31: உலகளந்தோன்
நாகலிங்கப் பூ மரத்திலிருந்து ஒரு மலர் காற்றில் அசைந்து அசைந்து மகவைத் தொடும் அன்னையின் கரமென ஆடற் சித்தரின் வெண்குழலை வருடிக் கொண்டிருந்தது. அகலை நோக்கும் விழியென அப்பூவின் சந்தம் ஆடற் சித்தரை ஊழ்கத்தில் மேலும் மேலுமென கூர்க்கச் செய்தது. இமைகளுக்குள் காலம் ஏழு மடிப்புகள் கொண்ட கடலெனத் தோன்றியது. பின் பதின்னான்கு மடிப்புகள் கொண்ட நீளரவு. பின் ஒவ்வொன்றும் ஏழாலான வடிவங்களின் உயிர்களின் மடிப்புகளென உருவாகிக் கொண்டிருந்தது. அவற்றின் …
