43: ஓயா மழை
காலை பரபரவென விடிந்து கொண்டிருப்பதை அங்கினி நோக்கியபடி உவகையில் முகம் விரிய நின்றாள். விழவுக் காலங்களில் உளம் கசப்பை அடைய முயலும் போதெல்லாம் தேன்வழுகும் பாறையில் நிற்கும் தேரையெனத் தன்னை உணர்வாள். வழுக்கிச் சென்று காமத்தின் வாயில் விழுந்து கொள்வாள். உடலை விழைவின் கலமென ஆக்குவதை அவள் தன் அத்தைகளிடமிருந்து கற்றாள். பட்டினத்தின் பரத்தையர் வீதிகளில் அங்கினியினுடையது கடைசி இல்லம். நாகதேவிக் கோவிலின் காட்டு விளிம்பில் அமைந்திருக்கிறது. அவளது இல்லத்தின் …
