78: காலத்தூண்

விண்மீன்களின் முதல் விழிகள் ஒரு இமைப்பிற்குள் பல்லாயிரமென வானைச் சுடர்த்தன. விண்யாழி ஒவ்வொரு விண்மீனும் விழிப்பதைக் குழந்தைக் கண்களால் நோக்குபவளென வியப்புக் கொண்டிருந்தாள். முதல் நாள் களிவிழவை செருக்களத்தில் வித்தான மாவீரர்கள் விண்மீன்களாய் விழிகொண்டு நோக்குவர் என்பது குடி நம்பிக்கை. அன்று வானில் கோடிகோடியாய் விண்மீன்கள் துள்ளிப் பெருகும் என்பதை சிற்றிளமை முதலே அறிவாள் விண்யாழி. நீலழகனை நேர்நோக்கிக் காண்பதென்பது ஒவ்வொரு புலி வீரருக்கும் மீண்டும் மண்ணில் பிறப்பதென்றாகும் என்பது …

77: வட்ட மலர்

ஆழ்பிலவென நெடுநீட்டகம் கொண்டிருக்கும் அரசு சூழ்தல் கற்றவர்களின் உதட்டில் ஓயாது ஒளிரும் புன்னகைக்கு எப்பொருளுமில்லையெனப் பொன்னன் எண்ணினான். தமிழ்ச்செல்வன் பிடிகோலில் இடக்கரத்தை ஊன்றி அடிவேர் சாய்ந்து நிற்கும் தென்னையென அமைச்சர்களின் தேரில் வளைந்திருந்தார். அவரது முகத்தின் புன்னகையை நோக்கிய குடிகள் அவை தான் அந்த மந்திரப் புன்னகையெனக் கூவினர். அவர் தான் புன்னகைக்கும் பெருமதியாளர் எனச் சொல்லி மந்தணக் குரலில் வாழ்த்தினர். அரசு சூழ்தலில் புகழ்பெற்றவர்கள் அணியும் இரண்டு அணிகலன்களில் …

76: களித் தோழியர்

“களிப்பெருக்கையே மானுடர் முதன்மையாக விழைகின்றனர் என்பது பொய் இளம் பாணனே. இங்கு நீ காணுகின்ற ஒவ்வொருவரும் அடையும் களிக்கு அதன் மரக்கிளைகளையும் கனிகளையும் பூக்களையும் இலைகளையும் விட ஆயிரக்கணான துயர்கள் மண்ணினுள் ஆழத்து ஆழங் காண வேர்கொண்டு பரவி நிற்கின்றன. இருளின்றி ஒளியை அறியமுடியாதைப் போலத் துக்கங்களின்றி மகிழ்வையும் அறிய முடியாது. இளமையின் களி போதமற்றது. தன் செயல்களின் பொருளை அறியாதது. ஆகவே தூயதென்று ஆகக் கூடியது. முதிர்ந்து வருபவரின் …

75: பவனி

அமைச்சர்கள் முன்னிரையில் ஒருங்கியதும் சிறு முரசுகள் மும்முறை எழுந்தணைந்து விம்மின. சூரியன் பொற்தேரில் வந்தமைந்து தழல் முகம் எழுந்தது. ஒவ்வொரு வளைவும் புடைப்பும் சிற்பங்களும் மலர்ச்சரங்களும் ஒளித்தழல் சூடின. சூர்ப்பனகர் செருமியபோது தமிழ்ச்செல்வன் குனிந்து “அனைத்தும் ஒருங்கி விட்டன பேரமைச்சரே. இன்னும் சிலகணங்களில் அரசரும் அரசியாரும் எழுவர். இளவரசர்களும் தளபதிகளும் பின் தேர்களில் ஒருங்கிவிட்டனர்” என்றார். தமிழ்ச்செல்வனின் உதட்டில் புன்னகை இரு இதழ்களெனச் சுடர் கொண்டிருந்தது. மானுடர் கொள்ளும் மெய்யான …

74: அணியறை : 02

பேராடி அதிகனவெனத் தன்னைத் தான் விரித்துக் கொள்ளும் மாதோகையில் வண்ணங்களினாலும் மினுக்குகளாலும் சூழ்ந்தெழுந்திருந்தது. பதும்மை நோக்கிழக்காமல் உற்று நிற்பதை அடியாழத்தில் ஓர் பனிப்புல்லின் நுனித்தீண்டலென உணர்ந்தாள் விருபாசிகை. நலுங்கியவளின் முகம் சிரித்து உருகுவது போல் விரிந்தது. பதும்மை போதம் மீண்டு மெல்லக் காலடிகள் கொண்டு மென்பஞ்சு அடிகளால் நடக்கும் பூனைக் குட்டியென விருபாசிகைக்குப் பின்னால் நெருங்கிப் பேராடியில் ஒளிரும் அவளின் தேகத்தை நோக்கினாள். விருபாசிகையின் கூந்தல் சடைநாகமென நீண்டிருந்தது. வெண் …

73: அணியறை

தேர்ச்சில் கழல்வது போல் உருண்டு ஆழியின் மேலே தங்கக் கனியெனத் தனக்குள் தான் உருகிக் கொண்டிருந்தது பரிதி. கடற் பறவைகள் கூட்டமாக ஒலியெழுப்பிக் கொண்டு கரை நண்டுகளைக் கொத்திப் பறந்து கொண்டிருந்தன. மேகங்களில் பரிதி சிந்திய வண்ணங்கள் ஊறி ஊறி ஒவ்வொரு குவையும் அதிகனவில் தோன்றும் மலர்ச்சோலைகளெனக் களி கொண்டிருந்தன. கரைக்கடலில் மிதந்த சிறுபடகுகளில் ஆடவரும் பெண்டிரும் கள் மயக்கில் அட்டைகள் போல் ஒருவர் மேல் ஒருவர் புரண்டு ஊர்ந்து …

72: மலைமேல் பனி : 02

“நீர்க்குமிழியின் காற்றை வெளியிருக்கும் காற்று வந்து தொட்டுத் திறப்பது எங்கென அறியாமுடியாததைப் போல் முதுவிறலியின் சொற்கள் எனது அகத்திற்குள் நுழைந்தன. அவரின் சொற்கள் காதலின் நீர்மையின் பலவடிவ பேதங்களை உருமாற்றி உருமாற்றி உண்டாக்கின. நெருப்பில் உறையும் நீரென்ற சொல்லிலிருந்து அவர் எழுந்தார். விழிகள் தீக்கங்குளென உறைந்த இளையவர் கூட்டம் அவரை நோக்கியிருக்க முதுபாணர் ஒருவர் இருகரம் தலைகூப்பி ‘அன்னையே’ என விழிநீர் பொங்கி வரக் கூவினார். முது விறலியின் அருகிருந்த …

71: மலைமேல் பனி

ஒருவரை ஒருவர் முழுதுள்ளத்தால் ஒருமுறையாவது முழுதுவெறுக்காத காதலர்கள் புடவியில் இல்லை என எண்ணிக் கொண்டான் மாதுளன். எல்லாக் காதலின் விதையிலும் எதனாலோ தீர்மானிக்கப்பட்ட ஒருதுமிக் கசப்பும் அளிக்கப்படுவது காதல்நெறியென யாரோ குடிமயக்கில் சிற்பக் கூடத்தில் உளறிய சொற்கள் அவனை ஈக்களென வந்தறைந்து கொண்டிருந்தன. நிலவையின் அருகே நின்றிருந்த பெய்யினியின் கூந்தல் காற்றில் வளைந்து எழுந்து நூல்களென ஆடியமைந்தன. சிற்பங்களை அவனது விரல்கள் நுணுகும் தோறும் அவன் அகத்தை அவனே குடைகிறான் …

70: நிலவறை

மதுச்சாலையின் மேற்தளத்தில் எருவீரன் முழுமயக்கில் வயிறுபிரட்டிக் கிடக்கும் முதலை போல் புரண்டு கிடந்தான். விழவின் களியில் மதியம் தொடக்கம் இடைவிடாது மதுவருந்தும் போட்டியில் கீர்த்த மந்திரரும் அவனும் சளைக்காது மூநாழிகை குவளை குவளையாய் யவன மதுவை உண்டு தலைசுற்றி மயங்கி ஒருவரின் மேல் ஒருவர் சாய்ந்து இருகுற்றிகள் போல் முட்டிக்கொண்டிருந்தனர். மதுச்சாலையைக் கவனிப்பதில் பயனில்லை என்ற நிலை உண்டானது. அவரவர் விரும்பிய வண்ணம் கள்ளிலும் மதுவிலும் குளித்தாடினர். முதுவிறலிகளின் முலைகளில் …

69: எட்டுத்திக்கும்

நிலவை முன்முகப்பிற்கு வந்து நின்று சடங்கு நிலைகளை நோக்கினாள். பொற்தேரினைச் சுற்றி ஆயிரக்கணக்கான சிறு புட்கள் பறப்பன போல் பணியாட்களும் காவலர்களும் முதுசிற்பிகளும் படைவீரர்களும் அரண்மனைப் பெண்டிரும் இடத்திற்கு இடம் தாவிக் கொண்டிருந்தனர். வானில் சுற்றிக்கொண்டிருந்த புறாக்கள் தாம் உன்னை விட்டு விலகுவதில்லை எனச் சொல்வது போல் தடதடவெனச் சிறகொலியெழுப்பின. நிலவை முழுதணி பூண்டிருந்தாள். சிரசில் மாணிக்கம் பதித்த தூங்குமணி நுதற் கண்ணெனத் திறந்திருந்தது. கூந்தலில் மென்நரைகள் மலர்ச்சரங்களில் பின்னப்பட்டு …