114: ஒருகணம் : 03
பெருந்தோல்வியைச் சந்தித்து உச்சங்களிலிருந்து வீழ்பவனை விட ஆயிரஞ் சின்னஞ் சிறு தோல்விகளால் வீழ்பவன் கொள்வதே மகத்தான அவமதிப்பும் தீமையின் விழைவும் என எண்ணினான் அசல. நீண்டு விரிந்திருந்த குளத்தில் இளமழை தாமரைகள் மேல் பொழிந்து கொண்டிருந்தது தன் பல்லாயிரஞ் சின்னஞ் சிறு தோல்விகளை. வனத்திலிருந்து பெயர்ந்து வந்த காற்று குளத்தின் கரையில் ஒற்றை இளமரமென நின்று கொண்டிருந்தவனின் குழல்களை மோதி விழுத்திச் சென்றது. ஆறாத அகக்காயங்களே ஒருவனுக்குத் தன் ஆழமான …
