சூல் கொளல்: 02

இச் சமகாலத்தில், மொழிபெயர்ப்புக் கவிதைகளின் வழியே ஆயுத வழி விடுதலை பற்றிய வாழ்வினை, ஏற்கனவே உலகில் போராடிக்கொண்டிருக்கும் மக்கள் திரளின் கவிதைகள், விடுதலையின் படிமங்களாகத் தமிழுக்குள் கொண்டு வருகின்றன. போராட்டங்களின் நியாயங்களையும் மக்களின் துயரங்களையும் எப்படி மொழியில் நிகழ்த்தலாம் என்பது தமிழுக்குள் வந்து சேர்ந்த பொழுது அதன் சாயல்கள் கொண்ட கவிதை வரிகள் எழுதப்படலாயின. அவை பின்னர் பண்பாட்டில் வேர் கொண்டு தனக்கான படிமங்களை அடைந்தன. உலகெங்கும் அரசின் இராணுவங்கள் …

கனவுச் சொல் : முதற் கடிதம்

இந்தக் கவிதை இன்றுதான் வாசித்தேன்.. ஒரு தனிமையில் இருந்த மனிதன் அனுப்பிவைத்த இசைத் தொகுப்பு.. காமம் சொல்லி .. தோல்வி கண்டது… அப்ப காதலியை நினைச்சு சுயமைதூனம் செய்து எழுதுறான் என்று கூட யோசிச்சன்.. அது ஒரு தோல்வியை அல்லது அடையப்பாடாத இலக்கு நோக்கிய வேதனையா என்று பாத்தன் அதுவும் இல்லை கடைசியில் இடப்பட்ட முத்தங்கள் காதலின் எச்சங்கள் தான்… இது காதலிக்கு அனுப்படால் seductive art என்றும் பாக்க …

சூல் கொளல் : 01

பெருமழை வருவதற்கு முன் மேகம் கனிந்து காற்றில் கூடும் ஈரமென தமிழ்க்கவிதைக்குள் விடுதலை பற்றிய கனவு வந்து சேர்ந்தது. காலனித்துவ ஆட்சி முடிவடைந்து இலங்கை தனி நாடாக ஆவதற்கு முன்னிருந்தே இத் தீவில் சிங்கள, தமிழ் இனத்துவ முரண்பாடுகளுக்கான வரலாறுகள் உயிர்பெற்று இரு சர்ப்பங்களென வளர்ந்தன. காலனித்துவ ஆட்சிக்கெதிரான போக்கிலே சிங்களத் தேசியவாதமும் தமிழ்த்தேசியவாதமும் வளர்ந்து வால் நீண்டிருந்தன. சிங்களமும் பவுத்தமும் அநகாரிக தர்மபாலாவினால் முன்வைக்கப்பட்ட சமநேரத்தில் சைவமும் தமிழும் …

எரியும் நெருப்பும் காற்றில்: 03

அன்னா அக்மதோவா பற்றி நட்சத்திரன் செவ்விந்தியன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் அக்மதோவாவை வாசிக்கும் பொழுது சிவரமணி அக்காவும் புலிகளால் கடத்திக் கொல்லப்பட்ட செல்வி அக்காவும் அவரது காதலரும் நினைவுக்கு வந்ததாக எழுதியிருந்தார். இந்த நினைவிலிருந்து ஒரு பொறி என்னில் ஒட்டியிருந்தது. நீண்ட காலம் கழித்து சிவரமணியின் இறுதிக்கால எழுத்துகளை வாசித்த போது நாம் நமது அன்னாவை இழந்து விட்டோம் என்றே தோன்றுகிறது. மகத்தான கூர்மையும் ஆழுள்ளத்தின் குரலை ஒலிக்கும் …

சூதர்கள், பாணர்கள், கவிஞர்கள்

அறங்களை ஆக்குதலும் காத்தலும் விரித்தலும் அவை வழுவும் போது சுட்டுதலும் கவிதையின் முதற் தொழில். தமிழ்க் குடியின் நெடுவரலாற்றில் கவிஞர்களின் பணி இதுவே. வாழ்க்கைக்கான மேலான கனவுகளை ஆக்கி அளித்தலும் அளிக்கப்பட்ட கனவைக் காத்தலும் சொற்களின் வழியே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஓரு வகையில் மானுட நிகழ்வை அதன் எளிய அன்றாடத் தர்க்கங்களிலிருந்து விடுவித்து இந்த விலங்குக் கூட்டத்தின் மேலான தன்மைகளைப் புனையும் செயல் கலை. எது நேரிடினும் அறத்தின் பொருட்டு …

விடுதலையில் கவிதை

நிலத்திலிருந்து வானென எழுந்த மாபெரும் பழங்காலப் பழுப்பு நிறச் சீலையொன்றில், புள்ளியிலிருந்து, எழுந்து, விரிந்து, பரவி, ஒளிர்ந்து, உதிர்ந்து, வீழும், நிறங்களாலான வரிகளை நான் கற்பனை செய்கிறேன். உதிரமிட்டு நிகழ்ந்த விடுதலைப் போராட்டம் இந்தத் தீவின் ஒவ்வொரு விளிம்பிலும் அலையடித்திருக்கிறது. எத்தனை மகத்தான கனவுகளின் கருப்பை இந்த மண். எத்தனை மகத்தான அழிவின் சாட்சி இந்த மண். ஒரு மண்புழுவின் வால் மிதித்தால் கூட அது சுழன்றசைந்து ஒரு கணம் …

மீளச் சொல்லுதல் : 01

நாம் நிகழும் காலத்தில் வெளிவரும் புதிய கவிதையென்பது ஒரு நீண்ட வரலாற்றின் முனை. அது மானுடக் கனவில் வேர்கொண்டு இன்றைக்கும் எதிர்காலத்திற்குமென விரிந்து கொண்டிருக்கிறது. கடந்த காலம் மிக விரிவான பரப்பு. அதில் ஒரு துண்டை வெட்டி எடுத்து அறிவதென்பது அச் சூழலின் முன்னையும் இன்றையும் இணைப்பது. தமிழ் மக்களின் அரசியல் உரிமைப்போராட்டத்தின் தொடக்க காலத்தில் அதன் கவிதைக் குரல்களாகவும் தனித்த மனத்தினை நோக்கியும் பேசி வந்த கவிஞர்களில் சிலரை …

அரிக்கன்லாம்புச் சூரியன்

எழுந்துவரும் புதிய எழுத்தாளர்கள் இன்று எதிர்கொள்ளும் முதன்மையான சிக்கல்களில் ஒன்று தயக்கம். ஈழத்து இலக்கியச் சூழலில் 2009 க்குப் பின்னர் எழுத வந்த முதற் தலைமுறை எழுத்தாளர்களில் பலர் தங்கள் எழுத்தால், அதன் மீதுள்ள தீராத ஆர்வத்தால் இன்று கவனிக்கப்படுபவர்களாக ஆகியிருக்கிறார்கள். தர்மு பிரசாத், அனோஜன் பாலகிருஷ்ணன், அகரமுதல்வன், யதார்த்தன், ஆதி பார்த்திபன் என்று ஒரு வரிசை உருவாகி வந்திருக்கிறது. நானும் இவர்களின் சமகாலத்தில் இலக்கியத்தில் எழுத வந்தவன். இன்று …

இலை பெய்யும் காலம்

இலை பெய்யும் காலம் எனும் தலைப்பிலான கவிஞர் நேதாமோகன் அவர்களின் கவிதைத் தொகுப்பு வெளியீடு நெடுந்தீவில் 04. 01. 2024, காலை 10 மணிக்கு நிகழ இருக்கிறது. தாயதி பதிப்பகத்தின் 27 ஆவது வெளியீடாக இக் கவிதைத் தொகுப்பு நேதா மோகனின் துணிச்சல்காரன் தொகுப்பிலிருந்து வளர்ச்சியையும் அகலிப்பையும் கொண்டிருக்கிறது. ஒரு சிறு தீவின் முருகைக் கற்பாறைகளும் பஞ்சுருட்டான் குருவிகளும் பனங்காடையும் இக் கவிதைகளில் உருக்கொள்கின்றன. குமுதினியென்ற ஒரு படகிற்கு யுத்ததின் …

காற்சட்டைக் கலாசாரம்

அண்மையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குள் காற்சட்டையுடன் நுழைந்தவர்களை வாயில் காப்பாளர்கள் மறித்து உட்செல்லவிடாமல் தடுத்தமை சமூக வலைத்தளங்களிலும் வெகுசன வெளியிலும் சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது. இதன் விளைவான உரையாடல்களில் உட்செல்ல முயன்ற தரப்பினரை மலினமாகச் சித்தரித்து தரக்குறைவாக ஏசி பல்வேறு கருத்துகள் பரிமாறப்படுகின்றன. இந்தப் பிரச்சினைக்குள் நுழைவதற்கு முன் யாழ்ப்பாண மனநிலை ஆடை தொடர்பான வரையறைகளில் கடந்த காலத்தில் எவ்விதம் நடந்து கொண்டது, அதன் பொதுப்புத்தி எப்படியானது என்பதை விளங்கிக் கொள்வோம். சம்பவம் …