத்துக்குச் சூட்டுவதன் மூலம் தங்களில் ஒருவரென தெய்வத்தை மானுடர் கீழிறக்குகிறார்கள் பெருந் தளபதி” என்றார் முதுதேரோட்டி அரும்ப முல்லர். சத்தகன் அவரை நோக்கிப் புன்னகைத்து விட்டு “துயரா. அது போர்க்களத்தில் ஒரு ஆயுதம் மட்டுமேயல்லவா. துயரென்பது எதிரிகள் நம்மீது பாய்ச்சும் சக்தி வாய்ந்த ஆயுதம் என்றல்லவா நினைத்து வந்தேன்” எனச் சொல்லிவிட்டு உரக்கச் சிரித்தான். அவன் பின்னே நூறு அத்திரிகள் வண்டில்களை இழுத்துக் கொண்டு மங்கலப் பொருட்களுடன் வந்தன. …