126: மழைக்குயில் : 02

நீலன் உருவிய வாளுடன் சங்கறுத்து விழுவது போல சூர்ப்பனகரின் கனவு விரிந்தது. நீலன் மன்றில் உருகம் ஏந்தி என்னை அன்னையர் எவரேனும் கொல்க என இரந்து நிற்பவன் போல எழுந்தபோது தனது அனிச்சையாய் கால்கள் எழுந்து நிற்பதை தானே தனக்குள் வியப்புடன் நோக்கினார். அதுவொரு நாடகமில்லை என்பதை அவர் அகமறியும். அங்கனம் எவரேனும் அன்னையர் “கொடு உன் வாளை. இன்றோடு செத்தொழி” என வாளைப் பற்றி எழுந்திருந்தால் அவன் மெய்யாகவே …

ஒற்றைக்கோடை

கவிஞரும் நண்பருமான ஆதி பார்த்திபனின் கவிதைத் தொகுதி தாயதி பதிப்பக வெளியீடாக ஒற்றைக் கோடை எனும் தலைப்பில் தொகுக்கப்பட்டிருக்கின்றது. அதன் வெளியீட்டு நிகழ்வு தொடர்பான அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. சில மாதங்களுக்கு முன்னர் அவரைப் பற்றி எழுதிய குறிப்பொன்றை மீளவும் மகிழ்ச்சியுடன் பகிர்கிறேன். தொடர்ந்து செயல் புரிக! * யுத்தம் முடிவடைந்ததற்குப் பின்னர் அதன் சாம்பலிலும் தணலிலும் இருந்து எழுந்த முதல் தலைமுறைக் கவிஞர்கள் எதிர்கொண்டது இரண்டு வகையான அடிப்படைகளிலான வாழ்வை, …

125: மழைக்குயில்

சூர்ப்பனகர் தனது இல்லத்தின் மேல்முகப்பில் தாழ்வாக இடப்பட்டிருந்த மூங்கில் கழிகளாலான கூரையின் கீழ் நின்று பட்டினத்தை நோக்கிக் கொண்டிருந்தார். இளமழையின் புகைத்தூவிகள் அந்தரத்திலிருந்து மண்ணுக்கும் மரங்களுக்கும் பருப்பொருட்களனைத்துக்குமென வீழ்வதை தன் சிவப்பேறிய விழிகளால் துழாவினார். அவரது நடை பருத்த வயிற்றின் நடனத்திற்கெனக் கால்கள் கொண்டது போல அதையே சிரசென்று எண்ணியது போல வேடிக்கையூட்டியது. சூர்ப்பனகர் தனக்குத் தானே தற்பகடி சொல்லிச் சிரிப்பவர். அவை பிறருக்குக் கேட்டுவிடக் கூடாதென்ற கூருளம் கொண்டவரும் …

124: ஆழிசூடிகை : 04

“துயருற்ற நாளொன்றில் குயவன் வனைந்த குடம் போலக் கிடப்பது என் அகம்” என உதடுகளுக்குள் சொற்களை மடித்து மடித்துச் சொன்னார் வேறுகாடார். இருதியாள் அச்சொற்களைக் கேட்டவளெனத் தன் பெருமேனியை தூணில் சாய்த்து கால்களைத் திண்ணையில் தூங்க வைத்தபடி அமர்ந்திருந்தாள். இளமழை எப்பிசிறுமின்றி வந்தது போலவே நின்று பொழிந்து கொண்டிருந்தது. அத்திரிகள் கூட்டமொன்று வண்டில்களுடன் உரசிக் கொண்டும் மரங்களினடியில் சாம்பலும் மண் வண்ணமும் கொண்ட மேனிகள் நனைந்து ஊறிக் கொண்டிருந்தன. போர்வையில் …

123: ஆழிசூடிகை : 03

இருதியாள் தனது நினைவுகளின் ஆழிக்கரையில் ஓடிய நண்டுகளைத் துரத்தும் வேறுகாடாரைக் கண்டாள். போர் முனை நீங்கிக் கரை வந்த போது மேனியில் களைப்பு குளிரலைகள் ஆற்றும் வெய்யிலையென இளக்கிக் கொண்டிருந்தது. வேறுகாடார் அப்பொழுது தான் திடலுக்கு வந்த இளஞ்சிறுவனென துடிப்புக் கொண்டிருந்தார். தமிழ்ச் செல்வனுடன் உரையாடிய பின்னர் திமிலர் மருத்து நிலைக்கு மாற்றப்பட்டிருக்கும் செய்தியுடன் இருதியாளிடம் வந்தார். இருதியாளின் வாடிவீட்டில் ஒற்றைத் தீப்பந்தம் மினுங்கிச் சுடர்ந்தது. பனையோலைகளால் வேயப்பட்டு மூங்கில் …

122: ஆழிசூடிகை : 02

ஆழிவெண் சங்குகளின் பளபளப்புடன் மேனியுருகிக் கருஞ்சங்கென மினுக்குக் கொண்டிருந்த இருதியாளை இமை சிதறாது நோக்கியிருந்த வேறுகாடார் அவளின் அருகில் சென்று சலனமின்றி கடலை நோக்கினார். கடல் மாபெரும் கரும் போர்வையால் மூடப்பட்டு அதனுள் எஞ்சிய ஒளிகொண்டு நோக்குபவர் எனத் தன்னை உணர்ந்தார். போர்வைக்குள் என எண்ணமெழுந்த போது அவரது பெருமேனியில் மெய்ப்புல்கள் எழுந்தன. நிலத்தினடியில் ஓடும் நீர் ஒவ்வொரு வேரையும் தொட்டு எழும் புற்காடென அவர் தன்னுள் ஓடும் குருதியை …

121: ஆழிசூடிகை

தன் மெய்யாற்றல் எதுவென அறியாதவர் பெருங்களங்களை வெல்ல இயலாது. எத்தனை சிறியவையாய் இருந்தாலும் அறிந்து கணித்துப் பெருக்கிக் கொண்ட விசையே பெருவுருவென்றாகும். அதுவே களம் வெல்லும் படைக்கலம். வேறுகாடார் அகன்ற மார்பில் வெண்பாசியென மயிர்கள் இளமழைச் சாரலால் நனைந்திருக்க கூகை விழிகளால் இருதியாளை நோக்கியிருந்தார். இருவரும் புலிப்படையிலிருந்து சிலகாதங்கள் விலகியிருக்கத் தொடங்கி ஆறு பருவங்கள் பெயர்ந்து விட்டன. ஒரு அணுக்க உறவெனும் வகையில் நீலரிடமும் புலிப்படையினருடனும் அவர்கள் அணுகியமைவது உண்டு. …

120: சிலைப் புன்னகை : 02

விருபாசிகையிலிருந்து எழுந்த நறுமணத்தின் தீந்தீற்றலொன்று வளியை நிறைத்து கனவில் பெய்து நாசி நுழைந்தது. வாசனையென்பது மானுடரை ஆழ இழுத்துக் கொள்ளும் விந்தை என எண்ணினான் பொன்னன். அம்மயக்கு வாசனை அவனைக் கேள்விகளின்றி அவளை நோக்கச் செய்தது. நோக்கில் அவள் எளிய அருள் கொண்டிருந்தாள். விழைவும் விலகலும் அற்ற சக இருப்பென நீடித்தாள். காற்றை உந்தி வெளியில் அந்தரத்தில் மிதக்கும் யட்சியொருத்தியென எழுந்தாள். மேனியின் அழகு கூர்ந்து வதனம் என்றாகி நின்றாள். …

119: சிலைப் புன்னகை

தானென்பவள் பலிகொள்ளும் தெய்வம் என்பது போல சாய்மஞ்சத்தில் அமர்ந்து தீயிலையின் வெண்நரைப் புகைச்சுருள்களை ஊதிக் கொண்டிருந்தாள் விருபாசிகை. உதட்டில் ஈரலிப்பின் தகதகப்பு மினுங்கியது. செவ்வட்டையின் மயக்கு தேகத்தில் மழைநீரென. பொன்னன் முத்தினியின் குழலை இருபுரியாக்கி பின்னிக் கொண்டிருந்தான். அவளது தேகம் அவன் முன் ஊழ்கத்திலென அமைந்திருந்தது. காலை உணவின் பின் தேகம் மீண்டும் முழுமை கொண்டு நிறைவு பெற்றிருப்பதை ஒவ்வொருவரும் எண்ணிக் கொண்டனர். எவ்வளவு பசித்திருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் உண்ணும் …

118: ஒரு தீச்செந்தழல்

“எத்திசை செல்வதென எண்ணாது திசை தோறும் பொழிந்திட்ட பெருமழைப் பெருக்கிலும் ஆழ்சுனை ஊற்றுகளின் கனவுகளிலும் உருவேறி ஓடிய மகத்தான ஆறொன்று எத்திசையும் திறக்காத பாழிருளில் தான் எங்கு பிரிகிறேன். எங்கு அழிகிறேன். இருக்கிறேனா. உலர்ந்தேனா என அறியாது திகைத்து நின்ற போது பாதாளம் உடைந்து ஆயிரமாயிரம் அடுக்குகள் கீழ்வெளியே திறக்க ககனங்கள் விதிர்விதிர்க்க இடியிடித்து இறங்கும் பல்லாயிரம் பெருமுரசுகளின் கார்வையுடன் ஒலித்தெழுந்த மாபெரும் வீழ்ச்சியே என் காவியம்” என்றான் இளம் …