27: நீத்தல் உரைத்தது
களத்தில் காயம்பட்டு தம் உயிரின் அடிவேரைப் பற்றியபடி முனகிக்கொண்டிருந்த சிலரை அம்புக் குவியல்களுக்குள்ளிருந்து மீட்டு உதவுநர் படை மருந்துவக் குழுவிடம் கையளித்துக் கொண்டிருந்தது. சிங்கைப் படையின் அம்புப் பெருக்கு ஓய்ந்திருந்தது. கோட்டைக்குள் போர் நகர்ந்து அங்கிருந்து ஒரே கூண்டுக்குள் அடைக்கப்பட்ட கொல்விலங்குகளின் ஒன்றையொன்று பின்னியுண்ணும் ஒலிகள் எழுந்து கொண்டிருந்தன. இளையவர்களின் இறந்த உடல்களை எடுத்து மரவுரிகளால் சுற்றி தேர்களில் குவித்து அடுக்கத் தொடங்கினர் சில வீரர்கள். பன்னிருவரே சிற்றுயிருடன் மருந்துவக் …
