124: ஆழிசூடிகை : 04
“துயருற்ற நாளொன்றில் குயவன் வனைந்த குடம் போலக் கிடப்பது என் அகம்” என உதடுகளுக்குள் சொற்களை மடித்து மடித்துச் சொன்னார் வேறுகாடார். இருதியாள் அச்சொற்களைக் கேட்டவளெனத் தன் பெருமேனியை தூணில் சாய்த்து கால்களைத் திண்ணையில் தூங்க வைத்தபடி அமர்ந்திருந்தாள். இளமழை எப்பிசிறுமின்றி வந்தது போலவே நின்று பொழிந்து கொண்டிருந்தது. அத்திரிகள் கூட்டமொன்று வண்டில்களுடன் உரசிக் கொண்டும் மரங்களினடியில் சாம்பலும் மண் வண்ணமும் கொண்ட மேனிகள் நனைந்து ஊறிக் கொண்டிருந்தன. போர்வையில் …
