மூப்பரின் உளி
இதுவரை பிறந்தவர்க்கும் இனிப் பிறக்கவிருப்பவருக்கும் நெஞ்சினுள் ஒரு சின்னஞ்சிறு கருங்கல் அளிக்கப்பட்டிருக்கிறது. அது கூடியுருண்ட மாபெரும் கருங்கல் மலையின் சிறு பொடி. அதனை மலையென ஆக்கும் பணி கவிஞர்களுடையது. அக்கூட்டின் இழைவை உளிமுனையால் ஒட்டும் மொழி எவ்வளவு நுட்பமோ அதேயளவு அவ்வளவு துல்லியமான இணைவும் கொள்ள வேண்டியது. துல்லியம் என்பதிரு கண்ணினுட் பார்வை. க. மோகனரங்கனின் கவிதை மொழி அவ்வுளிகளில் கூர்தக்கது. அவரின் கவிதைப் பிராகரத்தின் அகற்சுடர்கள் கூட உளியாலானவையோ …
