கருணையின் முன் நீட்டப்படும் கை

தும்பி சிறுவர் இதழை ஈழத்தமிழர்கள் ஏன் வாங்க வேண்டும்? இப்பொழுது அவ்விதழ் நிறுத்தப்படும் அறிவிப்பு வெளியாகியிருக்கும் வேளையில் ஈழத்தமிழர்கள் எவ்விதம் அவர்களின் செயல்களுக்குக் கைகொடுக்கலாம்? அவர்களது இவ்விடர் நேரத்தில் நாம் ஏன் உடனிருக்க வேண்டும்? ஒரு தமிழர் எதற்காகத் தும்பி இதழை வாங்க வேண்டும்? ‘ஆகப் பெரிய கனவு’ கட்டுரையைத் தொடர்ந்து இத்தகைய கேள்விகளை என்னிடம் பல நண்பர்கள் கேட்டிருந்தனர். அதனை ஒரு நல்விளைவெனவே கொள்கிறேன். பலருடைய ஆர்வமும் என்னையும் …

கல்லெழும் விதை: ஒரு உரை

தும்பி இதழின் நிறுத்தம் பற்றிய செய்தி இரவு முழுவதும் மனதிற்குச் சோர்வளித்துக் கொண்டேயிருந்தது. இச்சோர்வு எனக்கு அவசியமற்றது போல் தோன்றினாலும் உள்ளத்தின் சக்கரங்கள் உருளவில்லை. அவை திரும்பத் திரும்ப ஒரே பூவில் சுற்றும் தும்பியென வட்டமடித்துக் கொண்டிருந்தது. இச்சோர்வை உதறியாக வேண்டும். எவ்வகையிலும் மனம் ஏதாவதொரு இழப்பை, துயரை பெரிதென ஆக்கிக் கொண்டு சோர்வை விழையக் கூடும். இவ்வகைச் சுழல்களுக்குள் நான் பலதடவைகள் சிக்கியிருக்கிறேன். ஒரு உந்தல் கிளர்ந்தால் போதுமான …

ஆகப் பெரிய கனவு

குழந்தைகளுக்கான உலகை உருவாக்கும் கைகளே இப்புவியில் மகத்தான எடையின்மை கொண்டவை. குழந்தைகளுக்காகக் காணும் கனவுகளே தூய்மையின் பொற்சிறகணிந்தவை. குழந்தைகளின் நிலையெண்ணிக் கண்ணீர் சிந்தும் விழிகளே தெய்வம் உறையும் அகல்கள். தும்பி சிறார் இதழ் தனது 81 ஆவது இதழுடன் பொருளாதாரச் சுமையால் தனது பறத்தலை நிறுத்துவதாகக் கண்ட அறிவிப்புத் தான் இதுவரையான வாழ்நாளில் நான் வாசித்த ஆகத் துயரார்ந்த செய்தி. தும்பியைப் போல் ஒரு இதழ் தமிழில் நிகழ்ந்தமை நம் …

கண்ணீருடன் ஒரு பறத்தல்

தும்பி அச்சு இதழை நிறைவுசெய்கிறோம்… பத்து வருடங்களுக்கு முன்பு, பாரம்பரிய நெல் விதைகளைப் பெண்களிடம் ஒப்படைக்கும் நெல் திருவிழா திருவண்ணாமலையில் நிகழ்ந்தது. ஆயிரத்துக்கும் அதிகமான கிராமப் பெண்கள் அந்நிகழ்வில் கலந்துகொண்டனர். நல்லதிர்வுகள் நிறைந்த நாள் அது. அந்நாளில், நம் நிலத்தின் பலநூறுவகை பாரம்பரிய நெல்வகைகளை மீட்டெடுக்கத் தன் வாழ்வை ஒப்படைத்த ‘நெல்தந்தை’ வெங்கடாசலம் அய்யாவுக்கும், சிறார் இலக்கியத்தின் முன்னோடி ஆளுமை வாண்டுமாமா அவர்களுக்கும் முகம் விருதளித்து கெளரவிக்க எண்ணியிருந்தோம். உடல்நோய்மை …

காமம் செப்பாது

உலகை ஒரு தட்டையான மாபெரும் புல்வெளியென உருவகித்துக் கொண்டால் அதில் கோடிக்கணக்கான புரவிகள் ஒன்றுரசி ஒன்றுமேவிப் பாய்ந்து நகர்வது போல் காமத்தின் பயில்வுகள் நகர்ந்து கொண்டிருகின்றன. காமம் மானுட விசைகளில் அடிப்படையானது. அதன் நுண்மைகள், உச்சங்கள், பிறழ்வுகள், அதீதங்கள், மரபுகள், நெறிகள், தவறுகள், சரிகள் தான் மானுட உறவுகளைத் தீர்மானிக்கும் அடிப்படையான கூறு. அதே நேரம் காமம், காமத்திற்கு அப்பாலான வாழ்வின் விசைகளையும் நோக்கி நகர வேண்டியது. காமத்தின் எல்லைகளுக்கு …

குழந்தையின் திகைவிழிகள்

இயற்கையுடன் கவிஞரொருவர் நிற்கும் ஒளிப்படங்கள் எப்போதும் என்னை ஈர்ப்பது, அவரும் அவ் இயற்கையின் பகுதியென உணர்வதன் அறிதலளிக்கும் மகிழ்வு அது. மரத்தடியில் நிற்குமொருவர் அதன் பூவோ காயோ கனியோ வேரோ விழுதோ ஆகுபவர். நீர்வீழ்ச்சியின் அருகில் நிற்பவர் அதன் பெரும் வீழ்வோ உறையும் கற்பாறைகளோ கரையில் எழுந்து நிற்கும் சிறுபுல்லோ ஆகுபவர். கடலுக்கு முன் நிற்கும் கவிஞர் கடலின் அலையெனவோ மினுங்கும் நீலமெனவோ சூரியன் ஒளிந்து கொள்ளும் விரிதடாகமெனவோ ஆகுபவர். …