தற்பிறப்பு

சிறுவயதில் வீட்டில் ஏதாவது குழப்படிகள் செய்துவிட்டால் அப்பா அடிப்பார். விதிமுறைகள் கொண்ட நியாயமான அடிகள் விழும். நான் அடிக்குப் பயந்து வீட்டைச் சுற்றி ஓடுவதுண்டு, வீடு போதவில்லையென்றால் பக்கத்து வீடுகளுக்கும் சென்று ஓடுவதுண்டு. எங்களது வீட்டுக்குப் பக்கத்து வளவு ஒரு வாழைத் தோட்டம். சிப்பாலன் ஐயா என்பவருக்குச் சொந்தமானது. விரதகாலங்களில் தலைவாழை இலை வெட்டவும் லீவு காலங்களில் ஆமி – இயக்கம் விளையாடவும் அத்தோட்டத்தில் திரிவதுண்டு. நேர்த்தியாகச் சதுரஞ் சதுரமாக …

தங்கமே குட்டியே

நான் எளிமையான சொற்களைஅடுக்கிக் கொண்டிருந்த போதுநான் ஏற்கெனவே கட்டிய மாளிகைகளின் நிழல்எதிர்ப்பக்கமாய் விழத்தொடங்கி விட்டது பெருக்கெடுத்து மதகுடைத்த சொல்லாறு அடங்கிஅமைதியான கன்னமெனபிசிறற்று ஓடியது நான் மெளனத்துக்கு அஞ்சிக் கூப்பாடு போட்டஎன் சொற்களேஉங்களை நம்பியது என் தவறுதான்நீங்கள் என்னுடையவை அல்லநீங்களும் அல்ல ஒவ்வொரு நிரையாய் அடுக்கி வைக்கப்பட்டகார்ட்ஸ் கோபுரத்தின் இறுதி அட்டையைஎடுக்கத் திரும்பிய போதுஏதோவொன்றுஅதை வீழ்த்தியிருக்கிறது. அக்கணத்தின் விடுபடலுக்குவாழ்த்துக்கள்என் தங்கமே. அழகிய தெத்துப்பல்லெனபழைய கவிதைகளின் ஒரு பல்இந்தக் கவிதைக்குள்ளும் முளைத்திருக்கிறது. உனக்கும் …

குறிஞ்சியின் தலைவி

குறுந்தொகையின் காட்சிகளுக்குள் நேரே சென்று வைத்துவிடக்கூடிய அனாரின் கவிதையிது. குறுந்தொகைக் கவிதைகளுக்குச் சில பின்னணிக் காட்சிகளை எழுதி அவற்றை அதனோடு பொருத்தி வாசிக்கும் முறையையே எழுதி வருகிறேன். அதில் நவீன கவிதைகள் சங்ககாலக் கவிதைகளைச் சென்று மீளும் வரிகள் அலாதியான வாசிப்பை உருவாக்குகிறது. அது ஒரு நெடுங் கயிற்றை இங்கிருந்து இழுத்துப் பார்த்து அந்தப் பக்கம் இருப்பவரின் உணர்வை அறிந்து உள்ளூரத் தோன்றும் மகிழ்ச்சி. வேலன் வெறியாட்டு நிகழும் போதோ …

பணிவும் அகங்காரமும்

என்னிடமிருப்பது ஈடில்லாத ஒரு அகங்காரம். இன்னும் ஒன்றுமே குறிப்பிடும் படி நீ எழுதவில்லை உனக்கெதுக்கு இந்த ஆணவம். நீ உன் அகங்காரத்தாலேயே அழியப் போகிறாய். பணிதல் ஒரு நற்குணம் போன்ற பல பரிந்துரைகளை அண்மைக்காலமாக வழக்கத்தை விட அதிகமாகவே நண்பர்கள் சொல்லி வருகிறார்கள். உனது நன்மைக்குத் தான் சொல்கிறேன். பலரும் இப்படி அபிப்பிராயப்படுகிறார்கள் என்று சற்றுத் தயங்கிய முறையில் சொல்பவர்களும் உண்டு. நான் எவ்வளவு அகங்காரம் கொண்டவனோ அதேயளவு பணிவும் …

என் தனிமை யானே

அதுவொரு முன்பனிக் காலத்து நள்ளிரவு, உலகு ஒரு நீர்த்திரையென ஆகி ஆகாயத்தின் தாழ்கள் திறந்து கொண்டு பெருமழை துள்ளிக் குதித்து மண்ணிறங்குகிறது. அதிர்ந்து அதிர்ந்து இதயம் நோகுமளவுக்கு இடி கொட்டுகிறது. மின்னல்கள் நீள்முடி கொண்டவளின் கழுவிய முகத்தில் பிரிந்திறங்கும் மயிர்ப்பீலிகளென விரிந்து பரந்தது. காற்றின் ஈரம் உடலுள் நுழைந்து உடலால் வெளியேறிக் குளிர்கிறது. தேகம் தன்னுள் எஞ்சிய உயிர்ச்சூட்டைத் தனக்குத் தானே மூட்டிக் கொள்கிறது. இம்மழைப் பெருக்கில் தன் குடிலில் …

கடைசிச் சில்லறையையும் செலவழித்தல்

ஓர் எழுத்தாளனாக உங்களுடைய ஒரு நாள் எப்படி இருக்கும்? நான் எழுத்தாளனின்றிப் பிறிதொன்றில்லை என அகமுணர்தல் ஏன்? என சில நண்பர்கள் கேட்டிருந்தார்கள். ஒரு நாளை எப்படி ஆக்கிக் கொள்கிறேன் என்பதே அவர்களது பலகேள்விகளின் சாராம்சம். ஒரு நாவலாசிரியரோ சிறுகதை எழுத்தாளரோ ஓர் எழுத்தாளராக அன்றாடம் எழுதுவதென்பது அவர்களது வடிவம் சார்ந்த தேவை. ஒரு கவிஞன் எதற்கு இவ்வளவு எழுத வேண்டும் அல்லது அன்றாடம் எழுதித் தான் ஆக வேண்டுமா? …

முத்தித்தழுவி

ஒரு வாழ்கதையின் உச்ச தருணத்தைக் கவிதைக்குள் கதையென நிகழ்த்த இயலும். சபரிநாதனின் இக்கவிதை ஒரு கடலோடியின் கதை. அதனுள் ஒரு கவிஞனான சபரி சென்று தொடக்கூடிய எல்லை என்ன என்பது தான் என்னை ஈர்ப்பது. ஒரு தருணத்தைச் சுழலும் அலைக்குள் மூழ்குபவனைப் போல மூழ்கவிட்டு அலைகடந்த பின் எழுந்து நிற்க வைப்பதைப் போன்ற மயக்கின் நொடிகளை மொழிக்குள் உண்டாக்குவதே கவிஞர் ஒரு கதையைக் கவிதையாக நிகழ்த்தும் பொழுது நிகழ்த்த வேண்டிய …

தீ மல்லிக் கொத்தே!

தன் சிறுவெண் பற்களைத் துலக்கிய பின் ஈறு தெரியச் சிரித்துக் காட்டும் குழந்தையைப் போல ரஜிதாவின் சொற்கள் விரிந்திருக்கின்றன. இவ்விரு கவிதைகளின் வரிகளும் குழந்தையின் அளந்தெடுத்த பல்முத்துக்கள். சொல்லிணைவுகளில் உள்ள பித்துநிலை கவிதையை வைர ஊசிகளென மினுக்குகின்றது. பொற்சிலைகருவிருந்த மலை படியளந்தாய் நீல இரவின்பனிப்படிவு துளிரும் அன்றிலும்தீரத் தீர செவ்விதழ் பொழி சாலை. * பற்றியவான் திரி சுண்டுவிழிப் பிரம்புபாய வேட்டைநாய்உறுமும் சிரை. எரிஎன்னை தீ மல்லிக் கொத்தே! ரஜிதா

சுகந்தமும் வியர்வையும்

எப்பொழுதாவது பனிக்கட்டி வலுவுடன் நீர்க்கல் பெருக்கென இம்மண்ணில் மழை விழுவதுண்டு. அம்மழை எந்த இடைவெளியிலும் கோடை வெளிவரக் காத்திருக்கும் புழுக்கத்தின் மேல் குளிர்க்கால்களால் நடந்து இவ்வெளியை ஈரம் பரவவிடும். வெண்ணொளிச் சாளரமென வானத்தைத் திறந்து அடைக்கும் மின்னல்கள் துலங்கும். காற்று அளைந்து எடுத்து வரும் மலர்களின் சுகந்தத்தில் நிகழும் கூடலில் பெருகும் வியர்வையை விடச் சுவையானதை உடலறியுமா! மோசிகீரனாரின் கவிதையொன்றில் பெயர்த்தனென் முயங்க யான்வியர்த்தனென் என்றனள்,இனி அறிந்தேன் அது துனி …

செயற்களம் புகுவோருக்கு: 03

அரசியல் வெளியை ஆக்குதல் ஈழத்தில் ஆயுத விடுதலைப் போராட்டம் 2009 இல் முடிவுக்கு வந்த பின்னர் முகிழ்த்த முதல் தலைமுறை செயற்பாட்டாளர்கள் எதிர்கொண்ட வெளியென்பது யுத்தத்தில் வெற்றி பெற்ற சிங்கள பவுத்த பேரினவாதக் கருத்துகளை முதலீடாக்கிய அரசின் தொடர்ந்த கண்காணிப்பையே. எங்கு கூட்டமென்றாலும் போராட்டம் என்றாலும் களச் செயல்களென்றாலும் முதலில் வரும் விருந்தினர்கள் அரச புலனாய்வாளர்களே. செயற்படுபவர்கள் அரசிற்கு எப்பொழுதும் ஆபத்தானவர்கள். அவர்களே சமூகத்தின் முன்னேறிய அரசியல் பிரிவினர் என்பதை …