பேரியற்கையின் குழந்தைகள்
இயற்கையின் இருப்பில் பூமி மானுடருக்கென நிகழ்ந்திருக்கும் அபூர்வம். இப்பொழுது வரை அதுவே உண்மை. நாளை பிரபஞ்சத்தின் இன்னொரு கிளையில் வேறொரு உயிரினம் நம்மிலும் ஆற்றல் மிக்கதாக இருக்கலாம். ஆனால் தற்போதைக்கு பூமியின் ஆற்றல் மிகு உயிரினம் மனிதர்களே. கோடிக்கணக்கான பிற உயிரினங்களுக்கும் வாழிடம் இப்பூமியே. அதன் கருப்பை வினோதமானது. இயற்கையை அறிவியலாகவும் கலையாகவும் அணுகலாம். இரண்டுமே அவசியமான பார்வைகள் என்பது என் எண்ணம். அறிவியல் ஒரு முழுமை நோக்கில் உயிர்களின் …
