53: ஐம்புதல்வர்

“எண்ணுந் தோறும் நழுவும் ஒன்று கலையில் அமைந்திருக்கிறது இளையவரே. ஆன்மீகத்திலும் அவ்வண்ணமே. ஞானம் அடைய எண்ணியிருப்பதும் கூட ஒரு தடையாக அமையலாம். வழிகள் பிரிந்து ஆயிரம் திரிகளாய் ஞானப் பாதை சுடர்களுக்காகக் காத்திருக்கிறது. ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு வழியை அறிவிக்கிறது. ஞானமென்பது புடவியை வெல்வதல்ல. தன்னை வெல்வது மட்டுமே ஆகும். தன்னைத் தான் வெல்லும் புடவியெனவும் சொல்லிக் கொள்ளலாம். அதில் வென்றமைபவர் ஒரேகணத்தில் மலரெனவும் வாளெனவும் தோன்றக் கூடியவர். என்னுடைய …

52: திசையிலான்: 03

அனல் முகத்தோன் வீற்றிருந்த ககனத்தின் கீழ் நத்தையலைகள் அடித்த சிறுகடலிலிருந்து கொற்றனின் இருகால் பிடித்துக் களிமணலால் இழுத்துச் சென்றார் கம்பளி வைரவச் சித்தர். அவன் மூர்ச்சையடைந்து தேகம் சுவாசத்தின் கலமென மட்டுமே எஞ்ச அவரிழுப்புக்குப் பின் சென்றான். பேருருவரான கம்பளிச் சித்தர் சிறு காளையொன்றை எரியூட்ட இழுத்துச் செல்கிறார் என நோக்கிய வண்டிலோட்டிகளும் குடிகளும் கடலில் மலரள்ளிப் பெய்தபடி ஈசனே ஈசனே என நாவுச்சரிக்க வணங்கிச் சென்றனர். தொலைவில் ஒலிக்கூட்டடென …

51: திசையிலான்: 02

கிழக்கின் கீழ்த்திசையில் கழலில் குலுங்கும் சிலம்புடன் உவகையின் நடுக்குடன் ஒரு கழல் மணலின் கன்னம் பிளந்து செதுக்கப்பட்டிருந்தது. கொற்றன் தன் விழிகளால் துழாவி அக்கால் ஒரு பெண்ணினுடையதெனக் கண்டான். கழல் நெளிவில் அமைந்த மயக்கை நோக்கி நின்று விரல்கள் மலர்க்கன்றுகளென மண்ணை உந்தியெழும் பாவனையை உற்று வரிகளிடை மீண்டான். அனல் கீழ்க்கிழக்கை நோக்கி கரும்புகையென நீண்டது. அன்னையின் கழலே போற்றி என் அப்பனின் அணங்கே போற்றிசொப்பனம் மீறியவள் போற்றிசக்தியே அனலே …

50: திசையிலான்

பட்டினத்தின் முகவாயில் கடந்த பெருங்கூட்டமொன்றிற்கிடையில் இரு கருங்காளைகள் பூட்டிய வண்டிலில் சிகை காற்றில் தீவிலகலெனப் பறக்கக் கொற்றன் எழுந்து நின்றான். விசும்பிடை உதித்துக் கதிரினைச் சூடி மண்ணளையும் சிறுகுழவியென அந்தரத்தை ஆட்டிடும் ஆதவன் மைந்தனென அவன் மேனியெழில் தோற்றிற்று. கூட்டத்திலிருந்த இளம் பெண்கள் கலகலத்து நகைத்தபடி கொற்றனின் அழகுடலை விழிகளால் மொய்த்தனர். அவன் அங்கிலா வெளியில் அலைப்புற்ற பித்தனின் சிலையென உறைந்து நின்றான். சிறுகடலில் சவமெனக் கிடந்த சிறுதுண்டில் எரிந்து …

49: ஆடி மயில்

திருதிகா தோழிகளுடன் மாற்றுடை அணிந்து தன்னைக் குடிகள் அறியாத வண்ணம் உருமாற்றிக் கொண்டாள். மன்றுக்குச் செல்லும் பெருவீதியால் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்த ஆயிரக்கணக்கானவர்களின் வண்ண பேதங்களை நோக்கிக் களிச்சிரிப்பாடினர்கள் தோழியர். திருதிகா ஒவ்வொன்றையும் தொட்டு எடுத்து நோக்கினாள். ஒவ்வொரு ஆடியிலும் தன்னை உற்றாள். ஒவ்வொரு குழவியிலும் அதன் விழிகளையும் விளையாட்டுகளையும் நோக்கினாள். அவர்களின் கால்களிலும் கரங்களிலும் துள்ளியமையும் நடனத்தை புன்சிரிப்புடன் வாங்கிக் கொண்டாள். கருவண்ணக் குழந்தைகள் தேவர்களென நின்றாடின. மாந்தளிரும் …

48: புரவிக் கால்

மகாசேனன் கருநிறப் புரவியின் குளம்படிகள் மண்ணை உந்தி விசை கொண்டு கடற்கரையின் வெண்மணலை உழுது செல்லுவதை நோக்கியபடி கடிவாளத்தைப் பற்றியிருந்தான். இளஞ் சூரியன் கடலிலிருந்து எழுந்து பொன் நாணயமென உயர்ந்து கொண்டிருந்தான். காகங்கள் கரைந்து எழுப்பும் ஒலிகளால் கலங்களும் தெப்பங்களும் அசைபவை போல கரைக்கடலில் ஆடியபடியிருந்தன. தென்னைகளின் தோகைகள் காற்றில் விரிந்தும் தாழ்ந்தும் கரையை விசிறின. பரதவக் குடிகளுடன் ஏராளமான பிற குடியினரும் கலந்து கரையெங்கும் களிக்கூச்சல்கள் எழுந்தன. கள்ளும் …

47: மாகதா : 02

மடாலயத்தில் உணவு சமைக்கும் வாசனை எழுந்து புகையின் இன்மணம் காற்றில் வீசிக் கொண்டிருந்தது. மாகதா இளம் பாணனின் மெல்லுடலை நோக்கியபடியிருந்தார். அவனுள் சுழிக்கும் உடலசைவுகள் நிரந்தரம் என்பது போல் தோன்றியது. இளையவர்களிடம் தோன்றும் மிதப்பிற்கும் கனவுகளுக்கும் அப்பால் துயர் கொண்டிருப்பவன். துயரை அனுபவிப்பவர்களை விடச் சொற்களால் அறியும் நுண்கரங்கள் கொண்டவர்களின் துயர் ஆயிரமாயிரமாய் பெருகுவது. சொற்கள் எண்ணிக் கலையும் மேகங்களென தோன்றுவது. பின் எங்கிருந்தோ ஒரு காற்றின் திசையில் அதை …

46: மாகதா

“உங்கள் சொற்கள் எதன் பொருட்டு எழும் பாணரே” என அமைதியில் எழும் நதியலையென ஒலித்த குரலில் கேட்டார் மகாசோதி. நீண்டு தடித்த பேரரச மரத்தில் நலுங்கிக் கொண்ட ஆயிரமாயிரம் இலைகளின் தளும்பல்களின் கீழ் பனையோலையால் இழைக்கப்பட்ட நீள் பாயில் ஊழ்கத்தில் உடலமைத்து அமர்ந்திருந்தார். அவர் விழிகளில் ஒரு குறுஞ்சிரிப்பு நித்திய கல்யாணி மலர்களை இளம் பாணனுக்கு நினைவூட்டியது. காற்று தேகத்தை உரசி அமைதி அமைதியென ஒலிப்பது போல் கேட்டது. அவரின் …

45: சிம்ம நிழல்

நெடிய மூங்கில் கழிகளால் தூணிடப்பட்டு பழுத்த பனையோலைகளால் சீராகக் கூரையிடப்பட்ட சத்திரமொன்றில் இளவெயில் தன் ஒளிக்கரங்களை நீட்டியிருந்தது. இடையிலிருந்த சாளரங்களால் சிறு ஒளித்தூண்கள் சத்திரத்தின் உள்ளே விழுந்து கொண்டிருந்தன. வீதியில் பெருகிய குடிகளின் காலடிகளால் விம்மியெழுந்த புழுதியின் தூசுகள் அவ்வொளித் தூண்களில் பரவி ஒளித்தூசென மின்னின. புரவிகளின் கனைப்பொலிகளும் அவை கால்மாற்றிக் கொண்டு நிற்கும் ஓசைகளும் எழுந்தன. நிரையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வண்டில்களில் இருந்த காளைகளின் கொம்புகளில் கட்டியிருந்த சலங்கைகள் …

44: ஓயா மழை : 02

“மழைப் பொழிவு இருட்டில் வைரத் துளிகளென எங்கள் மீது கொட்டிக் கொண்டிருந்தது. மேனி மயங்கிக் கிடந்த என்னைத் தன்னிரு கரங்களில் இளங் கன்றை ஏந்துவது போல் தூக்கிக் கொண்டார். கருவறையின் முன்முக மண்டபத்தில் சில அகல்கள் தழலாடின. எனது விழிகள் பாதி சரிந்து தூங்கின. என்னை ஏணையில் வளர்த்துபவர் போல கற்தரையிலிருந்த அன்னையின் பழைய செவ்வாடைகளின் மேல் வளர்த்தினார். தேகம் குளிரால் விறைத்து நடுங்கிக் கொண்டிருந்தது. சிறு பொதி மூடையிலிருந்து …