105: மடப்பெண்ணே : 03
“தாகத்தை அறியவும் கற்கவும் பயிலவும் மேலும் கற்று முற்றறிந்து அமையவும் இயலாதவர் விடாயை அனுபவிக்கவும் தீர்த்துக் கொள்ளவும் நீங்கவும் இயலாது. மானுடர் தங்கள் விழைவுகளின் ஊற்றுமுகங்களை கண்டடைதலே பாதையினைத் தேரும் முதல் நிகழ்வு. அடுத்து அதைச் சொல்லில் கற்க வேண்டும். மானுட விழைவுகள் அனைத்தைக் குறித்தும் சொற்களும் தத்துவங்களும் காவியங்களும் எழுந்திருக்கின்றன. அவை அறியாத கடலில் சிறுபடகில் செல்லும் தனித்த விடாய் கொண்டோருக்கான விண்மீன் வரைபடங்கள். அவற்றைக் கொண்டு ஆழியையும் …
