கனவுகளின் தெய்வம்

எந்த விடுதலைக்கான மொழியும் கேள்விகளிலிருந்தும் சீற்றங்களிலிருந்துமே அடிப்படையில் எழும். பின்னர் அவ்விடுதலை தன் கனவைத் தானே கண்டாக வேண்டும். ஒரு ஆன்மீக விடுதலை அடிப்படையில், இந்த வாழ்வு எதன் பொருட்டுப் பொருள் கொள்ளத் தக்கது? இதற்கு என்ன மதிப்பு? நான் என்பது என்ன? இவற்றுக்கெல்லாம் என்ன அர்த்தம்? இது போன்ற சீற்றமிகு ஆதாரக் கேள்விகளிலிருந்து உருவாகுவது. சீற்றம் ஒரு தொடக்கம் மட்டுமே. பின்னர் அது தன்னில் கனிய வேண்டும். அனாரின் …

சுய அழிவு

எது கடைசியில்மிக மிக ஆழமான பள்ளத்தாக்கோஅதில் நான் வீழ்வேன் மீண்டும் எழ முடியாதபடிகாயம்பட்ட உடலுடன்கைகள் உயர்த்தி அழைக்க முடியாத தொலைவில் கைவிடப்படுவேன்கால் நுனிகள் அசையமுடியாதபடி தறையப்படுவேன். விழிகள் ஆகாயத்திற்குத் திறந்தபடிதைக்கப்பட்ட இமைகளுடன் கழுகுகள் கொத்திப் பார்வை மறைவதைசூரியன் அப்படி ஒரே ஒருமுறை என்றெய்க்குமாக அஸ்தமிப்பதைப் பார்ப்பேன். பாவங்களின் சாம்பற் தணலில் உடல் வேக. யாரும் கவனிக்காத வகையில் சிறுகச் சிறுகச் சாவேன்ஒரு அழைப்புப் போல அல்லஒரு பாவத்தைப் போல நிராகரிக்கப்படுவேன். …

உடுக்கொலியும் பறையும்

விடுதலைப்போராட்டத்தின் உள்ளோடும் உணர்ச்சிகள் வெளிப்படும் மொழி ஒருவகையில் சன்னதமும் உருவும் கொண்டது. அதற்குத் தன் மொழியை வெகுசன மொழியையும் பைபிளினதும் உரைநடையினதும் கூர்மையான சில இணைவுகளைப் பயன்படுத்தி தனக்கென ஒன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டியிருந்தது. உள்ளூர்த் தன்மையும் பரிசோதனையும் இணையும் வெளியில் நிலாந்தனின் மொழி கருக்கொண்டது. நிலாந்தனது கவிதைகள் பெரும்பாலும் நெடியவை. மனிதர்களுடைய அலைச்சலையும் துயரையும் போலவே. அவரது நெடுங்கவிதைகள் நெடுக உருவேற்றும் மொழிச்சந்தமொன்று நிகழ்ந்தபடியே இருக்கும். அது ஓடும் …

திரிச்சுடர்

யாருடைய சொல்லையும் யாரும் நம்ப முடியாத காலம் வருமென்றுகனவா கண்டது எந்தக் கனவும் கலைந்து விழிப்பது என்றுஅறிந்தா செல்வது ஒளிரும் லாம்பினடியில்குவிகிறது இருள். குவிந்த இருட்டைக் காற்று அசைக்கிறதுஉள்ளெரியும் திரிச்சுடரால். (2024)

ஒரு நிலவுருவில் மூன்று மொழியுடல்கள்

ஜெர்மனி நாட்டின் கலாசார அமைப்பின் பெயர் Gothe institute. ஈழத்தில் பிறந்து அகதியாக அந்த நாட்டுக்குச் சென்று, படித்து, ஜெர்மானிய மொழியில் எழுதும் எழுத்தாளர் செந்தூரன் வரதராஜா. இவரது முதலாவது புத்தகம் பெரும் வரவேற்பையும் அந்நாட்டின் உயர் விருதையும் பெற்றது. அவருடனான கலந்துரையாடல் ஒன்று சமகாலக் கலை, கட்டடக்கலை மற்றும் வடிவமைப்புக்கான ஆவணக் காப்பகத்தில் சில வருடங்களின் முன்னர் நடைபெற்றிருந்தது. அப்போது அவருடன் அறிமுகமாகி நண்பர்களானோம். சில காலங்களின் பின், …

புறமுதுகிடுதல்

விதை குழும செயற்பாட்டாளர்களின் பாலியல் சுரண்டல் குறித்த எதிர்வினையாகவே ஆரம்பித்த உரையாடல் இப்போ வேறு எங்கோ போய் நிற்கிறது. கிரிசாந் கெட்டிக்காரன். அறிவாளியான தன்மீது பாமரர்கள் தொடுக்கும் தாக்குதல் என்பதுபோல திசைதிருப்பி அங்கிருந்து ஜெயமோகன் மறுதலிப்பாக மாற்றி பாலியல் குற்றச்சாட்டுகளை நீர்த்துப்போக செய்திருக்கிறார். சரி, நாம் திரும்ப விசயத்துக்கு வருவோம். சமூகத்தில் சக மனிதர்கள் செய்யும் பிழைகளை, சுரண்டல்களை சுட்டிக்காட்டுவது, கண்டிப்பது, கட்டுரை எழுதுவது ; அதே தம் வாழ்வில் …

சிறு நாவுகளின் தொடுகை

கறையான்கள் தன் எச்சிலால் உண்டாக்கும் புற்றின் மண்ணைத் தொட்டெடுக்கும் ஈரம் பல்லாயிரம் சிறு நாவுகளின் தொடுகை. அதிலிருந்து ஒரு மாபெரும் புற்று உருவாகிறது. அதனுள் பல்லாயிரம் உயிர்கள் வாழும். அது உறைந்து நின்று மண் மேல் சிற்றுயிர்கள் ஆக்கிய மலையென வளரும். ஒரு மொழியில் கவிதை பல்லாயிரம் நாவுகளின் தொடுகையால் ஈரம் கொள்ளும் சொற்களை உறைய வைத்து உண்டாகும் சொல்மலை. அதன் ஒவ்வொரு அமைப்பையும் அங்குள்ள மனிதர்களின் தன்மைகளும் தேர்வுகளுமே …

உருக்கும் நெருப்பின் கண்ணீர்

யுத்தம் நிகழ்ந்து கொண்டிருந்த தொண்ணூறுகளின் பிற்பகுதியில் தனித்து ஒளிரும் குரலொன்று நமது மொழியில் நிகழ்ந்தது. அதுவரையிருந்த மொழியடுக்கினைத் தனது கனவால் வேறொன்றெனத் திரட்டியது. அதிகாரம் கொப்பளிக்கும் இச் சமூகத்தின் மனசாட்சியை சிலுவையிலறைந்தது. எஸ் போஸ் என்கிற சந்திரபோஸ் சுதாகர் தான் அந்த மகத்தான கவிஞர். எஸ்போசின் மொழி ஒரு பழஞ்சுரங்கத்தைப்போன்றது, அதற்குளிருந்து மந்திரம் நிறைந்த வார்த்தைகளை எடுத்துவைத்து ஓர் பிரமாண்டமான வாழ்க்கையை அவர் நம்முன் நிகழ்த்திக்காட்டுகிறார். அவரது கவிதைகளுக்குள் நுழையும் …

ஆசிரியரின் சொற் கேட்டல்

ஒரு பண்பாட்டில் அறிவியக்கம் எதன் வழியாக விரிந்து வளரும்? அதற்கான எல்லைகளை தீர்மானிப்பார்கள் எவர்? எந்தக் காலத்திலும் எந்த மாற்றமும் இன்றிக் கலைகளினாலும் இலக்கியங்களினாலும் அறிவுத் துறைச் சிந்தனையாளர்களினாலுமே பண்பாட்டின் அறிவியக்கம் முன்னகர முடியும். அதற்கான எல்லைகளை மறுவரையறை செய்பவர்கள் அவர்களே. அவர்களின் பங்களிப்பைச் சிந்தனைத் தளம் சார்ந்தே நாங்கள் கவனங்கொள்ள வேண்டும். அவர்கள் வழியாகவே பண்பாடு விரிவடைய முடியும் என்ற தன்னுணர்வு எந்தவொரு பண்பாட்டினதும் ஒவ்வொரு மனிதருக்கும் இருந்தாக …

காலச்சுவடு: கவிதைகள்

மார்ச் மாதக் காலச்சுவடு இதழில் எனது கவிதைகள் வெளியாகியிருக்கின்றன. அட்டைப்படத்தில் எனது பெயரைத் தவறுதலாகக் கிரிஷாந்த் என்று அச்சிட்டுவிட்டார்கள். உள் வடிவமைப்பில் கிரிசாந் என்றே போட்டிருக்கிறார்கள். அட்டைப்படத்தில் அப்படி வெளிவந்தமை, ஒரு தவறு என்று ஆசிரியர் குழு நண்பரொருவர் போனில் அழைத்துப் பேசினார், இதெல்லாம் ஒரு பிரச்சினையா பாஸ் என்று சொன்னேன். கவிதைகளை வாசித்து உங்களது கருத்துகளை அனுப்பி வையுங்கள். பெயரில் என்ன இருக்கிறது என்றல்லவா நமது கவி மூப்பன் …